நேசக்கரம் சர்வதேச மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம் உருவாக்கம்.

தமிழ்மாணவர்களின் மருத்துவம், இயந்திரவியல் பீடங்களுக்கான பல்கலைக்கழக நுளைவை அதிகரிக்கும் நோக்கிலும் படித்த இளைஞர்களின் வழிகாட்டலில் சிறந்த கல்விச் சமூகத்தை உருவாக்கும் நோக்கிலும் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பினால் ‘சர்வதேச மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியம்’ ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இவ் ஒன்றியத்தில் பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களே அங்கம் வகிப்பர். குறிப்பாக மருத்துவம் , எந்திரவியல் பீடங்களுக்கு அனுமதி பெற்றவர்களே இவ்வைமப்பின் உறுப்பினர்களாகும் தகுதியைப் பெறுவார்கள்.

நோக்கம் :-

பல மாணவர்கள் சிறந்த மதிப்பெண்களைப் பெற்று மருத்துவ எந்திரவியல் பீடத்திற்கு அனுமதி கிடைத்தும் பணவசதியின்மையாலும் குடும்ப வறுமையின் நிமித்தமும் குறைந்த (BSC) படிப்பினைத் தொடர்கின்றனர். சிறந்த விஞ்ஞாளனிகளாகவும் , மருத்துவர்களாகவும் வர வேண்டிய எத்தைனயோ இளைஞர்களின் கனவுகள் முடிந்துவிடுகிறது.

இத்தகைய நிலமையை இல்லாதொழிப்பதற்கும் மாவட்டங்களில் தமிழ் மாணவர்களின் பல்கலைக்கழக அனுமதியை அதிகரிப்பதற்கும் எதிர்காலத்தில் உயர்தரம் கற்கும் மாணவர்களை பல்கலைக்கழகம் செல்வதற்கான வழிகாட்டல்களையும் மேற்கொள்ளவும் இவ் ஒன்றியமானது பாடுபடும்.

இந்த அமைப்பின் அங்கத்தவர்கள் யுத்தத்தால் பாதிப்புற்ற கிராமங்களுக்கச் சென்று மாதாந்த நடமாடும் இலவச கல்விச் சேவையை நடத்துவதோடு எமது உப அமைப்புக்களின் குறைநிறைகள் தேவைகளை ஆராய்ந்து அறிக்கைகள் சமர்ப்பிப்பார்கள். இவர்களுக்கான கொடுப்பனவு போக்குவரத்துச் செலவுகள் மட்டுமே வழங்கப்படும்.

பல்கலைக்கழக மாணவர்களின் பிரச்சனைகள் அவர்களது தேவைகளை சர்வதேச மாணவர் ஊக்கவிப்பு ஒன்றியத்தின் உறுப்பினர்கள் கவனித்து ஆலோசனைகள் உதவிகள், இலவச கற்பித்தல் வகுப்புக்கள் யாவற்றையும் வழங்குவர்.
தான் சார்ந்த சமூகத்தின் தேவையையும் கல்வியின் அவசியத்தையும் புரிந்த மாணவர்களை உருவாக்குவதன் மூலம் இழந்து போன கல்வியையும் வாழ்வையும் தமிழ் மாணவர்களால் மீளப்புதுப்பிக்க முடியும்.

எமது அமைப்பின் இந்த முயற்சிக்கான ஆதரவினை புலம்பெயர்ந்தாலும் நிலத்தின் நினைவோடு வாழும் தமிழர்கள் அனைவரிடமும் வேண்டி நிற்கிறோம்.

தொடர்புகளுக்கு :-

Shanthy – Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

Email :- nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany
Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

உதவுவதற்கு

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com