உதவி பெற்ற ஜோன்சனின் நன்றி

உதவி பெற்ற ஜோன்சனின் நன்றி
Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 23rd, 2013, Comments Off on உதவி பெற்ற ஜோன்சனின் நன்றி | nesakkaram

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக்குக் கிடைத்த உதவி.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக்குக் கிடைத்த உதவி.

மட்டக்களப்பு மயிலம்பாவெளி , தன்னாமுனையைச் சேர்ந்த சுந்தரதாஸ்அவர்கள் மூளைப்புற்றுநோய் கண்டறியப்படாமல் நீண்ட நாட்கள் நோயோடு போராடினார். 3பிள்ளைகள் குடும்பத்தோடு வாழ்ந்து சுந்தரதாஸ் அவர்கள் தனது குடும்ப வாழ்வாதாரத்திற்கான வசதிகள் ஏதுமற்ற நிலமையில் எம்மிடம் உதவி கோரியிருந்தார். இவருக்கான முதல்கட்ட உதவியினை கருணையுள்ளம் கொண்ட எழிலி பொன்னுத்துரை அவர்கள் முன்வந்து வழங்கியிருந்தார். உதவி பெற்ற சுந்தரதாஸ் அவர்களது நன்றிக்கடிதம் :-   தொடர்புபட்ட செய்தி :- http://nesakkaram.org/ta/%E0%AE%AE%E0%AF%82%E0%AE%B3%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%AA/

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 23rd, 2013, Comments Off on புற்றுநோயால் பாதிக்கப்பட்ட முன்னாள் போராளிக்குக் கிடைத்த உதவி. | nesakkaram

ஊனமுற்ற சிறுவன் அனுராஜ் அவர்களுக்கு சக்கரநாற்காலி

ஊனமுற்ற சிறுவன் அனுராஜ் அவர்களுக்கு சக்கரநாற்காலி

ஊனமுற்று நடக்க முடியாத நிலமையில் வாடும் சிறுவன் அனுராஜ் அவர்களுக்கான சக்கரநாற்காலியினை பெற்றோர் எமது நிறுவனத்திடம் கோரியிருந்தனர். இவ்வுதவியை யேர்மனியிலிருந்து யோனாஸ் அவர்கள் முன்வந்து வழங்கியுள்ளார். சக்கரநாற்காலி வேண்டுதல் கடிதம்:- படங்கள் :- சக்கரநாற்காலி பெற்றுக் கொண்டமைக்கான நன்றிக் கடிதம் :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 23rd, 2013, Comments Off on ஊனமுற்ற சிறுவன் அனுராஜ் அவர்களுக்கு சக்கரநாற்காலி | nesakkaram

நேசக்கரம்’தேன்சிட்டு உளவள அமைப்பு’ உதயம்

நேசக்கரம்’தேன்சிட்டு உளவள அமைப்பு’ உதயம்

நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பின் உப அமைப்பான ‘தேன்சிட்டு’ உளவள அமைப்பின் அங்குரார்ப்பண நிகழ்வும் உளவள பயிற்சிநிலையம் ஆரம்பமும் 01.08.2013 அன்று சம்பிரதாய பூர்வமாக ஆரம்பிக்கப்பட்டது. ஆலயடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட அலிகம்பை , கலியாமாடு  கிராமங்களைச் சேர்ந்த சுமார் 75 சிறார்களுக்கான  உளவள  பயிற்சிநிலையம் ‘தேன்சிட்டு’  அமைப்பினால் ஆரம்பிக்கப்பட்டு வைக்கப்பட்டுதுள்ளது. பயிற்சிநெறியில் கலந்து கொண்ட அனைத்துச் சிறுவர்களுக்கும்  உணவு , சித்திரம் வரைதல் கொப்பிகள், வர்ணப்பென்சில்களும் வழங்கப்பட்டது. ‘தேன்சிட்டு உளவள அமைப்பு’ அங்குரார்ப்பண நிகழ்வில் எமது அமைப்பின் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 3rd, 2013, Comments Off on நேசக்கரம்’தேன்சிட்டு உளவள அமைப்பு’ உதயம் | nesakkaram

புல்லுமலை மாணவர்களுக்கு உதவியும் நூலகத்திற்கான நூல்கள் வழங்கலும்

01.08.2013 அன்று மட்டக்களப்பு மாவட்டம் பெரியபுல்லுமலை கிராமத்தின் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையில் நூலகத்திற்கு தேவையான நூல்களும் அனைத்து மாணவர்களுக்கும் புகுத்தகப்பைகளும் வழங்கும் நிகழ்வு நடைபெற்றது.இந் நிகழ்வினை பிறைட்பியுச்சர் நேசக்கரத்தின் உப அமைப்பான அரவணைப்பு அமைப்பின் உறுப்பினர்கள் நிகழ்வை ஒருங்கிணைத்து நடாத்தியிருந்தனர். பாடசாலை அதிபர் திரு.சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயளாளர் திரு.ரு.உதயஸ்ரீதர் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் மட்டக்களப்பு மேற்கு வலய கல்விப்பணிப்பாளர் திரு.ரவிச்சந்திரன், கிராமசேவகர் திரு.சோமபால  மற்றும் மட்டக்களப்பு மேற்கு வலய … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், August 3rd, 2013, Comments Off on புல்லுமலை மாணவர்களுக்கு உதவியும் நூலகத்திற்கான நூல்கள் வழங்கலும் | nesakkaram

2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்

2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள்

மட்டக்களப்பு மேற்கு வலயம் ஏறாவூர் மேற்கு கோட்டப்பிரதேசத்தில் நடைபெறும் 2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் தொடர்ந்து  நடைபெற்று வருகிறது. நேசம் இலவச வழிகாட்டி பயிற்சி முன்னோடிப் பரீட்சைகளில் மேற்படி கோட்டப் பிரதேசத்தில் சிறந்த மதிப்பெண்களைப் பெற்ற 48மாணவர்களுக்குமான சிறப்பு தயார்படுத்தல் பயிற்சி வகுப்பினை ஆவணி 24ம் திகதி வரையும் நடாத்த திட்டமிட்டு மாணவர்களுக்கான தொடர் பயிற்சிநெறி நடைபெற்று வருகிறது. இம்மாணவர்கள் அனைவரும் திங்கள் தொடக்கம் சனிக்கிழமை வரையிலும் தங்கி நின்று கல்வியைப் பெறுகின்றனர். … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், July 10th, 2013, Comments Off on 2013 புலமைப்பரிசில் 5ம் வகுப்புத் தேர்வுக்கான பயிற்சி வகுப்புகள் | nesakkaram

நாவலர் ஆங்கிலபாடசாலை பாலர்களுக்கு சீருடை வழங்கல்

நாவலர் ஆங்கிலபாடசாலை பாலர்களுக்கு சீருடை வழங்கல்

மட்டக்களப்பு மாநகர எல்லைக்குள் சுமார் 900 குடும்பங்களை கொண்ட நாவற்குடா கிழக்கு எனும் பின்தங்கிய கிராமம் உள்ளது. இங்கு சிறார்களின் கல்வி மேம்பாட்டுக்காக இவ்வூர் கிராம அபிவிருத்திச் சங்கம் நாவலர் ஆங்கில பாலர் பாடசாலை ஒன்றினை 2013 தை மாதம் முதல் நடத்தி வருகின்றது. இங்கு ஆரம்பக்கல்வியைப் பெற்றுவரும் 16 பாலர்களுக்கு சீருடையினை நேசக்கரம் வழங்கியுள்ளது. இன்று ஆங்கிலப்பாடசாலைகள் பணக்காரர்களுக்கு மட்டுமேயான ஒன்றாகவுள்ளது. இந்நிலையில் ஏழைமாணவர்களும் ஆங்கிலக்கல்வியைப் பெற வைக்கும் நோக்கில் ஆசிரியர்களுக்கான சிறிய கொடுப்பனவின் ஒருபகுதி … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், June 15th, 2013, Comments Off on நாவலர் ஆங்கிலபாடசாலை பாலர்களுக்கு சீருடை வழங்கல் | nesakkaram

ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம்.

ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம்.

ஒரு நாட்டின் உயர்ச்சி கிராமங்களிலேயே தங்கியுள்ளது. ஆனால் தமிழர் பிரதேசங்களைத் தின்றுமுடித்த போரின் வடுக்களாக மிஞ்சியிருப்பது வறுமையும் துயரமும் வாழ்வாதார முன்னேற்றத்தில் மிகவும் பின் தங்கிய நிலமையே காண்கிறது. இந்த வகையில் பெயர் அறியப்படாத பெயர் தெரியாத தமிழர் கிராமங்கள் எத்தனையோக கிழக்கு மாகாணத்தில் இருக்கிறது. அத்தகைய கிராமங்களில் ஒன்று மட்டக்களப்பு மாவட்டம் செங்கலடி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட கரடியனாறு கிராம உத்தியோகத்தர் பிரிவு கரடியன்குளம் குசேலன்மலை எனப்படும் கிராமமும் ஒன்றாகும். இங்கு 27குடும்பங்கள் மட்டுமே வாழ்கின்றனர். … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், உப அமைப்புகள், செய்திகள், June 11th, 2013, Comments Off on ஏழைக்கிராமமொன்றின் வளர்ச்சியை நோக்கிய பாதையில் நேசக்கரம். | nesakkaram

நேசக்கரம் ஆதரவில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வு

நேசக்கரம் ஆதரவில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வு

மட்டக்களப்பு பட்டிருப்பு மகாவித்தியாலயம் கழுவாஞ்சிக்குடி தேசிய பாடசாலையின் 94வது பாடசாலை தினமும் கண்காட்சியும் மேமாதம் 29.05.2013 தொடக்கம் 3.05.2013 வரையான 3நாட்கள் நடைபெற்றது. கண்காட்சி நிகழ்வுக்கான வேறு உதவிகள் எதுவும் கிடைக்காத நிலமையில் இறுதித்தருணத்தில் இக்கண்காட்சியினை நடாத்தவதற்கான ஆதரவினை பட்டிருப்பு பாடசாலை அதிபர் எம்மிடம் கோரியிருந்தார். உடனடியான முழுமையான ஆதரவினை எம்மால் வழங்க முடியாமையினால் 3நாட்களும் நடைபெற்ற கண்காட்சிக்கான ஆங்கில பாடத்துக்குரிய பொருட்களை வழங்கியதோடு ஆங்கில சொல்விளையாட்டு பாடத்துக்குரிய பரிசாக 2500பென்சில்களையும் , 50 மாணவர்களுக்குரிய வெற்றிக் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், June 9th, 2013, Comments Off on நேசக்கரம் ஆதரவில் நடைபெற்ற கண்காட்சி நிகழ்வு | nesakkaram

நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு நடாத்திய கரப்பந்தாட்டம்.

நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு நடாத்திய கரப்பந்தாட்டம்.

25.05.2013 அன்று  மட்டக்களப்பில் நேசக்கரம் பிறைட் பியூச்சர் அமைப்பினால் கரப்பந்தாட்டப் போட்டி நடாத்தப்பட்டது. விபுலானந்த விளையாட்டு கழக மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் :- கடல் மீன்கள் விளையாட்டு கழகம் வாழைச்சேனை விளையாட்டு கழகம் ஆரையம்பதி விளையாட்டு கழகம் கிரான் விளையாட்டு கழகம் கல்லாறு விளையாட்டு கழகம் விபுலானந்த விளையாட்டு கழகம் சிவானந்த விளையாட்டு கழகம் நியூ சவுண்ட் விளையாட்டு கழகம் எவக்ரீன் விளையாட்டு கழகம் லைட் ஹவுஸ் விளையாட்டு கழகம் ஆகிய பத்து விளையாட்டுக் கழகங்கள் பங்குபற்றியிருந்தன. … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், May 31st, 2013, Comments Off on நேசக்கரம் பிறைட்பியூச்சர் அமைப்பு நடாத்திய கரப்பந்தாட்டம். | nesakkaram