பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.

29.10.2014 அன்று இலங்கை பதுளைமாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு அவசர நிவாரண உதவியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வேண்டுகிறோம். தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் வாழ்வு முழுவதும் வறுமையோடு வாழ்பவர்கள். இயற்கையும் இவர்களை வஞ்சித்து இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளார்கள். மனிதர்கள் வாழக்கூடிய அடிப்படை வசதிகளையே இழந்து வாழும் இவர்களின் தற்போதைய அவலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து உதவுமாறு நேசக்கரம் அமைப்பு வேண்டுகிறது. கொஸ்லாந்த சிறீ கணேசா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :- 12 … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், October 30th, 2014, Comments Off on பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள். | nesakkaram

ஆனந்தபுரம் நிலத்திற்கு மரங்கள் தேவை.

ஆனந்தபுரம் நிலத்திற்கு மரங்கள் தேவை.

மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது. இக்கிராமத்திற்கான குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் நோக்கில் குளாய்கிணறுகள் அமைக்கப்பட்டு மக்களின் தண்ணீர் தேவையானது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. தண்ணீர் தேவையை நிறைவு செய்ய புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பின் நிதியுதவியில்12 குளாய்கிணறுகள் அமைத்துக் கொடுக்கப்பட்டுள்ளது. இக்கிராமத்தின் புவியில் அமைவுக்கேற்ற வகையிலான பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான உதவிகளை வேண்டுகிறோம். முதலில் குடும்பமொன்றுக்கு 10 … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், September 27th, 2014, Comments Off on ஆனந்தபுரம் நிலத்திற்கு மரங்கள் தேவை. | nesakkaram

மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளிக்கு உதவி.

போரில் காயமுற்று மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளியொருவர் வாழ்வாதார உதவியினை வேண்டுகிறார். 3பெண் குழந்தைகளின் தந்தையான வன்னிப் பிரதேசத்தில் வாழ்ந்து வரும் குறித்த போராளி வாழும் பகுதியில் பலசரக்குக்கடையொன்றினை நடாத்துவதற்கு 50ஆயிரம் ரூபா உதவியினை வேண்டுகிறார். உயர்தரம் கற்கும் தனது மகளின் கல்விக்கான செலவு , மற்றைய பிள்ளைகளின் கல்வி அத்தியாவசிய அன்றாட தேவைகளை நிறைவேற்ற அவலப்படும் மாற்றுத்திறனாளியான இவரால் வெளியில் சென்று வேலைகள் தேடக்கூடிய நிலமை இல்லை. இக்குடும்பத்தின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தேவைப்படும் 50000ரூபா(அண்ணளவாக 300€)உதவியை வழங்கி … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், August 20th, 2014, Comments Off on மாற்றுத்திறனாளியான முன்னாள் போராளிக்கு உதவி. | nesakkaram

பெண்கள் தலைமை தாங்கும் 53 குடும்பங்களுக்கான வலுவூட்டல் மேம்பாடு.

பெண்கள் தலைமை தாங்கும் 53 குடும்பங்களுக்கான வலுவூட்டல் மேம்பாடு.

மட்டக்களப்பு முறுத்தானை கிராமத்தில் 241 குடும்பங்களைக் கொண்ட 855பேர் வாழ்கின்றனர். போர் நடைபெற்ற காலங்களில் இக்கிராமமும் அதிக பாதிப்புகளுக்கு உள்ளாகிய கிராமம். மெல்ல மெல்லத் தனது இயல்பை மீளப்பெற விரும்பும் இக்கிராமமானது அனைத்து வசதிகளாலும் மிகவும் பின் தங்கிய கிராமமாகும். கல்வி , சுகாதாரம் , உட்பட சமூகப்பிறள்வுகளும் நிறைந்த இடமாகக் காணப்படுகிறது. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களையே கொண்ட இக்கிராமத்தின் கல்வி , பொருளாதாரம் ஆகியவற்றை உயர்த்த வேண்டிய தேவையை உணர்கிறோம்.   ஊருக்குள் கிடைக்கும் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், August 8th, 2014, Comments Off on பெண்கள் தலைமை தாங்கும் 53 குடும்பங்களுக்கான வலுவூட்டல் மேம்பாடு. | nesakkaram

35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரம் தேவை.

35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரம் தேவை.

செங்கலடி பிரதேச செயலர் பிரிவு வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் 35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி மற்றும் வாழ்வாதார உதவிகள் தேவைப்படுகிறது. கட்டாய நிலப்பறிப்பை தடுக்கும் நோக்கில் இந்தப் பகுதியில் உள்ள தமிழ்ப்பற்றாளர்களினால் உருவாக்கப்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் தற்போது யுத்தத்தால் பாதிக்கப்பட்ட காணிகள் அற்ற 35 குடும்பங்கள் குடியேற்றப்பட்டுள்ளார்கள். மேற்படி கிராமத்தில் குடியேறியுள்ள குடும்பங்களுக்கான அடிப்படைத் தேவைகள் இன்னும் கிடைக்கப்பெறவில்லை. குடிநீர் வசதிகள் கூட இல்லாத நிலமையில் வாழும் இக்குடும்பங்களுக்கு குளாய்கிணறுகளை … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், July 17th, 2014, Comments Off on 35குடும்பங்களுக்கான குடிநீர் வசதி அவசரம் தேவை. | nesakkaram

கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரைக்கும் ஆலைகள் நிறுவுதல்.

போரால் பாதிக்கப்பட்டு மீள எழுந்து கொண்டிருக்கும் முல்லைத்தீவு , கிளிநொச்சி மாவட்டங்களில் ஊனமுற்றவர்கள், போர் விதவைகளை உள்வாங்கி தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தும் முயற்சிகளில் எமது அமைப்பானது செயற்படத் தொடங்கியுள்ளது. மிளகாய்த்தூள், மாவகைகள், கோப்பித்தூள் உள்ளிட்ட அன்றாட பயன் பொருட்களை அரைத்துப் பொதி செய்து விற்பனை செய்யக்கூடிய சந்தை வாய்ப்பை எங்களது உற்பத்திக் குழுவினர் ஏற்படுத்தக் காத்திருக்கின்றனர். முதலாவதாக புதுக்குடியிருப்பு பகுதியை அண்டிய இடத்தில் முதலாவது அரைக்கும் ஆலையை நிறுவவுள்ளோம். இத்திட்டத்திற்கு 4லட்சரூபாய்கள் தேவைப்படுகிறது. (அண்ணளவாக 2300€) புடிப்படியாக … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், July 15th, 2014, Comments Off on கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் அரைக்கும் ஆலைகள் நிறுவுதல். | nesakkaram

முல்லைத்தீவு மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட 100 விதவைகள் ஊனமுற்றவர்களுக்கான வாழ்வாதாரம்.

முல்லைத்தீவு மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட 100 விதவைகள் ஊனமுற்றவர்களுக்கான வாழ்வாதாரம்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 100குடும்பங்களுக்கான பழப்பயிர்ச்செய்கைக்கான பழக்கன்றுகளை உற்பத்தி செய்து வழங்கவுள்ளோம். எம்மால் வழங்கப்படும் பழக்கன்றுகளின் பழங்களையும் கொள்வனவு செய்து விற்பனை செய்யக்கூடிய சந்தை வாய்ப்பையும் ஏற்படுத்திக் கொடுக்கக் கூடிய ஒழுங்கினையும் செய்துள்ளோம். இதன் முதற்கட்டமாக 3மாதங்களில் பயன்தரும் பப்பாசிகளை உற்பத்தி செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம். 3மாதங்களில் பயன்தரத் தொடங்கும் பப்பாசிகள் ஒன்றரை வருடம் தொடக்கம் 2வருடங்கள் வரையில் தொடர்ந்து பயன்தரக்கூடியவை. பப்பாசி விதைகளை பதியமிட்டு 3வாரங்களில் கன்றுகளாக உருவாக்கிக் கொடுக்கக்கூடிய வகையில் நிலம் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், July 13th, 2014, Comments Off on முல்லைத்தீவு மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட 100 விதவைகள் ஊனமுற்றவர்களுக்கான வாழ்வாதாரம். | nesakkaram

ஒரு குடும்பத்திற்கு 115€ உதவினால் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம்.

2013 ஆனி மாதம் 8ம் திகதியிலிருந்து மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட குசேலன்மலை(கரடியனாறு) கிராமத்தின் குழந்தைகளுக்கான கல்வியை வழங்கும் நோக்கில் எம்மால் ஆரம்பிக்கப்பட்ட கற்பித்தல் செயற்பாடானத ஒருவருடத்தை நிறைவு செய்து கொண்டுள்ளது. எமது கற்பித்தல் செயற்பாட்டில் மேற்படி கிராமத்தில் வாழும் 27குடும்பங்களிலிருந்தும் பிள்ளைகள் தொடர்ந்து பங்கேற்று அடைவுமட்டத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இம்மாணவர்களின் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் குடும்பங்களாகும். இவர்களது பிரதான தொழில் மீன்பிடி , விவசாயம் ஆகும். இவர்களால் பிடிக்கப்படும் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், June 14th, 2014, Comments Off on ஒரு குடும்பத்திற்கு 115€ உதவினால் வாழ்வாதாரத்தை உயர்த்தலாம். | nesakkaram

285€ உதவினால் ஒரு குடும்பத்தின் வாழ்வு முன்னேறும்.

17வருடங்கள் போராட்ட வாழ்வு. போராளியையே திருமணம் செய்து கொண்டான் பிள்ளைகள் 2. அவன் பங்கேற்ற களங்களில் பலமுறை காயமுற்று உடலில் எறிகணைத்துகள்கள் கலந்து அந்த வலிகளோடு வாழும் ஒரு முன்னாள் போராளி. எல்லா விடயங்களிலும் அவன் ஒரு முன்னுதாரணம். இதைச் செய்யென்றால் இதற்கு மேலும் தனது வலுவை வழங்கி வேலைகளை முடிக்கும் கடமையுணர்வாளன். இறுதியுத்தத்தில் எல்லாம் இழந்து போனபின்னரும் அவனது குடும்பத்தின் முயற்சியில் உயிர் பிழைத்தவன். சிறை புனர்வாழ்வு என எல்லாத் துயரங்களையும் அனுபவித்தான். சிறையிலிருந்து ஊர் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், June 1st, 2014, Comments Off on 285€ உதவினால் ஒரு குடும்பத்தின் வாழ்வு முன்னேறும். | nesakkaram

தொழில் செய்ய விரும்பும் போராளிக்கான உதவி

ஓரு முன்னாள் போராளி. காலொன்றை இழந்தவர். 3பிள்ளைகளின் தந்தை. மனைவி இருதய நோய் பாதிப்புக்கு உள்ளானவர். நீண்டகாலம் சிறையில் இருந்து விடுதலையானவர்.வாழ்வாதாரத்தை மேம்படுத்த வங்கிக்கடன் எடுக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. எனினும் வங்கிக்கடன் எடுக்க முடியாது எல்லா முயற்சிகளும் தோற்றுப்போனது. தற்போது வியாபாரம் ஒன்றைச் செய்வதற்காக உதவி கோரியுள்ளார். 50ஆயிரம் ரூபா(அண்ணளவாக 285€) உதவினால் தன்னால் வியாபாரத்தை மேற்கொள்ள ஆதரவாக இருக்குமென உதவி கோரியுள்ளார். இவருக்கான உதவியை உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். 18வருட போராட்ட வாழ்வில் எல்லாவற்றையும் இழந்து … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், March 25th, 2014, Comments Off on தொழில் செய்ய விரும்பும் போராளிக்கான உதவி | nesakkaram