நேசக்கரம் இரண்டாம் காலாண்டிற்கான (சித்திரை,வைகாசி,ஆனி) மாதங்களிற்கான கணக்கறிக்கை.

நேசக்கரம் அமைப்பினால் உதவித் திட்டங்களினால் இரண்டாம் காலாண்டில் பயனடைந்தோரது விபரங்கள் , மற்றும் உதவியோரது விபரங்கள்.

நேசக்கரம் 2010 சித்திரை,வைகாசி,ஆனி வரையான காலாண்டு கணக்கறிக்கை

1)கல்விகற்கும் மாணவர்கள் , பயனடைந்தோர் 137 மாணவர்கள்

வழங்கப்பட்ட உதவிகள் கல்வி உபகரணங்கள் உடைகள் சீருடைகள் சப்பாத்துக்கள் சத்துணவு என்பன வழங்கப்பட்ட பாடசாலைகள்.

மணற்காடு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை , பருத்தித் துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் , வவுனியா காமினி மகாவித்தியாலயம்.

2)குடும்பத்தில் தாய் தந்தை இருவரையும் இழந்த சிறார்கள் பயனடைவோர் 60 சிறார்கள்.இவர்களிற்கான உணவு உடை பாடசாலைச் செலவு பாடசாலைக்கான போக்குவரத்து செலவுகள் அனைத்தும் தொடர்ச்சியாக வழங்கப்படுகின்றது.

3)யுத்தத்தினால் பாதிக்கப்பட்டு உடல் அவயவங்களை இழந்து தொழில் செய்ய முடியாத நிலையில் உள்ள குடும்பங்கள் பயன்பெறுவோர் 52 குடும்பங்கள்.

இக்குடும்பங்களில் பலர் விழிப்புலன் அற்றவர்களாகவும் , உடல் அவயவங்களை இழந்தவர்களாகவும் இருக்கின்றனர். இவர்களிற்கான தொடர்ச்சியான மாதாந்தக் கொடுப்பனவுகளாக அவர்களின் குடும்ப அங்கத்தவர்கள் தொகையின் அடிப்படையில் 5 ஆயிரம் தொடக்கம் 12 ஆயிரம் ரூபாய்வரை வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் மற்றும் வெளிநாட்டவர்களால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களிற்குக் கிடைக்கும்படி வழிவகைகள் செய்யப்பட்டுள்ளது.

4)கணவனை இழந்த குடும்பப் பெண்கள் பயன் பெறுவோர் 30 பெண்கள்.

கணவனை இழந்த குடும்பப் பெண்களில் தொழில் செய்யமுடியாத அளவிற்கு உடல் மற்றும் மனநிலையில் பாதிக்கப்பட்ட பெண்கள் 17 பேரிற்கு மாதாந்த கொடுப்பனவுகளும் , சுயதொழில் செய்யத் தெரிந்த 13 பெண்களிற்கான சுயதொழில் வாய்ப்பிற்கான தையல் இயந்திரங்கள் , வீட்டுத்தோட்ட வசதிகள், மற்றும் கால்நடை வளர்ப்பிற்கான உதவிகளும் வழங்கப்பட்டுள்ளதுடன் இக்குடும்பங்களில் 9 குடும்பங்களில் அவர்கள் குழந்தைகளிற்கான கல்வி வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

5) உயர்கல்விகற்கும் மாணவர்கள் பயன்பெறுவோர் 35 மாணவர்கள்.

பல்கலைக்கழகப் படிப்பினைத் தொடர முடியாத வசதியற்ற 30 மாணவர்களிற்கு அவர்களது கல்வியை முடிக்கும் வரை மாதாந்தம் 5 ஆயிரம் ரூபாய்கள் கொடுப்பனவாக வழங்கப்படுகின்றது. அவர்களது மேலதிக விபரங்கள் கணக்கறிக்கையில் இணைக்கப்பட்டுள்ளது.

6) வைத்திய உதவிகள் பயனடைந்தோர் 6

பயனாளர்கள் :-

1)ஜெகன்.யாழ்பல்கலைக்கழக மாணவர் 1000 யுரோக்கள்.

உதவியவர் ஜெர்மனியிலிருந்து.சுந்தர லிங்கம் (ஸ்ருட்காட்)

2)பிரபாகரன் தமிழன்பன் (வயது 3) 400யுரோக்கள்

உதவியவர்கள்.

3)சதீஸ்கரன் திருமலை (வைத்திய மற்றும் சுயதொழில் வாய்ப்பு) 181193.29 இலங்கை ரூபாய்கள்.

உதவியவர்கள். விசுகு மற்றும் அவரது நண்பர்கள் பிரன்ஸ்..1000 யுரோக்கள்

றோகான் டேகா கட்டார்…50000 இலங்கை ரூபாய்

4)இரவி திருமலை

5)அறிவொளி.இந்தியா தமிழ்நாடு

6)சிவகரன் .இந்தியா தமிழ்நாடு

மக்களிற்கான தேவைகளை சேவைகளாகத் தொடர்ந்து முன்னெடுப்பதற்காக நேசக்கரம் அமைப்பானது சமாதானத்திற்கும் அபிவிருத்திக்குமான அமைப்பு (டென்மார்க்) சமூக அபிவிருத்தி அமைப்பு (இலங்கை) ஆகிய அமைப்புக்களுடன் கரம்கோர்த்துள்ளதோடு அவர்களுடன் இணைந்து 13.06.10அன்று காமினி மகாவித்தியாலயத்தில் இடம்பெயர்ந்த 84 மாணவர்களிற்கான அத்தியாவசிய தேவைகளான பாடசாலை உபகரணங்கள் ஆடைகள் மற்றும் பாடசாலைக்குச் சென்று வருவதற்கான போக்குவரத்து வசதிகள் என்பன வழங்கப்பட்டதோடு போக்குவரத்திற்கான உதவிகள் அம்மாணவர்களிற்குத் தொடர்ச்சியாகக் கிடைக்கும்படியான ஒழுங்குகளும் மேற்கொண்டிருந்தோம்.

காலத்தின் தேவையறிந்து நேசக்கரத்துடன் இணைந்து பாதிக்கப்பட்ட மாணவர்களிற்காகவும் மக்களிற்காகவும் தங்கள் உதவிக்கரங்களை நீட்டிய அனைத்து அன்பான உள்ளங்களிற்கும் பயனடைந்தவர்கள் சார்பாக நேசக்கரம் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்வதோடு தொடர்ந்தும் உங்கள் நேசக்கரங்களை எங்கள் உறவுகளுக்கு நீட்டுவீர்கள் என்கிற நம்பிக்கையுடன்.

நேசக்கரம் நிர்வாகக் குழுவினர்

உறவுகளிற்கு உதவுவோம்.