வெலிக்கடை அரசியல் தமிழ்ப்பெண் கைதிகளுக்கான உதவிக்கு நன்றிகள்

வெலிக்கடை பெண்கள் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள தமிழ்ப் பெண் அரசியல் கைதிகளுக்கு மாதாந்த அடிப்படைத் தேவைகளான பால்மா , பற்பசை , பற்தூரிகை , சவர்க்காரம் , சம்பூ , பிஸ்கெட் ,பெண்களுக்கான மாதாந்த பிரத்தியேகப் பொருட்கள் மற்றும் பெண்களுக்கான உள்ளாடைகள் ஆகியன வழங்கப்பட்டது.

மேற்படி கைதிகளுக்கான உதவியினை பிரித்தானியாவில் வாழும் வல்வை நண்பர்கள் இணைந்து 40ஆயிரம் ரூபாவினை வழங்கியிருந்தனர்.

உதவிகளைப் பெற்றுக்கொண்ட கைதிகள் சார்பாக உதவிய வல்வை நண்பர்களுக்கும் (பிரித்தானியா) கைதிகளின் துயரங்களை வெளிச்சொல்ல நேரம் தந்து உதவிகள் பெற்றுத் தந்த ஐ.எல்.சி வானொலிக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
உதவிகள் பெற்ற கைதிகளின் நன்றிக்குரல்கள்.

வழங்கப்பட்ட பொருட்களின் விபரமும் கொள்வனவு செய்யப்பட்ட விலை விபரங்களும் பற்றுச்சீட்டு:-

மேற்படி கைதிகளுக்கு வல்வை நண்பர்களால் வழங்கப்பட்ட உதவி 40ஆயிரம் இலங்கை ரூபா. இதில் செலவான பணம் – 39990.00ரூபா. மீதி கையிருப்பு – 10.00ரூபா.

தொடர்புகளுக்கு

நேசக்கரம்

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723
Skype ID – Shanthyramesh
Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com