யோகீசன் அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையில் கிராமிய அபிவிருத்தி கற்றல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்றரை வருட கிராமிய அபிவிருத்தி கற்கைநெறி எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
எமது இம்முயற்சிக்கு யெர்மனியை தளமாகக் கொண்டு இயங்கும் „’யோகீசன் அறக்கட்டளை’ அமைப்பின் அனுசரணையும் நிதியுதவியோடும் ஏப்றல் 2015ம் ஆரம்பமாகிய இக்கற்றலில் முதல் கட்டமாக 80 குழுத்தலைவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடு நடைபெற்று வருகிறது.
Yogeesen Foundation 1

கிராமங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாதவரை அடித்தட்டு மக்களின் வாழ்வை உயர்த்த முடியாது என்பது யதார்த்தம். இவ்வுண்மையை உணர்ந்து தனது நேசக்கரத்தை வழங்கிய „’யோகீசன் அறக்கட்டளை’ அமைப்பின் அமைப்பாளர் திரு.டேவிட் யோகீசன் அவர்களை நன்றியுடன் வரவேற்றுக் கொள்கிறோம்.

பயிற்றுவிக்கப்படும் 80 குழுத்தலைவர்களும் தங்களின் கீழ் 5செயற்பாட்டாளர்களை உள்வாங்குவர். உள்வாங்கும் குழுவினருடன் இணைந்து கிராமங்கள் தோறும் கிராமிய முன்னேற்றம் பற்றிய வழிமுறைகள் விபரங்கள் பெறப்படும்.

80குழுத்தலைவர்களுக்கும் வெளிக்கள பயிற்சிக்காக யுத்த பாதிப்புக்கு உள்ளான ஒவ்வொரு கிராமம் வழங்கப்படும்.

நமது கற்பித்தலின் வழிகள் மூலம் அக்கிராமத்தை அபிவிருத்தி செய்வதற்கான செயற்திட்ட அறிக்கை பெறப்படும். அவ் அறிக்கையும் செயற்திட்ட வரைபுகளையும் இணைத்தே கற்றல் முழுமையின் போது இவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்படும்.

சிறந்த செயற்திட்டமாக தெரிவு செய்யப்படும் செயற்றிட்டத்திற்கு தெரிவாகும் குழுவிற்கு பரிசில்கள் வழங்கி ஊக்குவிப்பதோடு புதிய திட்டங்களை செயற்படுத்துவதற்கான பொருளாதார ஏற்பாடு ஆலோசனைகளும் வழங்கப்படும்.

பாடத்திட்டம் :-

1) கல்வி :- கிராமங்கள் தோறும் கல்வியை முன்னேற்றும் விழி;ப்புணர்வுகளை ஏற்படுத்தல்.

2) பொதுசுகாதாரம். :- போசாக்கு குறைபாடு , சிறுவர் துஸ்பிரயோகம் போன்றவற்றை தடுத்தல். உளவள கற்கைநெறி.

3) சிறுகைத்தொழில் :- உள்ளுர் வளங்களை பயன்படுத்தலும் சந்தைப்படுத்தலுக்குமான வியாபார உத்திகளை கற்பித்தல்.

4) அடிப்படைச் சட்டம் :- காணிச்சட்டம்(உரித்தான காணிகள் தொடர்பான விழிப்புணர்வினை ஊட்டுதல். சட்ட விரோத குடியேற்றம் குடியமர்வுகள் பற்றிய கற்பித்தல்.) மற்றும் குடும்ப நல சட்டங்கள் , உரிமைகள் பற்றிய தெளிவூட்டல்.

5) அரச நிறுவனங்களும் முகாமைத்துவமும் :-
அரசினால் வழங்கப்படும் சலுகைகளை பெற்றுக் கொள்ளும் வழிகளை ஏற்படுத்திக் கொடுத்தல், ஆலோசனைகளை பெற்றுக் கொள்ளும் ஆலோசனை மையங்களை அறிமுகப்படுத்தல்.

6) பிரதேச செலயகம் :- வியாபாரம், சுயதொழில் பதிவுகளை மேற்கொள்ளும் அலுவலகம் அங்குள்ள உரிமைகள், சலுகைகள் ஆகியவற்றை கற்பித்தில். பிரதேசசபை , தொழில்பயிற்சி திணைக்களம் போன்றவற்றில் அரச பதிவுகளை மேற்கொள்வதற்கான அறிவினை ஏற்படுத்தல்.

7) வைத்தியசாலை :- இலவச வாய்ப்புக்களை பயன்படுத்தும் முறைகளை தெளிவுபடுத்தல்.

8) அடிப்படை கட்டிட நிர்மாணம் :- அரசார்பற்ற நிறுவனங்களினால் நிர்ணயிக்கப்படும் கட்டடங்கள் வீதிகள் மைதானங்கள் எவ்வாறனா முறையில் அமைக்கப்பட வேண்டும் என்ற அடிப்படை பொறியியல் முறைகளை கற்பித்தல்.

9) மனிதவுரிமை :- மனிதவுரிமை தொடர்பான சட்டங்கள், விதிகள் தெரடர்பான கற்பித்தல்.

10) அரச வளங்கள் மற்றும் அரசசார்பற்ற நிறுவன வளங்களை வீண்விரயமாக்காமல் சரியாக பயன்படுத்தவதற்கான கற்பித்தல்.

கற்பித்தலின் நோக்கம் :-

1) கிராமம் தோறும் கிராமத்தை அபிவிருத்தி செய்யக்கூடிய அறிவியல் தொழில் நுட்ப அறிவினை வழங்குதல்.

2) கிராமங்கள் தோறும் உள்ள படித்த இளையோரை உள்வாங்கி கிராமங்களை முன்னேற்றுதல்.

3) இளையேர்களுக்கான சுயதொழில் முன்னேற்றத்தை வழங்குதல். இளையோர் நாட்டைவிட்டு அரபு நாடுகளுக்கு சென்று தங்கள் வாழ்வை தொலைப்பதை தடுக்கும் வழிகளை ஏற்படுத்தல்.

4) தொண்டு நிறவனங்களால் வழங்கப்படும் உதவிகளை மேற்படி இளையோரின் ஊடாக வழங்குதல் மூலம் உதவிகளை ஒரு அலகின் கீழ் ஒழுங்குபடுத்துவதோடு வேலை வாய்ப்பினை வழங்குதல்.
இதன் மூலம் சிறந்த சமூகசேவையாளர்கயை கிராமங்கள் தோறும் உருவாக்குதல்.

Posted in செய்திகள், June 6th, 2015 | nesakkaram