மருத்துவ தொழில்நுட்பத்துறைசார் 700 மாணவர்களுக்கான முன்னோடிப்பரீட்சை

கிழக்கு மாகாணம் மட்டக்களப்பு , அம்பாறை மாவட்டங்களில் உயர்தரம் கற்கும் மருத்துவத்துறை ,தொழில்நுட்பத்துறையைச் சேர்ந்த 700 மாணவர்களுக்கான முன்னோடிப் பரீட்சைகளை நடாத்துவதற்கான உதவியினை நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பு புலம்பெயர் தமிழர்களின் நிதியுதவியில் வழங்கியிருக்கிறது.

DSC00929

மேற்படி மாவட்டங்களில் 3வலயங்களை உள்ளடக்கிய மாணவர்களில் தமிழ் மாணவர்களை உள்ளடக்கிய இரு வலயங்களைத் தெரிவு செய்து மருத்துவம் , தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் கற்கும் மாணவர்களின் பல்கலைக்கழக நுளைவை அதிகரிக்கும் நோக்கில் கடந்த 20வருடங்களாக EDUCATION INCENTIVE ASSOCIATION BATTICALO அமைப்பினரால் முன்னோடிப்பரீட்சைகள் நடாத்தப்பட்டு வருகிறது.

2013-04-03 11.55.42

இவ்வமைப்பினர் இவ்வருட உயர்தரமாணவர்களின் முன்னோடிப்பரீட்சைக்கான ஆதரவினை எம்மிடம் கோரியிருந்தார்கள். யுத்தத்தின் பாதிப்புக்களை தாங்குகின்ற கிழக்கு மாகாணத்தின் சிறந்த கல்விச் சமூக உருவாக்கத்தில் அக்கறையோடு செயற்படும் எமது நேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் 700மாணவர்களுக்கான வழிகாட்டி வினாத்தாழ்களை அச்சிட்டு வழங்கியிருந்தோம்.

DSC00931 - Copy

தற்போது இலங்கையில் கல்வியை வியாபாரமாக விற்கிற நிலமையே காணப்படுகிறது. பிள்ளைகளுக்கான மாதாந்த கையேடுகள் , வினாத்தாழ்களை தயாரித்து பல ஆசிரியர்களும் சில நிறுவனங்களும் விற்பனை செய்கின்றனர். அத்தோடு கருத்தரங்குகள் கூட பணம் படைத்தவர்கள் மட்டுமே பங்கெடுக்கும் நிலமையே அங்கு காணப்படுகிறது. பண வசதியுள்ள பிள்ளைகள் மட்டும் இவற்றைப் பெற்றுத் தம்மை மேம்படுத்திக் கொள்கின்றனர். ஆனால் வறுமையிலும் போராலும் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு இந்த முன்னோடிச் சிறப்புப் பயிற்சிகள் கிடைப்பதில்லை.

DSC00927

இந்நிலமையை கருத்தில் கொண்டு கடந்த வருடம் நேசம் இலவச கல்வித்திட்டத்தை ஆரம்பித்திருந்தோம். 5ம் வகுப்பு புலiமைப்பரிசில் தோற்றிய 2500மாணவர்களுக்கும் , க.பொ.த.சாதாரணதரம் 10ஆயிரம் மாணவர்களுக்கும் உதவியிருந்தோம். சிறப்பு புள்ளிகள் பெற்ற புலமைப்பரிசில் மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக சித்தியடைந்த மாணவர்களை கெரளவித்து சிறப்புப்பரிசில்களும் வழங்கி சேமிப்பு கணக்கு புத்தகமும் வழங்கப்பட்டது.

இவ்வருடம் 2மாதங்களுக்கு ஒருமுறையாக புலமைப்பரிசில் மாணவர்களை ஊக்குவிக்கும் கையேடு வினாத்தாழ்கள் மற்றும் உயர்தர மருத்துவம் ,தொழில்நுட்பம் சார்ந்த மாணவர்களுக்குமான ஆதரவை வழங்கிக் கொண்டிருக்கிறோம்.

இவ்வருடம் எமது அச்சக செலவை குறைக்கவும் அதிக மாணவர்களை உள்வாங்கும் நோக்கத்தையும் புலம்பெயர் தமிழர்களிடம் தெரிவித்திருந்தோம். எமது திட்டத்தினைப் புரிந்து கொண்ட கருணையாளர்கள் சிலர் முன்வந்து அச்சியந்திரம் ஒன்றைப் பெற்றுத் தந்துள்ளார்கள்.

DSC00925 - Copy (2)

தற்போது வழிகாட்டி வினாத்தாழ்கள் தயார்படுத்தல் முன்னோடிப் பரீட்சை இலவச திட்டத்தில் இணைந்து கொள்ள போரால் பாதிக்கப்பட்ட அனைத்து மாவட்டங்களில் இருந்தும் விண்ணப்பங்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனினும் மட்டுப்படுத்தப்பட்ட வளங்களைக் கொண்டிருக்கும் எம்மால் அதிகளவிலான பிள்ளைகளுக்கான உதவியை வழங்க முடியாதுள்ளது. கருணையாளர்களின் ஆதரவு அதிகளவில் கிடைக்கும் பட்சத்தில் எமது இச்சேவையை அனைத்து தமிழ் மாணவர்களுக்கும் வழங்க முடியும்.

இவ்வருடம் ஆவணிமாதம் நடைபெறவுள்ள பரீட்சையில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்று பல்கலைக்கழ நுளைவைப் பெறும் ஏழைமாணவர்களின் தொடர்ந்த கல்விக்கும் உதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போது பலநூறு மாணவர்கள் பண வசதியின்மையால் மருத்துவம் , தொழில்நுட்பம் கற்கக்கூடிய தகுதியைப் பெற்றும் மேற்படி துறைகளுக்கான பணத்தேவையை பூர்த்தி செய்ய வழியின்றி குறுகிய காலத்தில் முடிக்கும் பாடங்களை தெரிவு செய்து பல்கலைக்கழகங்களில் இருக்கின்றார்கள்.

இவர்களின் 100 மருத்துவம் , தொழில்நுட்பம் சார்ந்த மாணவர்களை நேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் கொண்டு வந்து உதவி வழங்கும் திட்டத்திற்கான வேலைகளையும் ஆரம்பித்துள்ளோம்.

உங்கள் ஆதரவுகளைப் பொறுத்து நம்மால் அதிக மாணவர்களை உள்வாங்க முடியும். மீளவும் எழத்துடிக்கும் கல்விச்சமூகத்தின் எழுகைக்கு புலம்பெயர் தமிழர்கள் அனைவரும் முன்வந்து ஆதரவு தருமாறு வேண்டுகிறோம்.

எமது உதவியில் முன்னோடிப்பரீட்சையெழுதிய க.பொ.த.உயர்தர மாணவர்கள் பெற்ற புள்ளி விபரங்களும் வருமாறு :-

நன்றிக்கடிதம் :-EIA