சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினர் வழங்கிய உதவிக்கு நன்றிகள்.

போரால் பாதிப்புற்ற மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவு பற்று கோட்டத்தில் 32 பாடசாலைகள் இயங்குகின்றது. இப்பிரதேசமானது வளங்கள் குறைந்த மிகவும் பின் தங்கிய பிரதேசமாகும். இப்பாடசாலைகளில் கற்கும் மாணவர்களின் கல்வித் தரத்தினை உயர்த்தும் முகமாக நேசக்கரம் அமைப்பானது பலவகையிலான உதவிகளை வழங்கி வருகிறது. இப்பகுதிகளில் வாழும் மாணவர்களுக்கான புத்தகப்பைகள் மற்றும் மழை , வெயில் காலங்களில் மாணவர்கள் பாவிப்பதற்கான குடைகளை சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினருக்கு முன்வந்து வழங்கியுள்ளனர். எம்மால் தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் கற்கும் பாடசாலைகளில் ஒன்றான ஆணைகட்டியவெளி … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 27th, 2014, Comments Off on சுவிஸ் பபிக்கோன் தமிழர் ஒன்றியத்தினர் வழங்கிய உதவிக்கு நன்றிகள். | nesakkaram

தேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு

தேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு

மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலர் பிரிவிலுள்ள கொடுவாமடு கிராம சேவையாளர் பிரிவுக்கு உட்பட்ட தம்பனாம்வெளி கிராமத்தில் பாடசாலைக் கல்வியின் முக்கியத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் தேன்சிட்டு உளவள அமைப்பின் ஒருநாள் விழிப்பணர்வு செயலமர்வு 06.03.2014அன்று நடைபெற்றது. நிகழ்வில் அதிதிகளாக பிரதேச செயலாளர் உதயசிறீதர் , கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை , கிராமசேவையாளர் கோகுலன், அரவணைப்பு அமைப்பின் தலைவர் அருணா , நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பின் உப அமைப்பாளர் ரஜிக்காந்தன் மற்றும் ஆலோசனைக் குழுவின் தலைவர் ஜெனன் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 11th, 2014, Comments Off on தேன்சிட்டு உளவள அமைப்பின் விழிப்புணர்வு செயலமர்வு | nesakkaram

எழுவான் அமைப்பு மீளச்செலுத்திய கடனுதவி.

மன்னார் மாவட்டம் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதார மேம்பாட்டை உயர்த்தும் வகையில் எம்மர் உருவாக்கப்பட்ட எழுவான் அபிவிருத்திச் சங்கம் ஊடாக 2013ம் ஆண்டு 13குடும்பங்களுக்கான வாழ்வாதார ஊக்குவிப்பு கடனுதவி 274905,09ரூபா வழங்கியிருந்தோம். கடனுதவியைப் பெற்றவர்கள் கடந்த வருடம் 60200.00ரூபாவும் இவ்வருடம் பெப்ரவரி மாதம் 30ஆயிரம் ரூபாவுமாக இதுவரையில் 90200.00ரூபாவினை மீளச்செலுத்தியுள்ளனர். தொடர்ந்து தம்மால் கடனுதவியை செலுத்த முடியாத நிலமையில் இரு குடும்பங்கள் தொடர்பிலும் இல்லாது விலகிவிட்டார்கள். இவர்கள் தொடர்புக்காக தந்த தொலைபேசியிலக்கம் யாவும் செயலிழந்த நிலமையில் இருக்கிறது. … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், March 2nd, 2014, Comments Off on எழுவான் அமைப்பு மீளச்செலுத்திய கடனுதவி. | nesakkaram

டென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா.

டென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா.

19.01.2014 அன்று மட்டக்களப்பு குசேலன்மலை மாணவர்கள் 42பேருடனும் எமது உறுப்பினர்களும் இணைந்து பொங்கல் விழாவினைக் கொண்டாடியுள்ளனர். மிகவும் வறுமைக் கோட்டுக்கு உட்பட்ட போரால் பாதிப்புற்ற மேற்படி கிராமத்தின் 27குடும்பங்களைச் சேர்ந்த 42 பிள்ளைகளுக்கான கற்பித்தல் செயற்பாடானது நேசக்கரம் அமைப்பின் உப அமைப்புகளில் ஒன்றான அரவணைப்பு அமைப்பின் கவனிப்பின் கீழ் இயங்கி வந்தது. இவ்வருடம் தேன்சிட்டு உளவள அமைப்பின் சிறப்புக் கவனிப்பினுள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு இனிவரும் காலங்களில் குசேலன்மலை பிள்ளைகளின் உளவள கல்வி மேம்பாட்டின் முழுமையான கவனிப்பையும் தேன்சிட்டு அமைப்பு … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 30th, 2014, Comments Off on டென்மார்க் அன்னை அறக்கட்டளை ஆதரவில் நேசக்கரம் 2014 பொங்கல் விழா. | nesakkaram

தேன்சிட்டு உளவள அமைப்பு 2013 முன்னேற்ற அறிக்கை.

தேன்சிட்டு உளவள அமைப்பு 2013 முன்னேற்ற அறிக்கை.

2013ம் ஆண்டு ஆவணி முதலாம் திகதி நேசக்கரத்தின் உப அமைப்புகளில் ஒன்றாக தேன்சிட்டு உளவள அமைப்பினை ஆரம்பித்திருந்தோம். போருக்குப் பின்னர் அதிகரித்துள்ள தற்கொலைகள் , சமூகச்சீர்கேடுகள் , மன அழுத்தப் பாதிப்பு என பல்வகையில் பாதிக்கப்பட்டவர்களின் உளவள ஆரோக்கியத்தை மேம்படுத்தலை நோக்காகக் கொண்டு உருவாக்கப்பட்ட இவ்வமைப்பினால் 50இற்கும் மேற்பட்ட பாலர்கள் பயனடைந்துள்ளார்கள். 01.08.2013 அன்று அம்பாறையில் 2 கிராமங்களில் வாழும் போரால் பாதிக்கப்பட்ட வறுமையில் வாழும் குடும்பங்களின் 75 பாலர்களுக்கு கற்றல் உபகரணங்கள் வழங்கி எமது முதல் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 18th, 2014, Comments Off on தேன்சிட்டு உளவள அமைப்பு 2013 முன்னேற்ற அறிக்கை. | nesakkaram

நேசக்கரம் சர்வதேச மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் முதல் வெற்றி.

நேசக்கரம் சர்வதேச மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் முதல் வெற்றி.

பல்கலைக்கழகத்திற்குத் தெரிவான மருத்துவ , இயந்திரபீட மாணவர்களின் நிர்வாக வழிநடத்தலில் உருவாக்கப்பட்ட எமது உப அமைப்பானசர்வதேச  மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் பிரதிநிதிகளின் சிறந்த வழிகாட்டலில் 2013 ஆண்டு க.பொ.த.சாதாரணதரம் தோற்றிய மாணவர்களிற்கான கணித விஞ்ஞான பாடங்களுக்கான பயிற்சி வகுப்புக்களை ஒரு மாதம் வரையில் 4 நிலையங்களில் நடாத்தியிருந்தோம். போரால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு பகுதியில் எம்மால் தெரிவு செய்யப்பட்ட கரடியனாறு , உன்னிச்சை, புல்லுமலை, கோப்பாவெளி, உறுகாமம், கித்துள், இலுப்பட்டிசேனை, கரடியனாறு, பன்குடாவெளி, கோரகல்லிமடு, சந்திவெளி, கிரான், கறுவாக்கேணி, … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 18th, 2014, Comments Off on நேசக்கரம் சர்வதேச மாணவர் ஊக்குவிப்பு ஒன்றியத்தின் முதல் வெற்றி. | nesakkaram

ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி

ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி

ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவிக்கான தங்கராசாவின் நன்றிக்கடிதம். இவ்வுதவியை முன் வந்து வழங்கிய பிரித்தானியா நிவேதா அவர்களுக்கு மிக்க நன்றிகள்.   குறித்த உறவால் கடிதம் எழுதும் திறன் இல்லாமையால் பிறிதொரு நபர் எழுதிக் கொடுத்த கடிதத்தில் ரமேஷ் அவர்கள் ஒப்பமிட்டுத் தந்துள்ளார். தொடர்புபட்ட செய்தி இணைப்பு :- http://nesakkaram.org/ta/%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0/

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 8th, 2014, Comments Off on ஊனமுற்ற தங்கராசா ரமேஷ் அவர்களுக்கு வழங்கப்பட்ட உதவி | nesakkaram

தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013.

தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013.

தமிழ்க் கலைகளை வளர்க்கும் நோக்கிலும் கலைத்துறையில் ஆர்வம் மிக்க இளையோரை ஊக்குவித்து முன்னேற்றும் வகையிலும் நேசக்கரம் உப அமைப்பான நேசம் அமைப்பின் ஏற்பாட்டில் முதல் முயற்சியாக 04.11.2013 – 05.11.2013 வரையான இரண்டு நாட்களும் நாட்டார் பாடல் போட்டியினை நடாத்தியுள்ளோம். மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட போரால் பாதிக்கப்பட்ட இன்னும் பழைய வாழ்வுக்குத் திரும்பாத வறுமையும் வசதிகளாலும் பின்தங்கிய நிலமையில் இருக்கும் கதிரவெளியில் முதல் கட்டமாக 6பாடசாலைகளைச் சேர்ந்த தேர்வு செய்யப்பட்ட34 மாணவர்கள் தேன்சிட்டு … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், November 7th, 2013, Comments Off on தேன்சிட்டு நாட்டார்பாடல் இசைவிருது 2013. | nesakkaram

புலமைப்பரிசில் 2013 மாணவர்கள் வழிகாட்டி கையேடு கணக்கறிக்கை

புலமைப்பரிசில் 2013 மாணவர்கள் வழிகாட்டி கையேடு கணக்கறிக்கை

நேசம் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் 2013புலமைப்பரிசில்  மாணவர்களுக்கான வழிகாட்டி கையேடு வினாத்தாழ்களை வழங்கி மாணவர்களின்  அடைவுமட்ட உயர்வுக்கான ஆதரவினை நேசக்கரம் வழங்கியிருந்தது. எம்மால் தயாரிக்கப்பட்ட வழகாட்டி கையேடு வினாத்தாழ்களுக்கான கணக்கறிக்கை :-       3 வழிகாட்டிகளிலும் 3ஆயிரம் வழிகாட்டிகள் எமது களப்பணியாளர்களின் நிதியுதவியில் வழங்கப்பட்டது. தங்கள் பணிகளின் மத்தியிலும் தங்களது பங்களிப்பை வழங்கிய எமது களப்பணியாளர்கள் அனைவருக்கும் நன்றிகள். மொத்தம் 197700.00ரூபா (ஒரு இலட்சத்துத் தொண்ணு10றாயிரம் ரூபா) செலவு. இவ்வுதவியை வழங்கிய உறவுகளுக்கு எங்கள் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், கணக்கறிக்கைகள், November 1st, 2013, Comments Off on புலமைப்பரிசில் 2013 மாணவர்கள் வழிகாட்டி கையேடு கணக்கறிக்கை | nesakkaram

புலமைப்பரிசில் சித்தியடைந்த 88மாணவர்களுக்கான நேசக்கரம் கௌரவிப்பு நிகழ்வு.

புலமைப்பரிசில் சித்தியடைந்த 88மாணவர்களுக்கான நேசக்கரம் கௌரவிப்பு நிகழ்வு.

மண்முனை மேற்கு கல்வி வலய பாடசாலைகளின் அதிபர் சங்கமும் நேசக்கரம்பிறைட் பியூச்சர் அமைப்பின் உப அமைப்பான அரவணைப்பு அமைப்பும் இணைந்து 88 புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு மட்டகளப்பு கரடியானாறு மகாவித்தியாலய மண்டபத்தில் 29.10.2013 அன்று கோட்டக்கல்விப் பணிப்பாளர் முருகேசுப்பிள்ளை (ஏறாவூர்பற்று மேற்கு) தலைமையில் இடம்பெற்றது. நிகழ்வில் பிறைட் பியுச்சர் நேசக்கரம் அமைப்பின் அமைப்பாளர் திரு.ஜனனன் , சமூக ஒருங்கிணைப்பாளர் திரு. ரஜிகாந்த்  ,அரவணைப்பு அமைப்பின் தலைவர் திரு.றொஷான் , செயலாளர் திரு.அருணா , முன்னாள் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், October 29th, 2013, Comments Off on புலமைப்பரிசில் சித்தியடைந்த 88மாணவர்களுக்கான நேசக்கரம் கௌரவிப்பு நிகழ்வு. | nesakkaram