நேசம் இலவச கல்வித்திட்டத்தில் புலமைப்பரிசில் சித்தியடைந்த 337மாணவர்கள்

நேசம் இலவச கல்வித்திட்டத்தில் 2013 புலமைப்பரிசில் தோற்றிய அதிகூடிய சிறப்பச் சித்தியடைந்த 337 மாணவர்களுக்கான கௌரவிப்பினைச் செய்யவுள்ளோம். (அம்பாறை –  77மாணவர்கள், வெல்லாவெளி – 134 மாணவர்கள் ,மன்னர் 33 மாணவர்கள் , மட்டக்களப்பு – 51 மாணவர்கள் ,மூதூர் – 42 மாணவர்கள்) இம்மாணவர்கள் 337 பேருக்கும் சேமிப்புக்கணக்கை ஆரம்பித்து மாணவர்களுக்கான சேமிப்பை ஊக்குவிக்கவும் தலா ஒரு மாணவருக்கு 500ரூபாவை வைப்பிலிட்டு வழங்கவும் , கௌரவிப்பு ஞாபகக்கிண்ணம்,  மற்றும் அடிப்படை கற்கை உபகரணங்களையும் வழங்குவதற்குத் திட்டமிட்டுள்ளோம். … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், November 3rd, 2013, Comments Off on நேசம் இலவச கல்வித்திட்டத்தில் புலமைப்பரிசில் சித்தியடைந்த 337மாணவர்கள் | nesakkaram

மன்னார் மாவட்டம் நேசம் இலவச கல்வித்திட்டம் 171 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்

மன்னார் மாவட்டம் நேசம் இலவச கல்வித்திட்டம் 171 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர்

நேசம் இலவச கல்வித்திட்டத்தினை இவ்வாண்டு மன்னார் மாவட்டத்திற்கும் விரிவுபடுத்தியிருந்தோம். மன்னார் மாவட்டத்திற்கு 3ஆயிரம் வழிகாட்டி வினாத்தாழ்கள் 3 வகையில் தயாரிக்கப்பட்டு பெப்ரவரி, ஏப்றல்,யூன் ஆகிய மாதங்கள் வழங்கியிருந்தோம். இவ்வழிகாட்டி வினாத்தாழ்கள் மன்னார் மாவட்டத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட பாடசாலையில் கல்வி கற்கும் 5ம் வகுப்பு புலமைப்பரிசில் தோற்றும் மாணவர்களுக்கு வழிகாட்டிகள் வழங்கப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர்களால் சிறந்த முறையில் மாணவர்களுக்கு கற்பிக்கப்பட்டது. தங்கள் கவனிப்பு கற்பித்தல் மூலம் மாணவர்களின் முன்னேற்றத்தில் ஆதரவு தந்த அனைத்து ஆசிரியர்கள் வலயக்கல்விப்பணிப்பாளர் அனைவருக்கும் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், October 31st, 2013, Comments Off on மன்னார் மாவட்டம் நேசம் இலவச கல்வித்திட்டம் 171 மாணவர்கள் சித்தியடைந்துள்ளனர் | nesakkaram

க.பொ.சாதாரணதர மாணவர்களுக்கான பயிற்சிப்பாசறை

எமது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியமானது 2013 கா.பொ.த.சாதாரண தர பரீட்சையில் தோற்றும் போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வாழும் மாணவர்களுக்கான 02 நாள் பயிற்சிப் பாசறைகளை மேற்கொள்ளவிருக்கின்றனர். 6நிலையங்களில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ள பயிற்சிகளில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கான பயிற்சிகளை வழங்கி அவர்களது அடைவு மட்டத்தினை அதிகரிக்கச் செய்வதோடு தேவைப்படும் பாடங்களுக்கான மேலதிக விளக்க வகுப்புகளையும் நடாத்தவுள்ளோம். கணிதம் , விஞ்ஞானம் ஆகிய பாடங்களில் சிறப்பு சித்தியடையும் எண்ணிக்கையை  அதிகரிக்கும் நோக்கில் மேற்படி பாடங்களுக்கான … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், October 7th, 2013, Comments Off on க.பொ.சாதாரணதர மாணவர்களுக்கான பயிற்சிப்பாசறை | nesakkaram

நேசக்கரம் பிறைட்பியூச்சர் நடாத்தும் தமிழ் ஆவணப்படப்போட்டி

ஆவணப்படத்தின் தலைப்பு :- வளமும் வாழ்வும் போரால் பாதிக்கப்பட்ட தமிழ் மக்களின் அடிப்படைப் பிரச்சனைகளை இனங்காண்பதோடு அவர்களுக்கான நிரந்தர வாழ்வாதார மேம்பாடு கல்வி சுகாதாரம் சமூக விழிப்புணர்வு , சமூகப்பொறுப்பணர்வினை ஏற்படுத்து வகையிலான  மாற்றத்துக்கான வழியைத் தேடும் ஓர் போட்டியாகும். நோக்கம் :- இருக்கும் வளங்களைக் கொண்டு வாழ்வை மேம்படுத்துவதும் , மேம்படுத்தக்கூடிய வளங்களை விருத்திசெய்வதுமாகும். நேர அளவு :- 10 தொடக்கம் 20நிமிடங்களுக்குள் சொல்லப்பட வேண்டிய கருத்து முழுமைப்பட வேண்டும். முடிந்தால் ஆங்கில உப தலைப்புகளுடன் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், September 4th, 2013, Comments Off on நேசக்கரம் பிறைட்பியூச்சர் நடாத்தும் தமிழ் ஆவணப்படப்போட்டி | nesakkaram

புலம்யெர் வாழ் தமிழர்களே ஒரு குழந்தைக்கு கல்வி கொடுங்கள்

25.08.2013 அன்று 5ம் வகுப்பு புலமைப்பரிசில் பரீட்சைகள் நடைபெற்றுள்ளது. எமது அமைப்பானது   ‘நேசம்’ இலவச கல்வித்திட்டத்தின்கீழ் இந்த ஆண்டு (2013)  5ம் தர புலமைப்பரிசில் மாணவர்களுக்கென வடகிழக்கு பகுதிகளில் 15000  மாணவர்களை உள்வாங்கி இலவச வழிகாட்டடிகளையுத் தயாரித்து வழங்கியும் மிகவும் பின்தங்கிய கிராமங்களில்  பயிற்சிப் பாசறைகளையும் நடாத்தியுள்ளோம். இவ்வாண்டு 03 வழிகாட்டிகள் வருமாண்டு 06 வழிகாட்டிகள் வெளியிடுவதற்கு திட்டமிட்டுள்ளோம். வழிகாட்டி கையேடுகள் பயிற்சிப்பாசறைகள் நடாத்த ஆதரவு தந்த அனைத்து உறவுகளுக்கும் மாணவர்கள் பெற்றோர் சார்பாக நன்றிகளைத் தெரிவிக்கிறோம். … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், August 27th, 2013, Comments Off on புலம்யெர் வாழ் தமிழர்களே ஒரு குழந்தைக்கு கல்வி கொடுங்கள் | nesakkaram

மருத்துவம் இயந்திரவியல் கற்கும் பல்கலைக்கழக ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள்.

நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் கல்வி ஊக்குவிப்புக் குழுவினரால் தெரிவு செய்யப்பட்ட பல்கலைக்கழகம் செல்ல காத்திருக்கும் மருத்துவ , இயந்திரபீட மாணவர்கள் 50பேருக்கான கல்வியுதவியை வழங்க புலம்பெயர் உறவுகளை வேண்டுகிறோம். சிறந்த பெறுபேறுகளைப் பெற்றும் தொடர்ந்து மருத்துவ , இயந்திரபீடக்கல்வியை தொடர வசதியற்ற மாணவர்களை நேசக்கரம் இவ்வாண்டிலிருந்து குறித்த துறைகளில் கற்று முடிக்க வேண்டிய ஆதரவினை வழங்க வேண்டிய பொறுப்பை ஏற்றுள்ளது. எமது அமைப்பின் மூலம் பல்கலைக்கழக கல்விக்கான உதவியை பெறும் மாணவர்கள் நாம் தெரிவு செய்து கூறும் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், August 4th, 2013, Comments Off on மருத்துவம் இயந்திரவியல் கற்கும் பல்கலைக்கழக ஏழை மாணவர்களுக்கு உதவுங்கள். | nesakkaram

மட்டக்களப்பு மலையர்கட்டு கிராம மாணவர்களுக்கு அவசர கல்வியுதவி தேவை

மட்டக்களப்பு மலையர்கட்டு கிராம மாணவர்களுக்கு அவசர கல்வியுதவி தேவை

போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மலையர்கட்டு கிராமத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் 43 பேருக்கான அடிப்படை கற்கை உபகரணங்களும் பாதணிகளும் வழங்க வேண்டியுள்ளது. இப்பாடசாலைக்கு நேரில் சென்று மாணவர்களின் நிலமைகளைப் பார்வையிட்ட எமது அமைப்பின் பணியாளர்களின் அவதானிப்பில் இக்கிராமம்; போரால் பாதிப்புற்ற கிராமங்களில் அதிக பாதிப்புக்களைத் தன்னகத்தே கொண்டுள்ளது. சுகாதாரம், கல்வி, பொருளாதாரம் யாவற்றிலும் தேவைகளை அதிகம் எதிர்பார்த்து இருக்கும் இக்கிராமத்தில் வறிய நிலமையில் உள்ள மாணவர்கள் கல்வி கற்க முடியாத நிலமையில் வாழ்கின்றனர். … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், July 31st, 2013, Comments Off on மட்டக்களப்பு மலையர்கட்டு கிராம மாணவர்களுக்கு அவசர கல்வியுதவி தேவை | nesakkaram

மீள்குடியேறிய 16 மாணவர்களுக்கும் 160€ உதவினால் போதும்.

மீள்குடியேறிய 16 மாணவர்களுக்கும் 160€ உதவினால் போதும்.

போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய மட்டக்களப்பு எல்லைக்கிராமங்களில் ஒன்றான மண்டுர் 16ம் வட்டாரத்திலுள்ள அரசினர் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான அடிப்படை கல்வி உபகரணங்கள் கோரப்பட்டுள்ளது. இப்பிரதேசமானது கிழக்கில் போரால் பாதிக்கப்பட்ட பிரதான இடங்களில் ஒன்றாகும். கல்வித் தரத்திலும் பொருளாதார முன்னேற்றத்திலும் பின்தங்கிய நிலமையில் இருந்து வரும் இப்பிரதேசத்தில் அடிப்படை வசதிகள் இல்லாமையால் பள்ளி செல்லும் மாணவர்களின் தொகை மிகவும் குறைவாகவே உள்ளது. கற்கை உபகரணங்கள் , பாதணிகள் , உடைகள் இல்லாத நிலமையில் உள்ள 16மாணவர்களுக்கும் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், July 31st, 2013, Comments Off on மீள்குடியேறிய 16 மாணவர்களுக்கும் 160€ உதவினால் போதும். | nesakkaram

புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம்.

புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம்.

மட்டக்களப்பு நகரத்தின் மேற்கே 30 கிலோ மீற்றருக்கு அப்பால் செங்கலடி பதுளை பிரதான வீதியில் மட்டக்களப்பு மாவட்டத்தின் ஒரு எல்லைக் கிராமமாக ‘பெரிய புல்லுமலை’ எனும் அழகிய கிராமம் அமைந்துள்ளது. சுமார் 800வரையிலான தமிழ்குடும்பங்கள் குடியிருந்த இக்கிராமம் விவசாயத்தையே தன் ஆதாரமாகக் கொண்டிருந்தது. காலத்துக்குக் காலம் யுத்தத்தின் பாதிப்பு இக்கிராமத்தையும் அதிகளவில் காவு கொண்டது. யுத்தத்தினால் ஊர்களை விட்டு மக்கள் வெளியேறிவிட  ஒரு கட்டத்தில் புல்லுமலை மனிதர்கள் இல்லாத ஊராக இருந்ததும் ஒருகாலம். இதர இடங்களில் குடியேறி … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், June 14th, 2013, Comments Off on புல்லுமலைக் கிராமத்தின் குழந்தைகளையும் ஆதரிப்போம். | nesakkaram

மூளைப்புற்றுநோயால் கண்பார்வையை இழந்து தவிக்கும் முன்னாள் போராளி.

மூளைப்புற்றுநோயால் கண்பார்வையை இழந்து தவிக்கும் முன்னாள் போராளி.

மட்டக்களப்பு மயிலம்பாவெளி , தன்னாமுனையைச் சேர்ந்த சுந்தரதாஸ் ஒரு முன்னாள் போராளி. இவர் 3பிள்ளைகள் குடும்பத்தோடு வாழ்ந்து வருகிறார். இவருக்கு மூளைப்புற்றுநோய் கண்டறியப்படாமல் நீண்ட நாட்கள் நோயோடு போராடினார். நோய் கண்டுபிடிக்கப்பட்ட போது நோயின் தாக்கம் அதிகமாகியிருந்தது. இந்நிலையில் மருத்துவம் பெற்றார். மின்சாரம் பாய்ச்சல் சிகிச்சை செய்யப்பட்டது. அத்தோடு இவரது கண்கள் இரண்டும் பார்வையை இழந்துவிட்டது. நிரந்தர நோயாளியாகிவிட்ட கணவர் 3பிள்ளைகளோடும் குடும்ப வாழ்வாதாரத்தை இவரது மனைவியே சுமக்கிறார். வருமானம் எதுவுமற்ற நிலமையில் இக்குடும்பம் மிகவும் துன்பப்படுகிறது. … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், May 25th, 2013, Comments Off on மூளைப்புற்றுநோயால் கண்பார்வையை இழந்து தவிக்கும் முன்னாள் போராளி. | nesakkaram