பதுளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி வழங்கல்

மீரியப்பத்தையில் கைவிடப்பட்ட தேயிலைத்தொழிற்சாலையில் தங்கியிருக்கும் 89குடும்பங்களின் 100பிள்ளைகளுக்கான பாதணிகள் காலுறைகள் நேசக்கரம் அமைப்பினால் 05.12.2014 அன்று வழங்கப்பட்டது.

பதுளை பண்டாரவளை பூனாகலை மககந்தை மீரியப்பத்தை செயலர் பிரிவில் தற்காலிகமாக தங்கியிருக்கும் குடும்பங்களின் வீடுகள் இயற்கை அனர்த்தத்தினால் அழிந்து போயுள்ளமையால் தொடர்ந்தும் பல சிரமங்களை எதிர்கொள்வதோடு சொந்த குடியிருப்புகளுக்கு செல்ல முடியாதுள்ளார்கள்.

மீளவும் குடியேறுவதற்கான வீடுகள் இன்னும் அமைக்கப்படாத நிலமையில் அவலத்தை சுமந்து வாழும் இம்மக்களின் துயர் போக்க வேண்டிய அரசியல் தலைமைகள் இன்னும் மௌனிகளாகவே இருக்கிறார்கள்.

ஏற்கனவே கல்வித்தரத்தில் மிகவும் பின்தங்கிய நிலமையில் இருக்கும் இம்மக்களின் பிள்ளைகளின் கல்வி நடந்து முடிந்த அனர்த்தத்தினால் மேலும் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது.

தங்கள் பிள்ளைகளின் கல்வி , வாழ்வதற்கான வீடுகள் மற்றும் அடிப்படை வசதிகளைச் செய்து தருமாறு அரசியல் தமைகைளிடம் பலமுறை விண்ணப்பித்திருந்தும் இன்னும் அவர்களது கோரிக்கைகளானது கிடப்பில் போடப்பட்டுள்ளதை விசனத்துடன் தெரிவித்தார்கள்.

3நாள் பயணத்தை மேற்கொண்ட எமது குழுவினர் அம்மக்களுடன் தங்கி அவர்களது நிலமைகளை கேட்டறிந்ததோடு மலையக குழந்தைகளின் கல்வி , சமூக மேம்பாடு ஆற்றுப்படுத்தல்களை செய்வதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

பதுளை அனர்த்தத்திற்கான நிவாரண உதவியை வழங்க எம்மால் உதவி கோரியதும் முன்வந்து உதவிய உறவுகளின் உதவியின் ஒரு பகுதியிலிருந்து மேற்படி உதவியானது வழங்கப்பட்டுள்ளது. மீதி உதவியானது 2015இல் ஆரம்பிக்கவுள்ள உளவள கல்வி மேம்பாட்டுக்காக பயன்படுத்தப்படுமென்தனை அறியத்தருகிறோம்.

மொத்தம் 1740.86€(280278.46ரூபா) உதவியானது யாழ் இணையம் கருத்துக்கள நண்பர்களும் மற்றும் யாழ்கள முகநூல் வாசகர்களும் வழங்கியிருந்தார்கள். ஒன்றரை லட்சரூபா பெறுமதியான பொருட்கள் 05.12.2014அன்று வழங்கப்பட்டது. அடுத்த வருடம் எம்மால் ஆரம்பிக்கப்படும் மலையக குழந்தைகளுக்கான கல்வி செயற்பாட்டில் மீதி உதவி பயன்படுத்தப்படும். செயற்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட தொடங்கும் போது இதர விபரங்கள் அறியத்தரப்படும்.உதவிய அனைவருக்கும் எமது நன்றிகள்.