எட்டுலட்சரூபாய் உதவிகளை வழங்கிய கனடிய நண்பர்கள் றவி, சுரேஷ்.

நேசக்கரம் சமூகப்பணிகளில் இணைந்து கடந்த ஒருவருட காலத்தில் றவி, சுரேஷ்(கனடா) நண்பர்கள் இருவரும் இணைந்து இதுவரையில் எமக்கு 800000.00ரூபா (எட்டுலட்சரூபாய்கள்) உதவியுள்ளார்கள்.

போரால்பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதார கல்வி மேம்பாட்டுக்கான தங்கள் உதவிகளை வழங்கி தாயகத்திற்கான பணிகளில் தங்களையும் இணைத்து எம்மோடு தொடர்ந்து வரும் நண்பர்கள் றவி , சுNhஷ் ஆகியோருக்கு எங்களது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

நேரில் ஆளையாள் அறிந்தவர்களே குற்றம் குறை பழி தீர்த்தல் என சுயநலத்தோடு நேசக்கரம் மீது அள்ளியெறிந்த சேற்றுக்குள்ளிருந்து மீள எழும் நம்பிக்கையைத் தந்த நண்பர் றவி அவர்களும் அவரது நண்பர் சுரேஸ் இருவரையும் நேரில் சந்தித்ததில்லை. யாழ்களம் மூலம் அறிமுகமாகி நம்பிக்கையின் அடிப்படையில் தங்கள் உதவிகளை எவ்வித சந்தேகங்களோ கேள்வியோ இல்லாது வழங்கி வருகிறார்கள்.

வுழங்கப்படும் உதவிகளுக்கு உரியவர்களைக்கூட தெரியப்படுத்த தேவையில்லை உங்கள் பணியில் நம்பிக்கையிருக்கிறது செய்யுங்கள் என எவ்வித தொந்தரவும் இல்லாமல் தங்கள் நேசக்கரத்தை நீட்டிய இரு நண்பர்களுக்கும் என்றென்றும் நன்றிகள்.

முல்லைத்தீவில் தொடங்கவுள்ள தொழில் முயற்சியொன்றுக்கு தேவைப்படும் 2லட்ச ரூபாய்களையும் வழங்கியுள்ளார்கள். ஊனமுற்றவர்களை இணைத்து ஆரம்பிக்கவுள்ள மேற்படி முயற்சிக்கான உதவியில் ஆரம்பமாகவுள்ள தொழில் திட்டம் அடுத்தமாதம் ஆரம்பிக்கவுள்ளது.

பெருந்தொகை உதவியை இரு நபர்கள் இணைந்து செய்து முடித்துள்ள ஒவ்வொரு திட்டமும் நூற்றுக்கு மேற்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றியுள்ளது.

பெறப்பட்ட உதவிகளும் வழங்கப்பட்ட விபரங்களும் :-

உதவி 1) பிள்ளைகளின் கல்வியை ஊக்குவித்த 32 பெற்றோர்களுக்கு வாழ்வாதார உதவி வழங்கல்.

http://nesakkaram.org/ta/nesakkaram.2956.html

உதவி 2) மலையர்கட்டு கிராமமக்களுக்கு ஆயிரம் கோழிக்குஞ்சுகள் வழங்கல் நிகழ்வு.

http://nesakkaram.org/ta/nesakkaram.3122.html

உதவி 3) வியாபார முகவர் தொழில்.

http://hmclk.com/%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%80%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%A9%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF/

உதவி 4) குசேலன்மலை குடும்பங்களுக்கான வாழ்வாதாரம்.

http://nesakkaram.org/ta/nesakkaram.3524.html

உதவி 5) முல்லைத்தீவு மாவட்டம் தொழில் முயற்சி. (இத்தொழில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ளது)