விதிமுறைகள்

நேசக்கரம் உறுப்பினர்கள் ஏனையவர்களுக்கான விதிமுறைகள் :-

1) நேசக்கரம் உறுப்பினர்கள் தங்கள் சக உறுப்பினர்களுடனான நேசக்கரத் திட்டங்கள் சம்பந்தப்படாத கருத்து வேறுபாடுகளோ அல்லது வேறு ஏதும் விமர்சனங்கள் இருப்
பின் அதற்கு நேசக்கர நிருவாகம் பொறுப்பாளிகளாகமாட்டாது.

2) நேசக்கரம் அமைப்பின் செயற்பாடுகளிலிருந்து ஒதுங்கிக் கொள்ள அல்லது நிறுத்திக் கொள்ள விரும்பும் உறுப்பினர் நேசக்கரம் அமைப்பில் இருந்து விலகுவதற்கான கையொப்பமிட்ட கடிதம் ஒன்றினை நேசக்கரம் அமைப்பின் தலைவரிடம் கையளிக்க வேண்டும்.

3) நேசக்கரம் அமைப்பிலிருந்து ஒதுங்கிக் கொண்ட அல்லது செயற்பாடுகளை நிறுத்திக் கொண்ட ஒருவர் நேசக்கரம் அமைப்பின் பெயரால் வேறு எவ்வித செயற்பாடுகளிலும் ஈடுபடமுடியாது. அப்படி ஈடுபட்டால் நேசக்கரம் அமைப்பு அவர்கள் மீதான சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.விலகிக்கொண்ட அல்லது ஒதுங்கிக் கொண்ட நபர் மீளவும் நேசக்கரம் செயற்பாடுகளிலோ அல்லது அமைப்பின் செயற்குழுவுடனோ இணைத்துக் கொள்ளப்படமாட்டார்.

4) நேசக்கரம் அமைப்பின் செயற்பாடுகள் மீது அதன் உறுப்பினர் அல்லது தனிநபர்கள் ஏதாவது குற்றச்சாட்டினை முன்வைத்தால் முன்வைத்த குற்றச்சாட்டினை நிரூபிப்பதற்காக நேசக்கரம் அமைப்பு 14 நாட்கள் கால அவகாசம் வழங்கும். அதன்படி 14 நாட்களிற்குள் குற்றச்சாட்டினை சம்பந்தப்பட்ட நபர் நிரூபிக்கத்தவறும்பட்சத்தில் நேசக்கரம் நிருவாகம் அவர் மீது சட்ட நடவடிக்கையை எடுக்கலாம்.

5) நேசக்கரம் அமைப்பின் உறுப்பினர்கள் அனைவரினதும் நேசக்கரம் ஊடான அல்லது நேசக்கரத்தின் பெயரால் செய்யப்படும் செயற்பாடுகள் அனைத்தும் சக உறுப்பினர்கள் மற்றும் நிருவாகத்தினரிற்கும் தெரியப்படுத்தப்பட்ட பகிரங்கமான செயற்பாடுகளாகவே அமையேவண்டும்.

நேசக்கரம் செய்திகள் வெளியிடுவோர் கவனத்துக்கு :-

1) நேசக்கரத்தில் வெளியாகும் செய்திகள் படங்கள் கடிதங்களை வெளியிடுவோர் செய்திகள் கடிதங்கள் படங்கள் எடுக்கப்பட்ட மூலத்தை இணைத்தே வெளியிட வேண்டும்.
2) மூலம் குறிப்பிடாமல் நேசக்கரம் செய்திகள் படங்கள் கடிதங்களின் உரிமத்தை வெட்டி ஒட்டும் ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

– நேசக்கரம் நிருவாகக்குழுவினர் –