வீட்டிலிருந்து எல்லாப் பிள்ளைகளும் போராளிகளும் மாவீரர்களும்-சிறையிலிருந்து ஒரு போராளி

ஒலிப்பதிவினைக் கேட்க கீழ்வரும் இணைப்பில் அழுத்தவும்.

இந்தக்குரலுக்குரியவன் புதிய மகசீன் சிறையில் கைதியாக இருக்கிறான். எங்களுக்காக போராளியானவன் இப்ப இவனுடைய உலகம் இருளப்போற நிலமையில இருக்கு.
1998 தாக்குதலொன்றில் கண்கள் இரண்டும் பாதிப்புற்றது இவனுக்கு. பத்துவருடம் பார்வையோடு உலாவக்கூடிய வாய்ப்பை மருத்துவம் கொடுத்தது. ஆனால் யுத்தம் முடிஞ்சு இவனும் சரணடைஞ்சு இப்ப சிறையில இருக்கிறான். ஒரு கண் முழுமையாக பார்வை இல்லாமல் போயிட்டுது. மற்றக்கண்ணும் பார்வை குறைஞ்சு கொண்டிருக்கு.
இவனுடைய வீட்டிலிருந்து எல்லாச் சகோதரங்களும் போராளிகளாக இருந்தவையும் மாவீரரானவையும் தான் கூட. மாத்தளனில் இவனது அம்மா உடல்சிதறி இறந்துவிட்டார்.
இப்போ தனது குடும்பம் தெருவுக்கு வந்துவிட்டததையெண்ணியழுகிற இவன் தன்னுடைய குடும்பத்துக்கு ஒரு உதவியைக் கேட்கிறான். அடிப்படை மனிதவுரிமை வழக்குப் போட இவனிட்டை 30ஆயிரம் ரூபாவை (200€)இல்லை. இந்த உதவியை யாராவது கொடுத்தால் வெளியுலகத்தை இவனால் பார்க்க முடியும்.
தனது கண்பார்வை மீளப்பெறவும் வழக்குக்காகவும் உதவிகளை வேண்டுகிற இவனுக்கு உதவ விரும்புவோர் தொடர் கொள்ளுங்கள். உங்கள் உதவியை நீங்கள் நேரடியாகவே செய்யலாம்.

தொடர்புகளுக்கு :-

முகவரி:
Nesakkaram e.V
Hauptstr – 210
55743 Idar-Oberstein
Germany

Shanthy Germany – 0049 6781 70723
மின்னஞ்சல்: nesakkaram@gmail.com

Vereinsregister:
AZ- VR 20302
Amtsgericht 55543 Bad Kreuznach
Finanzamt Idar-Oberstein,Steuer-Nr. 09/665/1338/8