HMCநிறுவனத்தின் சீமெந்துக்கல் உற்பத்தியில் முதலாவது முன்னேற்றம்

போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டினை உயர்த்தும் முகமாக இவ்வருடம் 3ம் மாதம் இலங்கையின் நிறுவனங்களுக்கான சட்ட வரைபுக்கு அமைய HAND MADE CREATORS (PVT) Ltd   என்ற பெயரில் நிறுவனமொன்றை ஆரம்பித்திருந்தோம்.

இந்நிறுவனத்தை ஆரம்பித்ததன் நோக்கம் தொடர்ந்து எங்கள் மக்களை உதவி உதவியென்று உபத்திரம் கொடுக்காமல் தொழில் முயற்சிகளைச் செய்வதன் மூலம் சுயபொருளாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தி வறுமையில் உள்ளவர்களை மீட்பதோடு அவர்களது உழைப்பிலிருந்து அவர்களது பிள்ளைகளின் கல்வியை உயர்த்துவதையும் நோக்காகக் கொண்டு ஆரம்பித்தோம்.

வியாபாரத்தில் அனுபவம் வியாபார தந்திரம் எதனையும் அறியாத புதியவர்களே இந்நிறுவனத்தின் ஒழுங்கமைப்பு , வழிநடத்துனர்களாக இருக்கிறோம். முதலீட்டாளர்களின் எதிர்பார்ப்பு மேலும் முன்னேற்றுவதற்கான ஆலோசனைகளைத்  தந்துதவுங்கள்.

எமது  முதல் முயற்சியாக சீமெந்துக்கல் உற்பத்திக்கான முதலீட்டாளர்களை இணைத்து உருவாக்கிய தொழில் நிறுவனமானது 23.07.2013 அன்று மட்டக்களப்பு புல்லுமலைப் பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இம்முயற்சிக்கு தங்கள் ஆதரவை வழங்கி முதலிட்டோர் :-

1)    கஜீபன் (கனடா)    38.130,00ரூபா
2)    கந்தவேல்    (கனடா)        121.275,00ரூபா
3)    நிவேதா உதயராஜா (பிரித்தானியா) 118.000,00ரூபா
4)    சிறீகரன் (கனடா)        100.000,00ரூபா

மொத்தம் கிடைத்த உதவி 377405.00ரூபா. சீமெந்துக்கல் உற்பத்திக்காக மொத்தம் 379000.00ரூபாவினை முதலீடு செய்து மேற்படி வியாபாரத்தை ஆரம்பித்தோம்.

இம்முயற்சியில் முதல் ஓகஸ்ட் மாதம் 12500கற்கள் உற்பத்தி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளது. சாதாரண விலையிலிருந்து 1,50ரூபா குறைத்து ஒரு கல்லின் விலை 26ரூபாவிற்கு விற்கப்பட்டது.

8தொழிலாளிகளுக்கான வேலை வாய்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.

12500 கற்களும் 325000,00ரூபாவிற்கு விற்பனை செய்யப்பட்டது. இதிலிருந்து 268000,00ரூபா தொழிலாளர்களுக்கான சம்பளம் , மின்கட்டணம் , இலாபம் போக மீதி 57000,00ரூபா அடுத்த உற்பத்திக்கான பொருட்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளது.

முதலீட்டாளர்கள் தங்கள் முதலீட்டு இலாபத்தை மாணவர்களின் கல்விக்கு பயன்படுத்தமாறு வழங்கியுள்ளனர். எமது முயற்சியில் தங்கள் நேசக்கரத்தை தந்துதவி மீண்டும் எழத்துடிக்கும் மக்களுக்கு ஆதரவு தந்த அன்பானவர்களுக்கு எங்களது நன்றிகள்.

முதலீடு பொருட்கள் கொள்வனவு விபரம் :-
expenses

முதலீட்டாளர்களின் உதவியின் பயனும் இலாபமும் :-

Brick1 invest viparam august2013_Seite_1

Brick1 invest viparam august2013_Seite_2