மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமம் பொங்கல் விழா.

குடியேற்ற கிராமமான ஆனந்தபுரம் கிராமத்தில் முதலாவது பொங்கல் விழாவானது வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவரின் உதவியில் ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கு 52500ரூபா பெறுமதியான பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது. மெல்ல மெல்ல வளர்ச்சி காணும் ஆனந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எமது அமைப்பின் பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர். புதுவருடத்திலிருந்து புதிய திட்டங்கள் பலவற்றை அறிமுகம் செய்துள்ள எமது அமைப்பின் எண்ணங்களோடு தங்கள் ஆதரவை வழங்கி … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், February 7th, 2015, Comments Off on மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமம் பொங்கல் விழா. | nesakkaram

ஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு.

ஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு.

மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது. ஆனந்தபுரம் கிராமத்தில் குடியேறிய குடும்பங்களுக்கான பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான உதவியை வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலையேற்று தங்கள் உதவியை வழங்க முன்வந்த உறவுகளான எமது திரு.திருமதி தெய்வேந்திரன் வதனி (வட்வெட்டித்துறை) கதிரவேற்பிள்ளை சீதாலக்ஸ்மி குடும்பத்தினரின் ஆதரவில் 41குடும்பங்களுக்கும் 410 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. அமரர்கள் நடராசா சறோயினிதேவி தம்பதிகளின் நினைவுநாளை முன்னிட்டு 14குடும்பங்களுக்கான தென்னைமரக்கன்றுகள் வழங்குவதற்கான … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 16th, 2015, Comments Off on ஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு. | nesakkaram

யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு

யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு

யாழ்கருத்துக்கள மட்டுறுத்தினர்களில் ஒருவரான நிழலி அவர்கள் 15.12.2014 அன்று தனது 40வது பிறந்தநாளில் 120 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட குடும்பநல வாழ்வாதார உதவிகளை தனது சக்திக்கு மேற்பட்டு பலவகையில் உதவி வருவதோடு நின்றுவிடாமல் பல வகையில் செயற்பட்டு வரும் ஒருவர். 2009யுத்தத்தில் மாவீரர்களான குடும்பமொன்றின் குழந்தைகள் 2பேரை கடந்த 3வருடங்களுக்கு மேலாக மாதாந்த உதவி வழங்கி வருவதோடு மாவீரர்களின் தாயார் ஒருவருக்கும் மாதாந்தம் உதவிவருகிறார் நிழலி. நிழலியின் பணிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் அவரது … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், December 18th, 2014, Comments Off on யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு | nesakkaram

பதுளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி வழங்கல்

மீரியப்பத்தையில் கைவிடப்பட்ட தேயிலைத்தொழிற்சாலையில் தங்கியிருக்கும் 89குடும்பங்களின் 100பிள்ளைகளுக்கான பாதணிகள் காலுறைகள் நேசக்கரம் அமைப்பினால் 05.12.2014 அன்று வழங்கப்பட்டது. பதுளை பண்டாரவளை பூனாகலை மககந்தை மீரியப்பத்தை செயலர் பிரிவில் தற்காலிகமாக தங்கியிருக்கும் குடும்பங்களின் வீடுகள் இயற்கை அனர்த்தத்தினால் அழிந்து போயுள்ளமையால் தொடர்ந்தும் பல சிரமங்களை எதிர்கொள்வதோடு சொந்த குடியிருப்புகளுக்கு செல்ல முடியாதுள்ளார்கள். மீளவும் குடியேறுவதற்கான வீடுகள் இன்னும் அமைக்கப்படாத நிலமையில் அவலத்தை சுமந்து வாழும் இம்மக்களின் துயர் போக்க வேண்டிய அரசியல் தலைமைகள் இன்னும் மௌனிகளாகவே இருக்கிறார்கள். ஏற்கனவே … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், December 10th, 2014, Comments Off on பதுளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி வழங்கல் | nesakkaram

தண்ணீருக்கு நேசக்கரம் தந்த சந்துருவுக்கு நன்றிகள்.

மட்டக்களப்பு செங்கலடி பிரதேச செயலர் பிரிவு வந்தாறு மூலை மேற்கு கிராமசேவகர் பிரிவுக்கு உட்பட்ட ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கான குடிநீர் வசதி செய்து தருமாறு யாழ் இணையம் மூலம் கோரியிருந்தோம். புங்குடுதீவு மக்கள் ஒன்றியம் பிரான்ஸ் அமைப்பின் பொருளாளர் லோகேஷ்வரன் அவர்களது புதல்வர் சந்துரு அவர்கள் தானே குடிநீர் வசதியைச் செய்து தருவதாக முன்வந்து தேவையான முழுமையான பண உதவியை வழங்கியிருந்தார். செல்வன் சந்துருவுக்கு , அவரது பெற்றோர்களான லோகேஷ்வரன், சசிகலா தம்பதியினருக்கும் இந்நேரத்தில் எமது … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 26th, 2014, Comments Off on தண்ணீருக்கு நேசக்கரம் தந்த சந்துருவுக்கு நன்றிகள். | nesakkaram

தொழில் உதவி நன்றிக்கடிதம்

தொழில் உதவி நன்றிக்கடிதம்
Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 14th, 2014, Comments Off on தொழில் உதவி நன்றிக்கடிதம் | nesakkaram

தொழில் உதவி நன்றிக்கடிதம்

தொழில் உதவி நன்றிக்கடிதம்
Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், September 14th, 2014, Comments Off on தொழில் உதவி நன்றிக்கடிதம் | nesakkaram

எட்டுலட்சரூபாய் உதவிகளை வழங்கிய கனடிய நண்பர்கள் றவி, சுரேஷ்.

நேசக்கரம் சமூகப்பணிகளில் இணைந்து கடந்த ஒருவருட காலத்தில் றவி, சுரேஷ்(கனடா) நண்பர்கள் இருவரும் இணைந்து இதுவரையில் எமக்கு 800000.00ரூபா (எட்டுலட்சரூபாய்கள்) உதவியுள்ளார்கள். போரால்பாதிக்கப்பட்டவர்களின் வாழ்வாதார கல்வி மேம்பாட்டுக்கான தங்கள் உதவிகளை வழங்கி தாயகத்திற்கான பணிகளில் தங்களையும் இணைத்து எம்மோடு தொடர்ந்து வரும் நண்பர்கள் றவி , சுNhஷ் ஆகியோருக்கு எங்களது இதயம் நிறைந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். நேரில் ஆளையாள் அறிந்தவர்களே குற்றம் குறை பழி தீர்த்தல் என சுயநலத்தோடு நேசக்கரம் மீது அள்ளியெறிந்த சேற்றுக்குள்ளிருந்து மீள … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 20th, 2014, Comments Off on எட்டுலட்சரூபாய் உதவிகளை வழங்கிய கனடிய நண்பர்கள் றவி, சுரேஷ். | nesakkaram

வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட 14குடும்பங்கள்.

வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட 14குடும்பங்கள்.

எமது உப அமைப்பான அரவணைப்பின் வழிகாட்டலில் 2013 யூன் மாதம் குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் கல்வி , சமூக வலுவூட்டல் பணியை ஆரம்பித்திருந்தோம். இங்கு வாழும் 27 குடும்பங்களினதும் குழந்தைகளுக்கான கல்வியூட்டலில் குழந்தைகள் நிறைந்த பயனைப் பெற்றுள்ளனர். 27 குடும்பங்களைக் கொண்ட குசேலன்மலை (கரடியன்குளம்) கிராமத்தில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட 14 குடும்பங்களுக்கான சுயதொழிலுக்கான வலைகள் , மீன்பெட்டி, தராசு,தங்கூசி, நூல்கட்டை, தூண்டில் போன்ற பொருட்கள் 17.07.2014 அன்று வழங்கப்பட்டது. அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா தலைமையில் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், July 21st, 2014, Comments Off on வாழ்வாதார உதவி பெற்றுக்கொண்ட 14குடும்பங்கள். | nesakkaram

மருத்துவ உதவி பெற்ற உறவின் நன்றி

மருத்துவ உதவி பெற்ற உறவின் நன்றி
Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், July 18th, 2014, Comments Off on மருத்துவ உதவி பெற்ற உறவின் நன்றி | nesakkaram