நேசக்கரம் 2010 ம் ஆண்டிற்கான வருடாந்த கணக்கறிக்கை.

நேசக்கரம் அமைப்பினூடாக தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்ட உறவுகளிற்கு உதவிய மற்றும் உதவிக்கொண்டிருக்கும் உலகெங்கும் வாழும் அனைத்து அன்பான உள்ளங்களிற்கும் முதல் வணக்கங்களையும் நன்றிகளையும் நேசக்கரம் தெரிவித்துக்கொள்வதோடு, எமது இனிய புத்தாண்டு வாழ்த்துக்ளையும் தெரிவித்துக் கொள்கிறோம்.

சிறுதுளி பெரு வெள்ளம் என்பதற்கமைய உலகெங்கும்சிறுகச் சிறுகச் சேகரித்த உதவிகளை நேசக்கரம் அமைப்பு ஒருக்கிணைத்து எமது மக்களிற்காக பெருமளவில் கொண்டு சென்று சேர்த்துள்ளது. நேசக்கரத்தின் அடிப்படைத்திட்டங்களான :-
1)பெற்றோரை இழந்த அடிப்படைக் கல்வி வசதிகளற்ற குழந்தைகளின் கல்வி வசதிகள் மற்றும் சத்துணவு திட்ட அடிப்படையில் இந்த ஆண்டு பயனடைந்த மொத்தம் 1970 மாணவர்கள்.

2)வசதியற்ற உயர்கல்வி மற்றும் பல்கலைக்கழகங்களில் கற்கும் மாணவர்களிற்கான உதவித் திட்டத்தில் பயனடைந்தோர் மொத்தம் 120 மாணவர்கள்.

3)யுத்தத்தில் கணவரை இழந்த பெண்கள் மற்றும் உடல் அவயவங்களை இழந்தவர்களிற்கான சுய உதவித் திட்டத்தின் கீழ் பயனடைந்தோர் மொத்தம் 210 பயனாளர்கள்.

4)யுத்தத்தால் பாதிக்கப்பட்டு காயமடைந்த அல்லது அவயவங்களை இழந்தோர் மற்றும் கர்ப்பிணித்தாய்மார்களிற்கான மருத்துவ உதவித் திட்டத்தின் கீழ் பயனடைந்தோர்.58 பயனாளர்கள்.

உதவிகளை வழங்கிக் கொண்டிக்கும் அனைனவருக்கும் பயனாளர்கள் விபரங்கள் தொடர்புகள் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டதோடு அவர்கள் தொடர்பான கடிதம் படங்கம் வழங்கப்பட்டுள்ளது.

குடும்ப இணப்பில் , மாணவர்கள் இணப்புக்களில் உதவி பெறுவோருக்கும் இடையில் தொடர்பாடலுக்கான வழிகளை ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டு உதவி வேண்டி நின்ற எமது உறவுகளின் தொகையும் அதே நேரம் உதவியவர்களின் தொகையும் அதிகரித்திருந்தன் காரணத்தினால் நேசக்கரம் மூன்று மாதங்களிற்கொரு தடைவையாக ஒவ்வொரு காலாண்டும் தனது கணக்கறிக்கையினை தயாரித்து வெளியிட்டிருந்தது. அதனை தொகுத்து ஆண்டறிக்கையாக இங்கு வெளியிட்டிருக்கின்றோம்.
பிறந்திருக்கும் இப்புதிய ஆண்டில் எமது மக்களின் தேவைகளும் துன்ப வாழ்வும் நீங்கி மன நிறைவோடு வாழவேண்டும் என்பதே நேசக்கரத்தின் நோக்கமாகவும் குறிக்கோளாகவும் இருக்கின்றது.

எமது மக்களின் தேவைகள் அனைத்தும் நீங்கி அவர்கள் மகிழ்வாக வாழும்போது நேசக்கரம் என்றொரு அமைப்பின் தேவையும் இல்லாது போய்விடும். எனவே அதுவரை உதவும் உறவுகள் அனைவரும் எம்முடன் இணைந்திருப்பீர்கள் என்கிற நம்பிக்கையுடன் இனிய புத்தாண்டு வாழ்த்துக்களை கூறி விடை பெறுகின்றோம்.

நன்றி வணக்கம்

உறவுகளிற்கு உதவுவோம்
நேசக்கரம்