வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட 14குடும்பங்கள்.

எமது உப அமைப்பான அரவணைப்பின் வழிகாட்டலில் 2013 யூன் மாதம் குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் கல்வி , சமூக வலுவூட்டல் பணியை ஆரம்பித்திருந்தோம். இங்கு வாழும் 27 குடும்பங்களினதும் குழந்தைகளுக்கான கல்வியூட்டலில் குழந்தைகள் நிறைந்த பயனைப் பெற்றுள்ளனர்.

DSCF6893

27 குடும்பங்களைக் கொண்ட குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 14 குடும்பங்களுக்கான சுயதொழிலுக்கான வலைகள் , மீன்பெட்டி, தராசு,தங்கூசி, நூல்கட்டை, தூண்டில் போன்ற பொருட்கள் 17.07.2014 அன்று வழங்கப்பட்டது.

அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா தலைமையில் நடைபெற்ற பொருட்கள் வழங்கும் நிகழ்வில் அதிதிகளாக ஏறாவூர்பற்று செங்கலடி பிரதேசசெயலாளர் உதயசிறீதர் , குசேலன்மலை கிராமசேவகர் , மீனவர் சங்கத்தலைவர் , மற்றும் கிராம மக்களும் கலந்து கொண்டனர்.

அதிகம் மீன்பிடித் தொழிலையும் விவசாயத்தையும் நம்பி வாழும் இக்கிராமத்தின் பொருளாதார வளத்தை உயர்த்துவதோடு மாணவர்களின் கல்வியை மேம்படுத்தவும் எமது சேவைகள் தொடர்ந்து கொண்டிருக்கிறது.

சுயதொழில் வேலைவாய்ப்பினை வழங்க தங்கள் ஆதரவைத் தந்த கனடா றவி, சுரேஷ் (ஒருலட்சரூபா) மற்றும் அரவிந்தன்(ஒருலட்சரூபா) ஆகியோருக்கும் எமது நன்றிகளைத் தெரிவிக்கிறோம்.

14 குடும்பங்களின் முன்னேற்றமானது அடுத்த 6மாதங்கள் கவனிக்கப்பட்டு மீதி 13 குடும்பங்களுக்குமான உதவிகள் அடுத்த வருடம் 2ம் மாதம் அளவில் வழங்கப்படுமென வாக்குறுதியளிக்கப்பட்டுள்ளது.

எமது களப்பணியாளர்கள் காலத்துக்குக் காலம் இக்கிராமத்தின் முன்னேற்றம் வளர்ச்சி போன்றவற்றின் அறிக்கைகளை தந்து கொண்டிருப்பார்கள். கிடைக்கப்பெறும் அறிக்கைகள் , செய்திகள் எமது இணையத்தளத்தில் பிரசுரிக்கப்படும்.