தண்ணீருக்கு நேசக்கரம் தந்த சந்துருவுக்கு நன்றிகள்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலர் பிரிவு வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கான குடிநீர் வசதி செய்து தருமாறு யாழ் இணையம் மூலம் கோரியிருந்தோம்.

புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பின் பொருளாளர் லோகேஷ்வரன் அவர்களது புதல்வர் சந்துரு அவர்கள் தானே குடிநீர் வசதியைச் செய்து தருவதாக முன்வந்து தேவையான முழுமையான பண உதவியை வழங்கியிருந்தார்.
செல்வன் சந்துருவுக்கு , அவரது பெற்றோர்களான லோகேஷ்வரன், சசிகலா தம்பதியினருக்கும் இந்நேரத்தில் எமது நன்றியதலைக் கூறிக்கொள்கிறோம்.

குடிநீரைப் பெறுவதற்காக எங்களை நாடி வந்தவர்களுக்கு சந்துரு நீட்டிய நேசக்கரம் பேருதவியாகும். இளைய தலைமுறையின் தாயகப்பற்றிற்கு சந்துரு ஒரு உதாரணம். சந்துரு போன்ற இளைஞர்களை நேசக்கரம் இரு கைகூப்பி வரவேற்றுக் கொள்கிறது.

தாயம மக்களுக்கான தேவைகளும் சேவைகளும் எமது இளைய தலைமுறையினரையே நம்பியிருக்கிறது. காலமறிந்து ஆற்றிய உதவிக்கு புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பிற்கும் அனைத்து உறுப்பினர்கள் பற்றாளர்கள் அனைவருக்கும் எமது நன்றிகளும் வாழ்த்துக்களும்.