285€ உதவினால் ஒரு குடும்பத்தின் வாழ்வு முன்னேறும்.

17வருடங்கள் போராட்ட வாழ்வு. போராளியையே திருமணம் செய்து கொண்டான் பிள்ளைகள் 2. அவன் பங்கேற்ற களங்களில் பலமுறை காயமுற்று உடலில் எறிகணைத்துகள்கள் கலந்து அந்த வலிகளோடு வாழும் ஒரு முன்னாள் போராளி.

எல்லா விடயங்களிலும் அவன் ஒரு முன்னுதாரணம். இதைச் செய்யென்றால் இதற்கு மேலும் தனது வலுவை வழங்கி வேலைகளை முடிக்கும் கடமையுணர்வாளன்.

இறுதியுத்தத்தில் எல்லாம் இழந்து போனபின்னரும் அவனது குடும்பத்தின் முயற்சியில் உயிர் பிழைத்தவன். சிறை புனர்வாழ்வு என எல்லாத் துயரங்களையும் அனுபவித்தான்.

சிறையிலிருந்து ஊர் திரும்பியவனுக்கு அடுத்த வேளையைக் கொண்டு செல்ல ஆதரவற்ற நிலமை. அன்றாட வாழ்வை குழந்தைகளின் பசிபோக்க முடிந்தவரை கிடைக்கிற தொழில்கள் யாவையும் செய்து கொண்டிருக்கிறான். எனினும் போதிய வருமானம் இல்லை.

உடலெங்கும் கலந்திருக்கும் இரும்புத்துணிக்கைகள் உயிரை எடுக்கும் வலியைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. கடந்த மாதம் வரையும் பல சத்திரசிகிச்சைகள் தொடர் மருத்தவத்தோடு காலம் கழிகிறது.

ஒரு தொழில் தனது குடும்பத்தின் நிரந்தர பொருளாதார முன்னேற்றத்திற்காக செய்ய விரும்பும் இந்தப் போராளியின் குடும்பத்திற்காக 50ஆயிரம் ரூபா (அண்ணளவாக 285€) உதவியைக் கோரியுள்ளான்.

உங்கள் உதவி இக்குடும்பத்தின் நிரந்தர முன்னேற்றத்திற்கு ஆதரவாகும். உதவ விரும்புவோர் கீழ்வரும் விபரங்களில் தொடர்பு கொள்ளுங்கள்.

Telephone: Shanthy +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

நேசக்கரம்

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany