எங்களுக்காக வாழ்ந்த போராளியின் விடுதலைக்கு வேண்டியது ஒன்றரை லட்சரூபா மட்டுமே

இராசவர்மனின் குரலிலிருந்து சில துளிகள் ஒலிவடிவில் கேட்க…
இராசவர்மன் ! 5வருடங்களாக சிறையிருக்கிறான். இவன் மீது 2குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டது. எப்படியும் 27வருடத்தண்டனைதான் முடிவென்று சட்டவல்லுனர்கள் ஆரூடம் கூறியிருந்தனர். சிறை போனதோடு வர்மன் வீட்டுக்கு விளங்காதவானாகிப் போனான். அம்மாவைத் தவிர யாருமே அவனைப் பார்ப்பதுமில்லை நினைப்பதுமில்லை. அக்கா அண்ணா தம்பியென்ற உடன்பிறப்புகள் அவனோடு பிறந்திருந்தும் அவன் அவர்களால் மதிக்கப்படவில்லை.

யார் போனாலென்ன நாடு தன்னைக் காக்குமென்ற நம்பிக்கையில் 27வருடங்களையல்ல ஆயுளையும் சிறையில் கழிக்கத் தயாராகியிருந்தான். ஒவ்வொரு தவணையும் கூண்டில் ஏறியிறங்கிய போதெல்லாம் வர்மன் கலங்கியதேயில்லை. அவன் நாட்டின் குழந்தையாகவே இலட்சியப்பற்றோடு நீதிமன்றத்தைவிட்டு விலங்கோடு சிறை வருவான்.

எல்லா நம்பிக்கையும் கரைந்து இனி அவனுக்காக நாடுமில்லையென்ற போது வர்மன் உடைந்து போனான். யாரை நம்பி யாருக்காக கொடும் வதைகளையெல்லாம் தாங்கினானோ அந்த நம்பிக்கை கனவாகி எல்லாம் அவனைவிட்டுப் போயிருந்தது.
வெளியில் போய் ஏதோ வாழ்ந்துவிட்டுப் போவோமென்றால் அவனது வழக்கை வாதாடி வென்று அவனுக்கு விடுதலை நாள் கிடைக்க தேவையான பெருந்தொகை பணத்தை எவரும் வழங்கத் தயாரில்லை. அவனும் யாரிடமும் இறைஞ்சவும் தயாரில்லாமல் இருந்தான். கடந்த 3மாதங்கள் முன் அவனுக்கிருந்த ஆறுதல் அம்மாவும் நோயுற்று இறந்துபோனதோடு இருந்த ஒற்றை ஆறுதலும் போய்விட்டது. விரக்தியும் வாழ்வு மீதான நம்பிக்கையும் இழந்து போனது.

ஆயினும் அவனது நீண்டகாலத் தண்டனையைக் குறைத்து அவனால் வெளியில் வர முடியுமென்ற நம்பிக்கையை மனிதநேயம் மிக்கவர்கள் மூலம் உணர்ந்தவனுக்கு உதவிக்கு பணம் தான் பிரச்சனையாக நின்றது. எனினும் ஏதாவது வழி பிறக்குமென்ற நம்பிக்கையோடு 06.03.2012 நீதிமன்றுக்குப் போனான்.

ஏதிர்பாராத திருப்பம் அவனது வழக்கில் நிகழ்ந்தது. ஒன்றரைவருட தண்டனை வழங்கி நீதிபதி தீர்ப்பளித்தார். அவநம்பிக்கையாகவும் ஆயுளே சிறையில் கழிந்துவிடப்போகிறதென அஞ்சிய நிலமையை மாற்றியமைத்தது சட்டவல்லுனர்களின் உழைப்பு.

06.03.2012அன்று ஓன்றரை வருடத்தண்டனை வழங்கப்பட்டு வர்மன் வெள்ளாடையோடு சிறைக்கு வந்திருக்கிறான். இப்போது இவனது வழக்கை வாதாடி வென்ற மனிதம் மிக்க வழக்கறிஞருக்கு இலங்கைரூபா ஒன்றரை லட்சம்(1000,00€) கட்ட வேண்டும்.

இதுவரை தனக்காக ஒருவிதமான உதவியையும் கேட்காத வர்மன் இன்று புலம்பெயர்ந்து வாழ்கிற எங்களையே நம்பியிருக்கிறான். தனது இளமைக்காலங்களை தனது மகிழ்ச்சிகளையெல்லாம் எங்களுக்காகத் தாரைவார்த்துவிட்டு இன்று 33வயதில் இருக்கிற வர்மனுக்கு அவனது தியாகங்களுக்கு நாங்கள் வழங்கும் காணிக்கையாக ஒன்றரை லட்சரூபாவினை வழங்கி அவன் வெளியுலகை இன்னும் ஒன்றரைவருடத்தில் காண உதவுவோம்.

வர்மனுக்கு உங்கள் உதவிகளை வழங்கி அவனது விடுதலைக்கு உதவுவோர் கீழ் வரும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள். ஆளுக்கொரு கைகொடுத்து வர்மனை விடுதலையாக ஆதரவு தாருங்கள். அவரவரால் இயன்ற உதவியை வழங்குமாறு பணிவுடன் வேண்டுகிறோம்.

தொடர்பு கொள்ள வேண்டிய விபரங்கள் :-
பேபால் கணக்கு மூலம் உதவ –nesakkaram@gmail.com

விபரங்களைப் பெற்றுக் கொள்ள :-
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723
மின்னஞ்சல்: nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh