தமிழ் அரசியல் கைதிகளுக்கு நேசக்கரம் வழங்கிய உதவி 5,328,517.50ருபா

2011 செப்ரெம்பர் முதல் இலங்கைச் சிறைகளில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளின் வாழ்வாதார மேம்பாடு, வழக்கு உதவிகள், கைதிகளின் அடிப்படைத் தேவைகளுக்கான உதவிகளை நேசக்கரம் வழங்கி வருகிறது. இவ்வுதவிகளைப் பெற்றுக் கொண்ட கைதிகள் அவர்களது குடும்பங்களின் முன்னேற்றம், பயன்கள் பற்றிய விபரத்தை அனைத்து ஊடகங்களுக்கும் அறியத் தருகிறோம்.

தமிழ் அரசியல் கைதிகளின் நலனுக்காக நேசக்கரம் உதவிகளை ஒன்றிணைத்து சுமார் 5328517,50Rs (ஐம்பத்து மூன்று லட்சத்து இருபத்தெண்ணாயிரத்து ஐநூற்றிப் பதினேழு ரூபா 50சதம்) ரூபாவிற்கான உதவிகளை வழங்கியுள்ளது.
நாம் தொகுத்த விபரக்கோவையில் பயனாளிகளின் பெயர்கள், காலம் போன்ற விபரங்களையும் இணைத்துள்ளோம். சில பெயர்கள் தவிர்க்கப்பட்டுள்ளது. (அவர்களது தனிப்பட்ட பாதுகாப்புக் கருதி, அவர்களின் பெயர்கள் இவ்விபரக்கோவையில் தவிர்க்கப்பட்டுள்ளன)

இக்கைதிகளின் நலனுக்காக தமது ஆதரவினை வழங்கிய ஐஎல்சி வானொலி நிர்வாகம் , நேயர்கள் , மற்றும் உலகுவாழ் புலம்பெயர் தமிழர் உறவுகளுக்கு நேசக்கரம் தனது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

கைதிகள் நலன் உதவித்திட்டத்தினை விடவும் குடும்ப இணைப்பு, பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கான மாதாந்த உதவி, கல்விகற்கும் வறுமைக்கோட்டிற்கு உட்பட்ட மாணவர்களுக்கான உதவி, ஊனமுற்றோருக்கான உதவிகள், விதவைகளுக்கான வாழ்வாதார மேம்பாடு போன்ற முயற்சிகளை முன்னெடுத்து வருகிற எமது நிறுவனத்திற்கு உலகுவாழ் உறவுகள் ஆதரவினை வழங்குமாறு வேண்டுகிறோம்.

கணக்கறிக்கை விபரத்தினை பார்வையிட இணைப்பில் அழுத்துங்கள்.

உதவ விரும்புவோர் நேரடியாகவே தொடர்பு கொண்டு உங்கள் உதவியை வழங்கலாம்.

விபரங்களைப் பெற்றுக் கொள்ள :-
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723
மின்னஞ்சல்: nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh