200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அடிப்படை உதவிகள் வழங்கப்பட்டுள்ளது

கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 200வரையான தமிழ் அரசியல் கைதிகளுக்கு மாதாந்த அடிப்படைத் தேவைகளான பால்மா , பற்பசை , பற்தூரிகை , சவர்க்காரம் , சவரக்கத்தி , பிஸ்கெட் போன்ற பொருட்கள் வழங்கப்பட்டது.

மேற்படி கைதிகளுக்கான உதவியினை நேசக்கரம் ஊடாக வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலை பிரித்தானியாவிலிருந்து ஒலிபரப்பாகும் ஐ.எல்.சி வானொலியூடாகவும் நேயர்களிடம் கொண்டு சென்றோம். ஐ.எல்.சியின் நேயர் கண்ணன் என்ற நேசக்கரத்தினை நீட்டியிருந்தனர். கணணன் வழங்கிய உதவிகளை இன்றைய தினம் 200கைதிகளும் பெற்றுக் கொண்டுள்ளனர்.

உதவிகளைப் பெற்றுக்கொண்ட கைதிகள் சார்பாக உதவிய கண்ணனுக்கும்(பிரித்தானியா) ஐ.எல்.சி வானொலிக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

உதவிகள் பெற்ற கைதிகளின் நன்றிக்குரல்கள்.