சேயோனின் முதலாவது பிறந்தநாளில் 750 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கல் நிகழ்வு

சித்தாண்டி 1,2,3,4 பிரதேச குடும்பநல உத்தியோகத்தர் ஆலோசனைக்கும் திட்டமிடலுக்கும் அமைய ‘நேசக்கரம் தேன்சிட்டு’ உளவள அமைப்பின் ஏற்பாட்டில் குடும்பலநல உத்தியோகத்தரால் இனங்காணப்பட்ட 720 குழந்தைகளுக்கு 01.01.2015 அன்று சத்துணவு வழங்கப்பட்டது.
seyon
கனடாவில் வாழ்ந்து வரும் கிருபாகரன் , றோகினி தம்பதிகளின் செல்வக்குழந்தை சேயோன் 26.12.2014 அன்று தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார்.

சேயோனின் முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் சத்துணவு வழங்குவதற்கான உதவி கிடைக்கப் பெற்றோம். 01.01.2015 அன்று முதல் முயற்சியாக நடைபெற்ற சத்துணவு வழங்கல் திட்டத்திற்கு ஆதரவு தந்த குழந்தை சேயோனின் குடும்பத்தினருக்கு எங்கள் இதயம் நிறைந்த நன்றிகள்.

தேசங்கடந்து வாழ்ந்தாலும் தாயகம் மீதான நேசம் மாறாத சேயோனின் பெற்றோர்கள் திரு.திருமதி.கிருபாகரன், றோகினி , கிரி சித்தப்பா, கண்ணன் பெரியப்பா ,அத்தைமார் அனைவரையும் நாங்கள் நன்றியோடு நினைவு கொள்கிறோம். உங்கள் அனைவரின் நல்வாழ்வுக்காகவும் கடவுளைப் பிரார்த்திக்கிறோம்.

சிறுதுளி பெருவெள்ளமாகி இன்னும் ஆயிரமாயிரம் குழந்தைகளின் ஆரோக்கியத்தைப் பேணவும் ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவும் இவர்கள் போன்ற நல்லிதயங்களின் ஆதவினை நேசக்கரம் வேண்டி நிற்கிறது.