நேசக்கரம் ஆதரவில் எழுவான் அபிவிருத்திச் சங்கம் உருவாக்கம்

மன்னாரில் போரால் பாதிப்புற்ற மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் முகமாக நேசக்கரம் பிறைட் பியூச்சர்  உப அமைப்பான ‚’எழுவான் அபிவிருத்திச் சங்கத்தின் முதலாவது ஒன்று கூடலும் முதலாவது தொழில் முயற்சிக்கான உதவி வழங்கலும் 23.03.2013 அன்று நடைபெற்றது.

மன்னார் தேனுடையான் கிராமத்தில் உருவாக்கப்பட்ட எழுவான் அபிவிருத்திச் சங்கமானது வடக்கின் அனைத்துப் பகுதிகளுக்கும் தனது சேவையை எதிர்காலத்தில் அதிகரித்து தமிழ் மக்களின் பொருளாதார , கல்வி மேம்பாட்டை நோக்கிய பணியைத் தொடர்ந்து மேற்கொள்ளும் நோக்கிலே உருவாக்கம் பெற்றுள்ளது.

மன்னார் தேனுடையான் ஞானவைரவர் கோவில் தலைவர் வீ.தினேஸ்வரன் தலைமையில் 23.03.2013 அன்று முதலாவது ஒன்று கூடல் இடம்பெற்றுள்ளது. நிகழ்வின் சிறப்பு விருந்தினராக மாந்தை மேற்கு பிரதேச செயலர் கலந்து கொண்டார்.
சிவானந்தராசா அவர்களின் விளக்கவுரையோடு எழுவான் நிர்வாகத் தெரிவில் தலைவர்செயலாளர், பொருளாளர்களோடு  ,  7நிர்வாக உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். நிகழ்வின் இறுதியில் எழுவான் அபிவிருத்திச் சங்கத்தின் முதலாவது தொழில் ஊக்குவிப்பு உதவியை கடற்தொழிலாளர்கள் இருவருக்கு கடன் அடிப்படையிலான பண உதவியும் வழங்கப்பட்டது.

முள்ளிக்கண்டல் அடம்பனைச் சேர்ந்த முனியாண்டி மணிமாறன் அவர்கள் வலைவாங்குவதற்காக 35ஆயிரம் ரூபாவினையும் , தேனுடையான் குணரத்தினம் வரதராஜன் அவர்கள் வள்ளம் வாங்குவதற்காக 55ஆயிரம் ரூபாவினையும் பெற்றுக் கொண்டார்கள். 10மாத தவணை அடிப்படையில் மேற்படி உதவியினைப் பெற்றுக் கொண்டுள்ளார்கள்.

எழுவான் அமைப்பின் தொடர்ந்த செயற்பாடுகளும் முயற்சிகளும் பற்றிய கருத்துரைகளும் தொடர்ந்து விவசாயிகளுக்கான விவசாய ஊக்குவிப்பு வழங்கும் திட்டம் பற்றிய கலந்துரையாடலும் இடம்பெற்று ஒன்றுகூடல் நிறைவடைந்தது.

எமது மக்கள் தொடர்ந்தும் இன்னொருவரில் தங்கியிருக்கும் நிலமையில் இருந்து மீண்டு தங்களது சொந்தக்காலில் நிற்பதற்கான மாற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் ஆரம்பிக்கப்பட்ட எழுவான் எழுச்சியுடன் மாற்றம் காண புலம் பெயர் தமிழர்களின் ஆதரவினை வேண்டுகிறோம்.

கடன்உதவிபெற்றவர்களின்விபரம் :-
muniyandi

kunaratnam

015

011

012

013

எழுவான் தொழில் முயற்சிக்கு உதவிய புலம்பெயர் தமிழர்களின் விபரங்கள் வழங்கப்பட்ட உதவிகளின் கணக்கறிக்கை PDF :- eluvaan mannar -march2013

eluvaan mannar -march2013

eluvaan mannar

கையிருப்பில் உள்ள உதவி அடுத்த கட்டமாக வழங்கப்படும். உதவிய அனைவருக்கும் பயனாளிகள் சார்பாகவும் நேசக்கரம் பிறைட் பியூச்சர் சார்பாகவும் நன்றிகள்.

உதவ முடிந்தவர்கள் தொடர்பு கொள்ளுங்கள் :-

Nesakkaram e.V.
Hauptstrasse 210
55743 Idar-Oberstein
Germany

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 (0) 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org