நேசக்கரம் உப அமைப்புக்களின் விபரங்கள்.

போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் நலன்கருதி பிரதேச வாரியாக உப அமைப்புக்களை உருவாக்கி வருகிறோம்.
உப அமைப்புக்கள் உருவாக்கத்தின் நோக்கம் :-
1)    உதவிகள் ஒருங்கிணைப்பு தொடர்பால் இல்லாதிருப்பதால் ஒருவரே பல வழிகளிலும் உதவியைப் பெறுவார். இதனால் உண்மையான பாதிப்போடு உதவி தேவைப்படுவோருக்கு உதவிகள் செல்லாதிருக்கிறது. இந்த நிலமையை மாற்றி எல்லோருக்கும் உதவிகள் பகிரப்பட உப அமைப்புக்கள் ஊடாக ஒருங்கிணைவை உண்டாக்கும் நோக்கில் உப அமைப்புக்கள் தோற்றுவிக்கப்படுகிறது.

2)    ஓவ்வொரு பிரதேசத்தினதும் சரியான நிலமைகளை கண்டறிந்து சரியான தரவுகளை உப அமைப்பின் நிர்வாகத்தினரின் தொடர் கவனிப்பு மூலம் அறிக்கைகளை எமக்குத் தந்துதவுவார்கள். தரவுகள் அடிப்படையில் ஒவ்வொரு பிரதேசத்தின் வளங்களையும் தொழில் முறைகளையும் அறிந்து அதற்கு ஏற்ப தொழில்களை உருவாக்கக்கூடிய தெளிவை ஏற்படுத்தல்.

3)    அனைத்துப் பகுதிகளிலும் வாழும் கல்விகற்க வசதியற்ற பிள்ளைகள் வாழ்வாதாரம்  வீழ்ச்சி நிலையில் உள்ள குடும்பங்களை இனங்கண்டு அவர்களை முன்னேற்ற வேண்டிய வேலைகளைச் செய்வதோடு கல்வித்தரத்தை உயர்த்துவதோடு குடும்ப முன்னேற்றமும் உயர்வடையச் செய்யப்படும்.

4)    சமூகப்பிறழ்வுகள் , குடும்ப வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், ஆண்கள் , பெண்கள், முதியோர்களுக்கான உளவள மேம்பாட்டை விருத்தி செய்யும் வகையிலான விழிப்புணர்வு , தன்னம்பிக்கையினை ஏற்படுத்தி சமூகத்தை நல்வழிப்படுத்த உதவுதல்.

5)     மேற்படியான நோக்கங்களை பரிசீலித்து அதற்குரிய மாற்றங்களை செயற்படுத்தல்களை மேற்கொள்ளும் ஆய்வறிக்கைகளை ஆய்வறிக்கைக்குழு தயாரித்துத் தருவார்கள்.

6) ஒவ்வொரு பிரதேசங்களினதும் புவியியல் அமைவு பொருத்தமான தொழில் பிரிவுகள் ஆராயப்பட்டு ஆய்வறிக்கையின் அடிப்படையில் குறைந்த வளங்களின் மூலம் நிறைந்த பொருளாதாரத்தை பெறக்கூடிய வகையிலான ஊக்குவிப்புகளை வழங்கி எல்லோருக்குமான வாய்ப்புக்களை ஏற்படுத்திக் கொடுத்தல்.

6)    கிடைக்கப்பெறும் ஆய்வறிக்கைகளை ஆராய்ந்து தொழில் வாய்ப்பு , தொழில் ஊக்குவிப்பு , கல்வி வசதிகளை ஏற்படுத்தலுக்கான முடிவகளை நிறைவேற்றுக் குழுவே தீர்மானிக்கும். இந் நிறைவேற்றுக்குழுவில் சாந்தி, ஜெனனன், வசந்தன், தயா ஆகியோர் அங்கம் வகிப்பர்.

எமது உப அமைப்புக்கள் :-
1)    பறவைகள் :- வவுணதீவு பிரதேசத்தை அண்டிய அனைத்துக் கிராமங்களையும் ஒன்றிணைக்கும்.
2)    அரவணைப்பு : – செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட கிராமங்களை உள்ளடக்கி இயங்கும்.
3)    நேசம் : – கதிரவெளி பிரதேச செயலர் பிரிவை அண்டிய வெருகல் முதல் நாவலடி வரையான கிராமங்கள் உள்ளடக்கி இயங்கும்.
4)    மீழ்ச்சி : – வெல்லாவெளி , மண்டுர் பகுதிகளை அண்டிய கிராமங்களை உள்ளடக்கிய இயங்கும்.
5)    விழி : – கல்குடா பகுதியை அண்டிய கிராமங்களை உள்ளடக்கி இயங்கும்.
6)    தேன்சிட்டு: – அம்பாறை மாவட்டம்.
7)    எழுவான் : – மன்னார் மாவட்டம்.
8)    சோலைப்பூக்கள் :- கிளிநொச்சி மாவட்டம்

ஆகிய எட்டு உப அமைப்புகள்  உருவாக்கப்பட்டுள்ளது. இவற்றின் செயற்திட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டு கிராமங்கள் தோறும் வேலைகள் தொடங்கப்பட்டுள்ளது. காலக்கிரமத்தில் ஒவ்வொரு உப அமைப்பினதும் முன்னேற்றங்கள் அறியத்தருவோம்.

உதவுகிற புலம்பெயர் தமிழர்களின் உழைப்பு ஒரு திட்டமிடலின் கீழ் இல்லாமல் அங்கங்கு குறித்த சில பகுதிகளை மட்டும் மையப்படுத்தப்பட்டு உதவிகள் செல்கிறது. எனினும் தொடர்ந்து உதவிகளை எதிர்பார்க்கிறவர்களாகவே எங்களது மக்களின் மனநிலமையும் இருக்கிறது.

உதவிகளைத் தொடர்ந்து எதிர்பார்த்திருக்கும் நிலமையை மாற்றி நிரந்தர வாழ்வாதார கல்வி முன்னேற்றங்களை கொண்டு வருவதற்கான எண்ணத்தின் வெளிப்பாடே உப அமைப்புக்களின் உருவாக்கத்தின் பிரதான நோக்கமாகும்.

நீங்கள் செய்யும் உதவிகள் சரியாக சரியான நபர்களைச் சென்றடைகிறதா உங்கள் உதவியின் பயன் என்ன என்பவற்றையும் எங்கள் உப அமைப்புக்கள் ஊடாக கண்காணித்துத்  தரவும் எம்மால் உதவ முடியும்.

மற்றும் சரியான தொடர்பாடல்கள் இல்லாது உதவிகள் வீணாவதையும் நீங்கள் தடுக்க முடியும். இத்தகைய ஆதரவுகள் தேவைப்படுகிற புலத்துத் தமிழ் அமைப்புக்களின் உதவிகளை சரியான முறையில் நிரந்தர முன்னேற்றம் நோக்கிய பாதையில் கொண்டு செல்லும் வகையில் தங்களுக்கான ஆதரவுகளையும் எம்மால் வழங்க முடியும்.

எம்முடன் இணைந்து செயற்பட அல்லது எம்மோடான நட்புறவை பேணிக்கொள்ள விரும்பும் புலம்பெயர் தமிழ் அமைப்புக்கள் எம்முடன் தொடர்பு கொள்ளுங்கள். நிரந்தர  பொருளாதார முன்னேற்றம் காணும் வகையில் எங்கள் மக்களை உயர்த்துவோம்.

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

Email :- nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany
Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8