அச்சியந்திரம் பெற்றுத் தந்த உறவுகளுக்கு நன்றிகள்.

 நேசம் இலவச கல்வித்திட்டத்தில் மாணவர்களுக்கான வழிகாட்டி கையேடுகள் இ பரீட்சைகளுக்கான தயார்படுத்தல் முன்னோடி பரீட்சை வினாத்தாழ்கள் அச்சடித்து வழங்கி மாணவர்களின் அடைவுமட்டத்தினை அதிகரிப்பதற்கான பயிற்சி நெறிகளை வழங்கிவருகிறோம்.

கடந்தகாலங்களில் அச்சுப்பதிப்புக்காக அதிகளவு செலவை எதிர் கொண்டிருந்தோம். தொடர்ந்த எமது தேவைக்கு ஒரு அச்சியந்திரத்தை பெற்றுக் கொண்டால் செலவில் பாதியை குறைத்துக் கொள்ள முடியுமென்ற எமது விண்ணப்பத்தை புலம்பெயர் உறவுகளிடம் வெளிப்படுத்தியிருந்தோம்.

தமிழ் மாணவர்களின் உயர்வில் அக்கறை கொண்ட நல்லுள்ளங்கள் முன்வந்து வழங்கிய உதவியில் அச்சியந்திரமொன்றினைப் பெற்றுள்ளோம்.

இம்முயற்சிக்கு உதவியோர் :-

1)    திருமாவளவன் – 125000.00 ரூபா (ஒருலட்சத்து இருபத்தையாயிரம்ரூபா)
2)    திரு.நகுலேந்திரன் (பிரித்தானியா) -57300.00ரூபா (ஐம்பத்து ஏழாயிரத்து முன்னூறுரூபா)
3)    Gari (கனடா) – 25000.00 (இருபத்து ஐயாயிரம் ரூபா)

மொத்தம் – 207300.00ரூபா (இரண்டு லட்சத்து ஏழாயிரத்து முன்னூறு ரூபா)

அச்சு இயந்திரத்தின் விலை – 164000.00 (ஒரு லட்சத்து அறுபத்து நான்காயிரம் ரூபா)

மீதி 43300.00ரூபாவிற்கும் அச்சடிக்க தேவையான கடதாசி , மை ஆகியவை கொள்வனவு செய்யப்பட்டது.

அச்சியந்திரத்தின் கொள்வனவு விபரம் :-
printer bill

அச்சடிக்க தேவையான கடதாசி , மை ஆகியவை கொள்வனவு :-

papers

உதவியவர்களுக்கு எங்கள் பணியாளர்கள் பயனாளர்கள் யாவரின் சார்பாகவும் நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

தொடர்புபட்ட செய்தி இணைப்பு :- http://nesakkaram.org/ta/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%95%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%B4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%92%E0%AE%B0%E0%AF%81-%E0%AE%85%E0%AE%9A/