100பாலர் பாடசாலை மழலைகளுக்கான கற்றல் உபகரணம் வழங்கல்.

மட்டக்களப்பு சவுக்கடி,ரமேஸ்புரம்,ஐயங்கேணி ஆகிய கிராமங்களின் முன்பள்ளி மழலைகள் 100பேருக்கான உளவள பயிற்சிக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தேன்சிட்டு நேசக்கரம் உளவள அமைப்பின் களச்செயற்பாட்டாளர்களால் தெரிவு செய்யப்பட்ட 100 குழந்தைகளுக்குமான உதவியை 30.03.2015அன்று பிறந்தநாளைக் கொண்டாடிய பெயர் குறிப்பிட விரும்பாத உறவு ஒருவர் வழங்கியிருந்தார்.

தலா குழந்தையொன்றுக்கு 200ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வுதவியை முன்வந்து உவந்தளித்த பெயர் குறிப்பிட விரும்பாத உறவுக்கு நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பானது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Posted in செய்திகள், April 13th, 2015 | nesakkaram