2011 – 2014 வரையான கடன் உதவித்திட்டத்தின் தொகுப்பறிக்கை.

சிறு சிறு துளியாக பாதிக்கப்பட்டவர்களின் துணையாக எழுந்த நேசக்கரமானது 2011 யூலைமாதம்; கடன் வழங்கும் திட்டமொன்றை ஆரம்பித்திருந்தது. இதுவொரு பரீட்சார்த்த முயற்சியாக செயற்படுத்த திட்டமிட்டோம்.
புலம்பெயர் தமிழர்களால் வழங்கப்படும் நிதியை மீள செலுத்தக் கூடியவர்களிடமிருந்து மீளப்பெறுவதெனவும் முடிவெடுக்கப்பட்டது. இதன் பிரகாரம் வழங்கும் உதவிகளை கடன் அடிப்படையில் வழங்கி மீளப்பெறும் நிதியை சுழற்சி முறையில் அடுத்தடுத்தவர்களுக்கு பயன்படுத்தலாம் எனவும் திட்டமிடப்பட்டது.

கட்டம் 1.

திருமுறிகண்டியில் மீள்குடியேறிய குடும்பங்களில் 4குடும்பங்களை தெரிவு செய்து தலா ஒரு குடும்பத்திற்கு 30ஆயிரம் ரூபா அடிப்படையில் 120000ரூபா(ஒருலட்சத்து இருபதாயிரம் ரூபா) பகிர்ந்தளிக்கப்பட்டது.
3மாதங்கள் முடிய கடனை திரும்ப செலுத்துவோம் என கையொப்பமிட்டு உறுதிப்படுத்திய கடிதங்கள் தந்திருந்தார்கள். எனினும் கடனைப் பெற்றுக் கொண்டவர்கள் எம்மால் வழங்கப்பட்ட உதவியை தம்மால் மீளச்செலுத்த முடியாதென மறுத்திருந்தார்கள். முதல் முயற்சி தோல்வி.

கட்டம் 2.

1) நிமலலீலனி (மட்டக்களப்பு) 40ஆயிரம் ரூபா. (மீள செலுத்தவில்லை)
2) குகதாசன் (மட்டக்களப்பு -இவர் முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்டவர்) 40ஆயிரம் ரூபா. (மீள செலுத்தவில்லை)
3) சந்திரன் (கிளிநொச்சி) – 60ஆயிரம் ரூபா. (மீள செலுத்தவில்லை)
4) கவிதா ரலீசன் (மட்டக்களப்பு) – 80ஆயிரம் (மீள செலுத்தவில்லை)
5) கந்தசாமி பகீரதன்(வவுனிக்குளம்) – 1லட்சம் (60ஆயிரம் மீளச்செலுத்தியுள்ளார். மீதி நோயுற்றிருந்ததால் செலுத்தப்படவில்லை)
6) உசேந்தினி (மட்டக்களப்பு) – 40ஆயிரம் (மீள செலுத்தவில்லை)
7) அருள்ராஜா (மட்டக்களப்பு) – 50ஆயிரம் (மீள செலுத்தவில்லை)
8) ஆனந்தன் (வவுனியா) – 50ஆயிரம் (மீள செலுத்தவில்லை)
9) சாந்தன் (முல்லைத்தீவு) 50ஆயிரம் (25ஆயிரம் மீளச்செலுத்தினார்)

2011 யூலை தொடக்கம் 2012 டிசம்பர் வரையில் மேற்படி விபரங்களுக்கு உரியவர்களுக்கு கடனுதவி வழங்கியிருந்தோம்.இக்காலப்பகுதியில் மொத்தம் 630.000இ00ரூபா வழங்கப்பட்டது. இதிலிருந்து 85000,00ரூபாய் மட்டுமே மீளச்செலுத்தியிருந்தார்கள். 545000ரூபா மீள இதவரையில் கிடைக்கவில்லை. இதுவும் திட்டம் தோல்வி.

கட்டம் 3.

மன்னார் மாவட்டம் தேனுடையான் ,பாப்பாமோட்டை பகுதியில் 2013ம் ஆண்டு எமது பணிகள் ஆரம்பித்திருந்தது. அங்குகு வாழும் போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களில் கடன் உதவி வழங்குமாறு வேண்டியிருந்த குடும்பங்களிலிருந்து 13 குடும்பங்களைத் தெரிவு செய்து 275000ரூபா(இரண்டு லட்சத்து எழுபத்தையாயிரம் ரூபா) வழங்கியிருந்தோம்.

இத்திட்டத்தை பொறுப்பேற்றிருந்தவர்கள் தங்களை நம்பி இக்கடனைத் தருமாறு கேட்டிருந்தார்கள். தங்களது கிராமத்திற்கு தொடர்ந்து சுழற்சி முறையில் தம்மால் பயன்படுத்த முடியுமெனவும் கேட்டுக் கொண்டதற்கு அமைய மேற்படி தொகையினை வழங்கியிருந்தோம்.

ஒரு வருடத்தில் 90200ரூபாய் மீளச்செலுத்தியிருக்கிறார்கள். கிடைக்கப்பெற்ற இத்தொகையிலிருந்து தேன்சிட்டு ஆயுர்வேத நிலத்திற்கு 30ஆயிரம் ரூபாவினை பயன்படுத்தியுள்ளோம். மீதி60200ரூபாவினையும் மேலும் சில குடும்பங்களுக்கு கடன் அடிப்படையில் வழங்கப்பட்டது. எனினும் பணத்தை பெற்றுக்கொண்டவர்களில் ஒருவர் மட்டும் 2500ரூபாயினை மீளச்செலுத்தியுள்ளார். மற்றையவர்கள் தம்மால் மீளச்செலுத்த முடியாதென மறுத்துள்ளனர்.

கடனதவித்திட்டமானது எம்மவர்களுக்கு வழங்குவதில் எம்மால் தொடர்ந்து சிக்கல்களையே எதிர்நோக்க வேண்டியிருக்கிறது. எனவே 2014ம் ஆண்டு தைமாத்திலிருந்து கடன் உதவி வழங்கும் திட்டத்தினை முற்றாக கைவிட்டுள்ளோம்.

கடந்த 3வருடங்களில் 905000,00ரூபாவினை(ஒன்பது லட்சத்து ஐயாயிரம் ரூபா) கடன் உதவியாக வழங்கியிருந்தோம். மீளக் கிடைத்தது 85ஆயிரம் ரூபாய் மட்டுமே.