ஒரு குடும்பத்திற்கு 115€ உதவினால் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.

2013 ஆனி மாதம் 8ம் திகதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குசேலன்மலை(கரடியனாறு) கிராமத்தின் குழந்தைகளுக்கான கல்வியை வழங்கும் நோக்கில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட கற்பித்தல் செயற்பாடானத ஒருவருடத்தை நிறைவு செய்து கொண்டுள்ளது.

எமது கற்பித்தல் செயற்பாட்டில் மேற்படி கிராமத்தில் வாழும் 27குடும்பங்களிலிருந்தும் பிள்ளைகள் தொடர்ந்து பங்கேற்று அடைவுமட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இம்மாணவர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களாகும்.

இவர்களது பிரதான தொழில் மீன்பிடி , விவசாயம் ஆகும். இவர்களால் பிடிக்கப்படும் மீனை சந்தைப்படுத்தவோ தொழிலுக்கான வலைகளை சொந்தமாகவோ வைத்திருக்கும் நிலமையில் வளத்தைக் கொண்டிருக்காதவர்கள். இவர்களது உழைப்பு முதலாளிகளால் சுரண்டப்பட்டு காலம் முழுவதும் முன்னேற்றம் காணாமல் போய்விடுவார்களோ என்ற அச்சம் வருகிறது.

இக்கிராமத்தின் பிள்ளைகளுக்கான பிரத்தியேக வகுப்பு உளவள பயிற்சிகள் வழங்கப்பட்டு வரும் வேளை நிரந்தரமாக இந்தக்கிராமத்தின் 27 குடும்பங்களுக்கும் நிரந்தர வாழ்வாதார முன்னேற்றத்தை ஏற்படுத்தும் நோக்கில் முதல் கட்டமாக 10குடும்பங்களை தெரிவு செய்துள்ளோம். இவர்களுக்கு மீன்பிடிக்கான வலைகளும் , மீன்களை பதனப்படுத்தி சந்தைப்படுத்த தேவையான மீன்பெட்டிகள் ,மற்றும் தாங்கள் பிடிக்கும் மீன்களை தாங்களே நிறுத்து விற்பதற்கான தராசுகளும் வழங்கி அவர்களது வாழ்வை வளமாக்குவோம்.

ஒரு குடும்பத்திற்கு தலா 20ஆயிரம் ரூபாய் (அண்ணளவாக 115€) தேவைப்படுகிறது.
10 குடும்பங்களுக்கு மொத்தம் 2லட்சரூபா(1150€) தேவைப்படுகிறது.
ஒரு குடும்பத்துக்கு ஒவ்வொருவர் கைகொடுத்து அவர்களை முன்னேற்றிவிடுவோம் முடிந்தவர்கள் நேசக்கரம் தாருங்கள்.

“ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காண்போம் உதவிகள் செய்து உயிர்களை நேசிப்போம்”
உதவ விரும்புவோர் தொடர்புகளுக்கு :-

Shanthy – Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

Email :- nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany