குசேலன்மலை குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்யுங்கள்.

குசேலன்மலை குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்யுங்கள்.

மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமத்தில் 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். இங்கு கல்வி கற்கும் வயதில் 62பிள்ளைகள் உள்ளனர். இப்பகுதியில் இதுவரையில் மின்சார வசதியோ அல்லது சரியான கல்விக்கான வசதிகளோ இல்லை. விவசாயத்துக்கு ஏற்ற வளமும் வசதியும் உள்ள இந்தக் கிராமம் இதுவரையில் எந்த அரசியல் தலைவர்களாலும் கவனிக்கப்படாதிருக்கிறது. மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ள கரடியன்குளம் குசேலன்மலை வாழ் மாணவர்களின் அடைவுமட்டம் குறைந்த நிலையில் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், May 19th, 2013, Comments Off on குசேலன்மலை குழந்தைகளுக்கு கல்வியுதவி செய்யுங்கள். | nesakkaram

ஊனமுற்ற 2 குழந்தைகளுக்கான சக்கரநாற்காலி தேவை.

ஊனமுற்ற 2 குழந்தைகளுக்கான சக்கரநாற்காலி தேவை.

ஏற்கனவே யுத்தத்தால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து சொந்த வீடு நிலங்களை இழந்து அலைந்து மீண்டும் தமது ஊரில் குடியேறியுள்ள ராணமடு , மாதிரி கிராமம் , மண்டுரைச் சேர்ந்த சிவபாலன் தம்பதிகளின் பிள்ளைகளான பவாதாஸ் 12வயது , விருத்திகா 7வயது ஆகிய இருவரும் எவ்வித குறைபாடுகளும் இல்லாது உலவிக் கொண்டிருந்தனர். திடீரென இருபிள்ளைகளும் நடக்க முடியாது மனவளர்ச்சி குன்றியவர்களாகிவிட்டனர். கூலித்தொழில் செய்து குடும்பத்தைக் கவனிக்கும் சிவபாலன் அவர்களால் ஊனமுற்ற குழந்தைகள் இருவரையும் பராமரிக்கும் வசதியின்றி இருக்கிறார்கள். யுத்தத்தின் தாக்கத்திலிருந்து … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், May 9th, 2013, Comments Off on ஊனமுற்ற 2 குழந்தைகளுக்கான சக்கரநாற்காலி தேவை. | nesakkaram

விவசாயம் செய்ய உதவி கோரும் போரால் பாதிக்கப்பட்ட தர்சினி

விவசாயம் செய்ய உதவி கோரும் போரால் பாதிக்கப்பட்ட தர்சினி

போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு கித்துள் பகுதியைச் சேர்ந்த தர்சினி போரில் தனது கணவனை இழந்துள்ளார். தர்சினி கழுத்தில் புற்றுநோய்க்கு ஆளாகி சத்திரசிகிச்சை செய்து மீண்டுள்ளார். இவரது குடும்ப முன்னேற்றம் கருதிய கருணையுள்ளங்கள் உதவுமாறு வேண்டுகிறோம்.2பெண் பிள்ளைகளுடன் மிகவும் வறுமையில் வாடுகின்றார்கள். அடிப்படை பொருளாதார வசதிகளை இழந்துள்ள இக்குடும்பத்தின் பொருளாதாரத்தை மேம்படுத்த தர்சினி அவர்கள் தோட்டம் செய்வாற்கான உதவியினைக் கோரியுள்ளார். கிணறு அமைத்து தோட்டத்துக்கான வசதிகளை அமைக்க இலங்கைரூபா 51ஆயிரம் ரூபா (320€)தேவைப்படுகிறது. தர்சினி எமக்கு எழுதிய கடிதத்தை … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், April 27th, 2013, Comments Off on விவசாயம் செய்ய உதவி கோரும் போரால் பாதிக்கப்பட்ட தர்சினி | nesakkaram

ஒரு போராளியின் விடுதலையை பெற்றுத் தாருங்கள்.

18.05.2009 அன்று இறுதியுத்த முடிவில் கைதாகிய போராளி. கடந்த 4வருடங்கள் சிறைவாழ்வு. குடும்பத்திலிருந்து 3சகோதரர்களையும் நாட்டுக்காக இழந்தவன். வயதான அப்பா மட்டுமே தனது கடைசிக்காலங்களை மகனோடு கழிக்க காவலிருக்கிறார். இவனது வழக்கை நடாத்துவதற்காக சட்டத்தரணிக்காக வழங்கப்பட வேண்டிய தொகை இலங்கைரூபா 150000ரூபா (அண்ணளவாக 1000€) முற்பணம் 50000ரூபா இரு கருணையுள்ளங்களின் உதவியில் செலுத்தப்பட்டு வழக்கு வெல்லப்பட்டுள்ளது. இன்னும் 6மாதங்களில் குறித்த போராளி விடுதலையாகிவிடுவான். உதவி கிடைக்குமென நம்பி சட்டத்தரணிக்கான பணம் மீதி ஒரு லட்சத்தையும் 5ஆயிரம் ரூபா … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், April 11th, 2013, Comments Off on ஒரு போராளியின் விடுதலையை பெற்றுத் தாருங்கள். | nesakkaram

ஒரு குடும்பத்திற்குத் தொழில் வழங்க 25ஆயிரம் ரூபா உதவினால் போதும்.

ஒரு குடும்பத்திற்குத் தொழில் வழங்க 25ஆயிரம் ரூபா உதவினால் போதும்.

மன்னார் மாவட்டம் போரால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய பாப்பாமோட்டை , தேனுடையான் , கட்டக்காடு , முள்ளிக்கண்டல் , கண்டல் ஆகிய கிராமங்களிலிருந்து தேர்வு செய்யப்பட்ட 35 குடும்பங்களுக்கான உதவியினை வேண்டுகிறோம். இக்குடும்பங்களிலிருந்து 10குடும்பங்கள் கடற்தொழில் செய்ய வலைகள் கோரியுள்ளனர். ஒரு வலையின் பெறுமதி 25ஆயிரம் இலங்கை ரூபா (அண்ணளவாக 155€) 10குடும்பங்களுக்கான 10வலைகளுக்கும் தேவையான நிதியுதவி – 250000,00ரூபா (அண்ணளவாக 1543€) 13குடும்பங்கள் நீர் இறைக்கும் இயந்திரம்  கோரியுள்ளனர். ஒரு இயந்திரத்தின் விலை – 20000,00ரூபா (அண்ணளவாக … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், March 2nd, 2013, Comments Off on ஒரு குடும்பத்திற்குத் தொழில் வழங்க 25ஆயிரம் ரூபா உதவினால் போதும். | nesakkaram

இலவச கல்வியை வழங்க ஒரு அச்சு இந்திரம் பெற்றுத் தாருங்கள்

போரால் பாதிப்புற்ற வடகிழக்கு மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்தும் வகையில் நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் இலவச கல்வித்திட்டத்தை கடந்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தி வருகிறோம். தனியார் கல்வி நிலையங்கள் சென்று பிரத்தியேக வகுப்புக்களை பெற முடியாத 5ம் வகுப்பு புலமைப்பரிசில் மாணவர்கள் , கல்விப்பொதுத்தராதர சாதாரணதரம் , உயர்தரம் கற்கும் மாணவர்களுக்கான வழிகாட்டி முன்னோடி வினாத்தாள்களைத் தயாரித்து கற்பித்து வருகிறோம். 2012ம் ஆண்டு  2500புலமைப்பரிசில் மாணவர்களுக்கும், 2012 க.பொ.தா.சாதாரணதரமாணவர்கள் 10ஆயிரம் பேருக்குமான வழிகாட்டி கேள்விபதில் , மற்றும் … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், February 27th, 2013, Comments Off on இலவச கல்வியை வழங்க ஒரு அச்சு இந்திரம் பெற்றுத் தாருங்கள் | nesakkaram

நேசக்கரம் பிறைட் பியூச்சர் புலமைப்பரிசில்2013 வழிகாட்டி வினாத்தாள் பகிர்வு

நேசக்கரம் பிறைட் பியூச்சர் புலமைப்பரிசில்2013 வழிகாட்டி வினாத்தாள் பகிர்வு

நேசக்கரம் பிறைட் பியூச்சர் நிறுவனத்தின் இலவச கல்வித்திட்டம் 2013 புலமைப்பரிசில் மாணவர்களுக்கான மாதாந்த பயிற்சி வகுப்புகளும் பிரத்தியேக தயார்படுத்தல் வினாத்தாள் பகிர்வும் 18.02.2013 ஆரம்பமாகியுள்ளது. 10ஆயிரம் மாணவர்களை உள்ளடக்கிய இத்திட்டத்தின் மார்ச் மாதத்துக்கான மாதாந்த இலவச வழிகாட்டி வினாத்தாள்கள் மட்டக்களப்பு , அம்பாறை , திருகோணமலை  ,மன்னார் ஆகிய மாவட்டங்களில் போரால் பாதிப்புற்ற அடைவுமட்டம் குறைந்த பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டு வழங்கப்பட்டு வருகின்றது. மாணவர்களின் அடைவு மட்டத்தினை உயர்த்தும் வகையில் எமது நிறுவனத்தால்  மேற்கொள்ளப்படும் புலமைப்பரிசில் ஆவணி2013 … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், February 22nd, 2013, Comments Off on நேசக்கரம் பிறைட் பியூச்சர் புலமைப்பரிசில்2013 வழிகாட்டி வினாத்தாள் பகிர்வு | nesakkaram

மன்னார் மாவட்டம் ஈச்சலவக்கை , சன்னார் கிராம மாணவர்களுக்கு உதவுங்கள்.

மன்னார் மாவட்டம் ஈச்சலவக்கை , சன்னார் கிராம மாணவர்களுக்கு உதவுங்கள்.

மன்னார் மாவட்டம் ஈச்சலவக்கை , சன்னார் ஆகிய கிராமங்களில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையான கல்விகற்கும் வயதில் உள்ள 118மாணவமாணவிகளுக்கான அடிப்படைத் தேவைகளாக சப்பாத்துக்கள் , புத்தகப்பைகள் , கற்றல் உபகரங்கள் தேவைப்படுகின்றன. போரால் மிகவும் பாதிப்புற்று வறுமைக்கோட்டின் கீழ் உள்ள இக்கிராமங்களில் வாழும் 250வரையிலான குடும்பங்களின் பிள்ளைகளது கல்வியை மேம்படுத்த முடியாத நிலமையில் பெற்றோர்கள் சிரமங்களை அனுபவிக்கின்றனர். பெரும்பாலுமான பிள்ளைகள் குடும்பத்தில் தாய் அல்லது தந்தை அல்லது குடும்ப உறுப்பினர் ஒருவரையேனும் யுத்தத்தில் இழந்துள்ளார்கள். … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், February 10th, 2013, Comments Off on மன்னார் மாவட்டம் ஈச்சலவக்கை , சன்னார் கிராம மாணவர்களுக்கு உதவுங்கள். | nesakkaram

‘நேசம் இலவச கல்வித்திட்டம்2013’ மாலைநேர இரவுநேர வகுப்புகளுக்கான ஆதரவு தேவை.

‘நேசம் இலவச கல்வித்திட்டம்2013’ மாலைநேர இரவுநேர வகுப்புகளுக்கான ஆதரவு தேவை.

போரால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் வசதியற்ற மாணவர்களின் கல்வி அடைவு மட்டத்தை அதிகரிக்கும் வகையில் மாலைநேர இரவுநேர வகுப்புக்களை கிராமங்கள் தோறும் நடாத்துவதற்குத் திட்டமிட்டுள்ளோம். இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான பொருளாதார ஆதரவினை புலம்பெயர் உறவுகளிடமிருந்து எதிர்பார்க்கிறோம். ஒரு பிரதேசத்திற்கான மாலைநேர இரவுநேர வகுப்புகளை நடாத்துவதற்கு மாதாந்தம் 10555,00ரூபா (அண்ணளவாக 65€) தேவைப்படுகிறது. எமது முதல்கட்ட தெரிவில் 6வளாகங்களை தெரிவு செய்துள்ளோம். எமது பிள்ளைகளின் கல்வியை மேம்படுத்த ஒவ்வொரு கிராமத்தையும் கருணையாளர்கள் பொறுப்பேற்று எங்கள் எதிர்கால … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், January 17th, 2013, Comments Off on ‘நேசம் இலவச கல்வித்திட்டம்2013’ மாலைநேர இரவுநேர வகுப்புகளுக்கான ஆதரவு தேவை. | nesakkaram

“நேசம் கல்வித்திட்டம் 2013” புலமைப்பரிசில் மாணவர்களுக்கு உதவுங்கள்.

“நேசம் கல்வித்திட்டம் 2013” புலமைப்பரிசில் மாணவர்களுக்கு உதவுங்கள்.

கடந்த வருடம் நேசக்கரத்தின் மனிதாபிமானப் பணிகளுக்கு ஆதரவு வழங்கிய அனைத்து நல்லிதயங்களுக்கும் முதலில் எங்கள் மனம் நிறைந்த நன்றிகள். நேசக்கரம் கல்வித்திட்டம் 2013ம் ஆண்டை கடந்த வருடத்து முன்னெடுப்பை விட பன்மடங்கு மேம்படுத்த வேண்டிய தேவையை கடந்த வருடம் பங்கேற்ற மாணவர்களின் தொகையும் பாடசாலைகளின் விண்ணப்பங்களும் உணர்த்தியுள்ளன. கடந்த வருடம் கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிப்புற்ற இடங்களைத் தெரிவு செய்திருந்தோம் இவ்வருடம் போரால் பாதிப்புற்ற வடகிழக்கு இரு மாகாணங்களையும் உள்ளடக்கிய பயிற்சி நெறிகளை முன்னெடுக்கவுள்ளோம். எமது பயிற்சிநெறியினை … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், January 16th, 2013, Comments Off on “நேசம் கல்வித்திட்டம் 2013” புலமைப்பரிசில் மாணவர்களுக்கு உதவுங்கள். | nesakkaram