2010 தை முதல் பங்குனி வரையான காலண்டுக் கணக்கறிக்கை

நேசக்கரம் 2010 ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரையில் தாயக உறவுகளிற்காக புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட காலாண்டிற்கான உதவி விபரஅறிக்கை.

2010 தைமாதம் முதல் பங்குனி வரை கணக்கறிக்கை

1)யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த இடம்பெயர்ந்த வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளையோருக்கான சத்துணவு உடைகள் மற்றும் அடிப்படை கல்வி வசதி பெற்றோர் – 318 பேர்.

2)பெற்றோரை இழந்து ஆதரவற்ற சிறுவர்களிற்காக உயர்கல்வி பெறும் வரையிலான தொடர்கல்வி வசதி மற்றும் பாடசாலைச் சீருடைகள் வசதிகள் ஏற்படுத்தப்பட்டோர் 101 பேர்.

3)உயர்கல்வியினைத் தொடர முடியாது (பல்கலைக்கழகப்படிப்பு) பொருளாதார வசதியற்றிருந்த மாணவர்களிற்காக தொடர்கல்வி உதவி 19 மாணவர்கள்.

4)இறுதி யுத்தத்தின்போது பாதிக்கப்பட்டு மருத்துவ வசதிகளின்றி தவித்தவர்கள் மற்றும் கர்ப்பிணி தாய்மார்களிற்கான மருத்துவ உதவிகள் 19 பேர்.

மேற்படி அனைத்து உதவிகளும் நேசக்கரம் அமைப்பின் ஊடாக புலம்பெயர் தேசத்து மக்களிடமிருந்து தாயகத்து உறவுகளிற்காகக் கொண்டு சென்று சேர்க்கப்பட்டவையாகும்.

இனிவரும் காலங்களிலும் தொடர்ச்சியாகத் தாயகத்து உறவுகளிற்கு உதவுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன்

– நேசக்கரம் நிருவாகம் –