எம்மைப்பற்றி

நேசக்கரம் உருவாகியது ஏன் ?
இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்காகவும் ஆதரவற்ற பெற்றோரை இழந்த சிறுவர்கள் ஆதரவற்ற பெண்களுக்கான வாழ்வாதார நம்பிக்கைகளை ஏற்படுத்து முகமாகவும் ஆரம்பிக்கப்பட்டது.

நேசக்கரம் எவ்வாறு ஆதரவற்றவர்களை இனங்காண்கிறது ?
நேசக்கரத்தின் செயற்பாட்டாளர்கள் ஆதரவு தேவைப்படுவோரை கிராமங்கள் ரீதியாகவும் மாவட்ட ரீதியாகவும் நேரில் சென்று பார்வையிட்டு செயற்குழுவிற்கு அறிக்கைகளாக விபரங்கள் கொடுப்பார்கள். அறிக்கைகள் தெரிவிக்கும் தரவுகள் அடிப்படையில் வாழ்வாதார மற்றும் கல்வித் தேவைகளுக்கான கொடுப்பனவுகள் வழங்கப்படுகிறது.
போர் நடைபெற்ற காலங்களில் நேரடிச்சந்திப்புக்களுக்கான வாய்ப்புகள் அற்றிருந்தமையால் புனர்வாழ்வுக்கழகம் மற்றும் பெண்கள் புனர்வாழ்வு நிறுவனம் ஊடாக பெரும்பான்மையான உதவிகள் சென்றடைந்தது.
2009மேமாதத்தின் பின்னர் இயன்றவரை நேரடியாக செயற்பாட்டளார்கள் சென்று பார்வையிட்ட பின்னரே உதவிகள் வழங்கப்படுகிறது.

நிதிப்பங்களிப்பு எவ்வாறு பெறப்படுகிறது ? நேசக்கரத்திற்குப் பங்களிப்பு வழங்குவோர் யார் ?
2009 மேமாதம் வரையும் நேசக்கரம் நண்பர்கள் வட்டத்தினரின் பங்களிப்பில் அவரவரது நிலமைக்கு ஏற்ப செய்யப்பட்ட பங்களிப்பினால் ஆதரவுக்கரம் நீட்டப்பட்டு வந்தது. 2009வரையும் தமிழ் நண்பர்களை மட்டும் உள்வாங்கி பங்களிப்புகளைப் பெற்ற நேசக்கரம் தற்போது வெளிநாட்டவர்களுடனும் தனது தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளது.

பங்களிப்புகள் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது ?
தற்போது நேசக்கரம் சுயதொழில் ஊக்குவிப்பு மற்றும் சிறுவர்களின் மேம்மாடு தொடர்பாகவே அதிக கவனம் செலுத்துகிறது. சிறு சிறு தொழில் செய்வதற்கான முதலீடுகளாக சிறுகைத்தொழில்களுக்கான ஊக்குவிப்பு உபகரணங்கள் மற்றும் சிறுவர்களின் கல்வி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களின் கல்விக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.
பங்களிப்பின் பயன்களும் நண்பர்கள் வட்டத்திற்குள் மட்டுமே வெளிப்படுத்தப்பட்டு வந்தது. பயனாளர்கள் மற்றும் பயன்படுத்தப்பட்ட விபரம் தொடர்பான ஆவணங்கள் தற்போதும் பங்களிப்போருக்கு மட்டுமே தெரிவிக்கப்படுகிறது.
2009இன் பின்னர் புதிய புதிய நண்பர்கள் உள்வாங்கப்பட்டு உதவிகள் பெறப்படுகிறது.

பயன்பாட்டின் நம்பகத்தன்மையை எப்படி அறிவது ?
நேசக்கரம் ஒவ்வொரு திட்டமாக நடைமுறைப்படுத்தியவற்றையும் நடைமுறைப்படுத்துபவற்றையும் நேசக்கரம் இணையத்தளம் ஊடாக எல்லோரின் பார்வைக்கும் வெளியிட்டுள்ளோம். பங்களிப்போருக்கு சகலவிதமாக ஆதாரங்களும் தனித்தனியாக வழங்கப்படுகிறது.

நேசக்கரம் செயற்பாட்டாளர்களை தொடர்பு கொள்வது எப்படி ?
மின்னஞ்சல் மற்றும் ஸ்கைப்தொலைபேசி தொடர்பு முகவரி ஊடாக தொடர்பு கொள்ளலாம்.

நேசக்கரத்திற்கு பங்களிப்புகளை வழங்க விரும்பினால் எவ்வாறு பங்களிப்பது ?
பேபால் ஊடாகவும் மற்றும் வங்கிக் கணக்கு ஊடாகவும் பங்களிக்கலாம்.