ஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு.

மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது.

ஆனந்தபுரம் கிராமத்தில் குடியேறிய குடும்பங்களுக்கான பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான உதவியை வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலையேற்று தங்கள் உதவியை வழங்க முன்வந்த உறவுகளான எமது திரு.திருமதி தெய்வேந்திரன் வதனி (வட்வெட்டித்துறை) கதிரவேற்பிள்ளை சீதாலக்ஸ்மி குடும்பத்தினரின் ஆதரவில் 41குடும்பங்களுக்கும் 410 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது.
nadarasa sarojini

அமரர்கள் நடராசா சறோயினிதேவி தம்பதிகளின் நினைவுநாளை முன்னிட்டு 14குடும்பங்களுக்கான தென்னைமரக்கன்றுகள் வழங்குவதற்கான 49000ரூபாய் உதவியை வழங்கிய திரு.திருமதி தெய்வேந்திரன் வதனி குடும்பத்தினருக்கும் , 27குடும்பத்திற்கான 94000ரூபா உதவியினை வழங்கிய கதிரவேற்பிள்ளை சீதாலக்ஸ்மி ஆகியோருக்கு நேசக்கரம் தேன்சிட்டு அமைப்பினது நன்றிகள்.

எங்களது முயற்சியில் தங்கள் ஆதரவினை தொடர்ந்து வழங்கிவரும் திரு.திருமதி தெய்வேந்திரன் வதனி ,கதிரவேற்பிள்ளை சீதாலக்ஸ்மி குடும்பத்தினரின் உதவியானது பல தருணங்களின் எங்கள் பணிகளுக்கு வெளியில் வராத ஆதரவாக இருந்து வருகிறது.

இயற்கையை பாதுகாப்போம் இயற்கையோடு ஒன்றிணைந்த வாழ்வை மேம்படுத்துவோம். ஆனந்தபுரம் எழில்புரமாக பரிணமிக்க தொடர்ந்த ஆதரவுகளை வேண்டுகிறோம்.