குடியேற்ற கிராமமான ஆனந்தபுரம் கிராமத்தில் முதலாவது பொங்கல் விழாவானது வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவரின் உதவியில் ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கு 52500ரூபா பெறுமதியான பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது.
மெல்ல மெல்ல வளர்ச்சி காணும் ஆனந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எமது அமைப்பின் பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர். புதுவருடத்திலிருந்து புதிய திட்டங்கள் பலவற்றை அறிமுகம் செய்துள்ள எமது அமைப்பின் எண்ணங்களோடு தங்கள் ஆதரவை வழங்கி இணைந்து வரும் ஆதரவாளர்களுக்கும் அன்பர்களுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம்.