வன்னியில் ஓர் தனித்துவ இசைத்தேர்வு

கிளிநொச்சி மாவட்ட மாகாண தேன்சிட்டு இசைவிருது 2014 முன்னோடி குரல் தேர்வு 13.12.2014 அன்று கிளிநொச்சி ப்ரண்ட்ஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது.
DSC_0417

யோ.புரட்சி நிகழ்ச்சியை தொகுக்க, பரந்தாமன் கவின்கலைக் கல்லூரி இயக்குனர் சவுந்தரராஜா நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். திறன்மிகு கிளிநொச்சி மாவட்ட பாடகர்கள் நிகழ்வை கலந்து சிறப்பித்தனர். வசந்தம் பண்பலை நிகழ்ச்சி முகாமையாளர் திரு கிருபா, அறிவிப்பாளர் பிரதாப் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

நடுவர்கள் :- காலாவித்தகர் இரா. சிவராமன் , இசையமைப்பாளர் இ.தேவகுமார் , சங்கீத ஆசிரியை ஜெயந்தி ஆகியோரின் பங்களிப்பானது நிகழ்வை மேலும் சிறப்பித்திருந்தது.

போட்டி மூன்று சுற்றுக்களாக நடைபெற்றது. மூன்றாம் சுற்றில் பக்க வாத்தியங்களும் பயன்படுத்தப்பட்டது.

முதல் மூன்று இடங்களைப் பெற்றவர்கள் :-

1.உதயரூபன், அக்கராயன்குளம்.
2.கி.கில்சா, திருநகர்.
3. மா.போஜினி, உருத்திரபுரம்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்களின் உளவள மேம்பாட்டை மேம்படுத்தும் வகையில் தேன்சிட்டு அமைப்பானது செயற்பட்டு வருகிறது. தேன்சிட்டு உளவள அமைப்பால் முன்னெடுக்கப்பட்டு வரும் பாடகர் தேர்வில் மாவட்டங்கள் தோறும் பாடகர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வருகின்றனர்.

நம்மவர்களுக்கு இந்த நிகழ்வு கொடுத்த உற்சாகம் அதிகமானது. மாவட்டம் தோறும் தெரிவு செய்யப்படும் பாடகர்கள் அனைத்து மாவட்டத் தேர்வில் பங்கேற்பார்கள்.

இந்நிகழ்வு சிறப்புற நடைபெற ஆதரவு வழங்கிய அனைவருக்கும் தேன்சிட்டு உளவள அமைப்பானத தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.