பெண்கள் தலைமை தாங்கும் 53 குடும்பங்களுக்கான வலுவூட்டல் மேம்பாடு.

மட்டக்களப்பு முறுத்தானை கிராமத்தில் 241 குடும்பங்களைக் கொண்ட 855பேர் வாழ்கின்றனர். போர் நடைபெற்ற காலங்களில் இக்கிராமமும் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகிய கிராமம். மெல்ல மெல்லத் தனது இயல்பை மீளப்பெற விரும்பும் இக்கிராமமானது அனைத்து வசதிகளாலும் மிகவும் பின் தங்கிய கிராமமாகும்.

கல்வி , சுகாதாரம் , உட்பட சமூகப்பிறள்வுகளும் நிறைந்த இடமாகக் காணப்படுகிறது. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களையே கொண்ட இக்கிராமத்தின் கல்வி , பொருளாதாரம் ஆகியவற்றை உயர்த்த வேண்டிய தேவையை உணர்கிறோம்.

muruthana6muruthana3

 

ஊருக்குள் கிடைக்கும் வளங்களை சரியான முறையில் பயன்படுத்தி முன்னேற்றமடையக் கூடிய வாய்ப்புகள் அதிகம் இருக்கிறது. எனினும் வழிநடத்தல் ஆற்றுப்படுத்தலுக்கு வசதிகளற்று வாழும் மக்களை வழிகாட்டி முன்னேற்ற வேண்டிய பொறுப்பை ஏற்றுள்ளோம்.

இக்கிராமத்தில் வாழும் பெண்கள் தலைமை தாங்கும் 53 குடும்பங்களுக்கான வலுவூட்டல் திட்டத்தினை முன்னெடுக்கவுள்ளோம். உடனடி உதவிகள் நிரந்தர முன்;னேற்றத்தை வழங்காது. எனவே படிப்படியான முன்னேற்றத்தை நோக்கிய வேலைத்திட்டங்களை முன்னெடுக்கும் முயற்சிகளை மேற்கொள்கிறோம்.

முதலில் மாணவர்களையும் பெண்களையும் இணைத்து முதல் 3மாதங்கள் அவர்களுக்கான உளவள ஆற்றுப்படுத்தல் பயிற்சிகளை மேற்கொள்ளவள்ளோம். 3மாத உளவள பயிற்சியின் நிறைவின் முன்னேற்றத்தை அவதானித்து அடுத்த கட்டம் மாணவர்களுக்கான கல்வியூட்டல் தொழில் பயிற்சிகளையும் வழங்கவுள்ளோம்.

muruthana1muruthana2

வாரத்தில் 3நாட்கள் உளவள பயிற்சியோடு தொழிற்பயிற்சி வழங்கும் திட்டத்தினை நடைமுறைப்படுத்த ஒரு மாதத்திற்கு 20ஆயிரம் ரூபாய்கள் (121€)தேவைப்படுகிறது.

பள்ளி செல்லும் வயதில் உள்ள 140பிள்ளைகளுக்கும் பள்ளி செல்வதற்கான கற்றல் உபகரணங்கள் வழங்குவதற்கு முதல்கட்டம் ஒருலட்ச ரூபாய்(606€) தேவை.

முதல் 3மாதங்களுக்கும் உளவள பயிற்சி நெறிகளை பயிற்றுவிக்க தேவைப்படும் நிதி – 60000.00(365€)
3மாத பயிற்சிகளின் பின்னர் எம்மால் வழங்கப்படும் காணிகளில் கச்சான் பயிரச்செய்கையை மேற்கொள்ள தலா ஒரு குடும்பத்திற்கு 25ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது. 53 குடும்பங்களுக்கும் கட்டம் கட்டமாக காணிகள் வழங்கப்பட்டு கச்சான் பயிர்ச்செய்கை ஊக்குவிக்கப்படும்.

muruthana5

முதல் கட்டம் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல் மற்றும் 3மாதங்களுக்கான உளவள பயிற்சிகளை வழங்க மொத்தம் தேவைப்படும் நிதியுதவி 971€ தேவைப்படுகிறது.

உதவிகள் கிடைக்கப்பெறும் நிலமையை பொறுத்து முறுத்தானை கிராமத்தின் மாற்றம் தங்கியுள்ளது. உதவக்கூடிய உறவுகள் உதவி இக்கிராமத்தின் சமூக பொருளாதார வாழ்வை உயர்த்துவீர்கள் என்ற நம்பிக்கையில் காத்திருக்கிறோம் உங்கள் அழைப்புகளுக்காகவும் உதவிகளுக்காகவும்.

உதவுவதற்கு

Bank information

Germany:

NESAKKARAM e.V.55743 Idar-Oberstein
Konto-Nr. 0404446706
BLZ 60010070
Postbank Stuttgart

Other countrys:

NESAKKARAM E.V
A/C 0404446706
Bank code – 60010070
IBAN DE31 6001 0070 0404 4467 06
Swift code – PBNKDEFF
Postbank Stuttgart
Germany

 

Paypal Account – nesakkaram@gmail.com

Telephone: +49 (0)6781 70723 /Mobile – 0049 1628037418

nesakkaram@gmail.com
Skype – Shanthyramesh

www.nesakkaram.org

 

நேசக்கரம்

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723
Skype ID – Shanthyramesh
Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8

மின்னஞ்சல்: nesakkaram@gmail.com