ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதியின் கடிதம்

ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதியின் கடிதம்

சந்திரபோஸ் செல்வச்சந்திரன். 33வயது.27.11.2006 கைதுசெய்யப்பட்டு இன்று 6 வருடங்களாக தடுத்து வைக்கப்பட்டுள்ளார். இவர் இரத்தப்புற்றுநோயால் பாதிக்கப்பட்டு மிகுந்த சிரமத்தோடும் வலியோடும் சிறையில் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அணுவணுவாய் உயிரை அரிக்கிற நோயால் பீடிக்கப்பட்டு சிறைக்கம்பிகளின் பின்னால் வாழ்கிற இந்த மனிதனுக்கு இரக்கம் காட்ட யாருமேயில்லை. இறுதி யுத்தத்தில் செல்வச்சந்திரனின் குடும்பமும் அதிக இழப்புகளைத் தாங்கியிருக்கிறது. வாழப்போகும் தனது மீதி நாட்களில் தனக்காக எதனையும் எதிர்பார்க்காத செல்வச்சந்திரன் வலியிலிருந்து மீளத்தனக்கு மருத்துவம் கேட்கிறார். தனது குடும்பத்திற்கு ஒரு வருமானத்தை ஏற்படுத்த … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், ஒலிப்பதிவுகள், செய்திகள், November 6th, 2011, Comments Off on ஈரல் புற்றுநோயோடு சிறையில் இறந்து கொண்டிருக்கும் கைதியின் கடிதம் | nesakkaram

ஜெகதீஸ்வரனுக்காக உதவிய உறவுகளே உங்களுக்காக கண்ணீரோடு சில வரிகள்

கடந்த சில மாதங்களாக தனது உயிருக்காக போராடிக் கொண்டிருக்கிற ஜெகதீஸ்வரனெண்ட ஒரு முன்னாள் போராளியை விடுவிக்கிறதுக்கும் அவருக்கான சிகிச்சையை செய்யிறதுக்கும் மனிதநேயப்பணியாளர்களும் அவருடைய குடும்பமும் பெரும் பிரயாசைப்பட்டு உழைச்சதிற்கான பயன் இண்டைக்கு எட்டியிருக்கு. ஜெகதீஸ்வரனுக்கான சிசிச்சையை மேற்கொள்ள பிணை கிடைச்சிருக்கு அது பற்றி அவருடன் இருந்த கைதிகள் அவருடைய அக்கா புலம்பெயர்ந்த உறவுகளுக்கு சொல்ல வருகிறதை இந்த ஒலிப்பதிவிலை கேப்பம்…

Posted in ஒலிப்பதிவுகள், செய்திகள், November 1st, 2011, Comments Off on ஜெகதீஸ்வரனுக்காக உதவிய உறவுகளே உங்களுக்காக கண்ணீரோடு சில வரிகள் | nesakkaram

ஜெகதீஸ்வரனின் இன்றைய நிலை மகசீன் சிறைச்சாலையிலிருந்து

ஜெகதீஸ்வரனின் இன்றைய நிலை மகசீன் சிறைச்சாலையிலிருந்து

உயிருக்குப் போராடும் ஜெகதீஸ்வரனின் நிலமை பற்றி மகசீன் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவர் தருகிற விபரங்கள்…. ஒலிப்பதிவைக் கேட்க மேலுள்ள இணைப்பில் அழுத்திக் கேளுங்கள். முக்கியகுறிப்பு :- ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க உதவ விரும்புவோர் பேபால் ஊடாக அல்லது வங்கியூடாக உதவலாம்.

Posted in ஒலிப்பதிவுகள், செய்திகள், September 30th, 2011, Comments Off on ஜெகதீஸ்வரனின் இன்றைய நிலை மகசீன் சிறைச்சாலையிலிருந்து | nesakkaram

ஜெகதீஸ்வரனைக் காக்குமாறு அவரது அக்காவின் வேண்டுகை

ஜெகதீஸ்வரனைக் காக்குமாறு அவரது அக்காவின் வேண்டுகை

ஜெகதீஸ்வரனெண்ட ஒரு 33வயது இளைஞன் தன்ரை உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிற செய்திகளை அண்மைய நாட்களில நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறம். கடைசியுத்தத்தில காயமடைஞ்சு மருத்துவமனையிலயிருந்தவனை பூசா சிறைக்குக் கொண்டு போயிருக்கினம். அந்தச் சிறையில சரியான மருத்துவமில்லாமல் சரியான கவனிப்பில்லாமல் ஜெகதீஸ்வரன் தன்னுடைய இரண்டு சிறுநீரகமும் முழுமையாப் பாதிக்கப்பட்டு கடுமையான நிலமையில இப்ப கொழும்பு ஆதார வைத்தியசாலையில அவசர சிகிச்சைப்பிரிவில இருக்கிறார். இன்னும் 10கிழமையில இந்த இளைஞனுக்கு மாற்றுச்சிறுநீரகம் பொருத்தாவிட்டா இவரை காப்பாற்றேலாமப் போயிடும். எங்களுக்காக தன்னுடைய காலத்தை வாழ்வைத் தந்த … Read more

Posted in ஒலிப்பதிவுகள், செய்திகள், September 29th, 2011, Comments Off on ஜெகதீஸ்வரனைக் காக்குமாறு அவரது அக்காவின் வேண்டுகை | nesakkaram

கணவனுமில்லை வாழ்வை கொண்டு செல்ல உதவியுமில்லை

ஆயிரமாயிரம் அம்மாக்களின் துயரங்களால் நிறைந்திருக்கிற நிலத்திலிருந்து ஒரு தாயின் கண்ணீர்க்கதைகள். உதவிக்காகவே இந்தத்தாயும் எங்களிடம் உதவி வேண்டி நிற்கிறார்.

Posted in ஒலிப்பதிவுகள், September 13th, 2011, Comments Off on கணவனுமில்லை வாழ்வை கொண்டு செல்ல உதவியுமில்லை | nesakkaram

முள்ளிவாய்க்காலில் சனங்களின் கால்களில் மிதிபட்டு வந்த காலிழந்த பெண்ணின் கண்ணீர்

2009மார்ச்மாதம் 16ம் திகதி இருகால்களையும் சமர்க்களத்தில் இழந்தவள் இவள். முள்ளிவாய்க்காலிலிருந்து புறப்பட்ட மக்கள் வெள்ளத்தில் மிதிபட்டு முட்களும் மனிதக்கால்களும் காயப்படுத்தி உயிரோடு வவுனியாவை அடைந்தவள். முகாமில் பட்ட துயரைச் சொல்லியழும் கதைகள் கண்களை ஈரமாக்கிவிடுகிற துயர்களவை. மலங்களிக்கக்கூட வசதியற்ற முகாமில்  3அல்லது 4நாளுக்கு ஒருமுறை இருளும் வரை காத்திருந்தே இயற்கை உபாதையையும் கழித்திருக்கிறாள். ஊனமுற்றவள் ஊருக்குப் போவதில்லை உறவுகளுக்குத் தொல்லை கொடுப்பதில்லையென்ற முடிவோடு இருந்தவள் முகாமிலிருந்து ஊர்போக வேண்டிய இக்கட்டில் தள்ளியது. பிறந்து 6மாதத்தில் தாயை இழந்தவள் … Read more

Posted in ஒலிப்பதிவுகள், September 7th, 2011, Comments Off on முள்ளிவாய்க்காலில் சனங்களின் கால்களில் மிதிபட்டு வந்த காலிழந்த பெண்ணின் கண்ணீர் | nesakkaram

உறவுகளின்ஆதரவில்லை உதவவும் ஆட்களில்லாத 23வயது இளைஞன்

10வருடங்கள் எங்களுக்காகப் போராடியவன். இன்று காலிழந்து கையும் பாதிப்புற்று உடலில் காயங்களோடு மீண்டிருக்கிற ஒரு முன்னாள் போராளி இவன். முன்னாள் போராளிகள் பல ஆயிரம் பேரின் வாழ்வு போல இவனது வாழ்வும் அச்சம் தருகின்றனவாகவும் அவலம் நிறைந்தனவாகவும் விடிகிறது. இவனுக்கு அம்மாவில்லை அப்பாவில்லை. இவனைப் பெற்றவர்களை இவனுக்குத் தெரியாது. இவனை எடுத்து வளர்த்தவர்கள் மாற்றான் பிள்ளையென ஒதுக்கியதோடு மனசால் மிகவும் நொந்து போனான். இன்றும் இவனை வருத்திக் கொண்டிருக்கும் உறவுகளின் சொல்வதைகளால் தன்னையே வெறுக்கும் நிலமையில் இருக்கிறான். … Read more

Posted in ஒலிப்பதிவுகள், August 13th, 2011, Comments Off on உறவுகளின்ஆதரவில்லை உதவவும் ஆட்களில்லாத 23வயது இளைஞன் | nesakkaram

மனைவியின் கையை மட்டும் நம்பியவனின் குரல் இது

களத்தில் காயமடைந்து கையும் காலும் பாதிக்கப்பட்டு ஒற்றைக் கண்ணையும் இழந்து மறுகண்ணின் பார்வையும் சரியாயில்லாமல் அலைக்கழியும் ஒரு முன்னாள் போராளி இவன். 4வருடம் போராட்ட வாழ்வு 5ம் வருடம் காயமடைந்து இன்று 28வயது இவனுக்கு. மிகவும் பின்தங்கிய கிராமமொன்றில் பிறந்து வளர்ந்து அந்த ஊருக்குள்ளிருந்து தன்னையும் நாட்டுக்காக இணைத்தவன். களம் அவனை நிராகரித்து ஊனமுற்றவனாய் போனவன். திரும்பவும் பிறந்த ஊருக்கே வந்திருக்கிறான். மனைவியின் கையை மட்டும் நம்பிய இவனை ஆயிரமாயிரம் பேரை அவலத்தில் வீழ்த்திய இவ்வருடத்துக் கடும்பழை … Read more

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு நிலவரம் எமது தொடர்பாளர்

வெள்ளத்தால் பாதிப்புற்ற கிழக்க மாகாணம் உறவுகளே உங்களிடம் உதவிகளை வேண்டுகின்றனர். ஓயாத தொடர்மழையால் பெருந்தொகையான மக்கள் பாடசாலைகளில் தஞ்சமடைந்துள்ளனர். குளங்கள் உடைப்பெடுத்து நீரால் சூழப்பட்டுக் கொண்டிருக்கிறது. குடிசைகளில் வாழ்ந்த மக்களின் குடிசைகள் தண்ணீரில் அள்ளுப்பட்டு நீரின் மட்டம் உயர்ந்து கொண்டிருப்பதாக எமது தொடர்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இன்று நேசச்கரம் மட்டக்களப்பு இணைப்பாளரைத் தொடர்பு கொள்ளக் கிடைத்தது. எமது தொடர்பாளரும் பாடசாலையொன்றில் தங்கியிருக்கின்ற நிலமையில் மட்டக்களப்பு நிலவரங்களை எம்முடன் பகிர்ந்து கொண்ட விடயங்களை இங்கே எடுத்து வருகிறோம். எமது புலம்பெயர்ந்த … Read more

Posted in ஒலிப்பதிவுகள், January 12th, 2011, Comments Off on வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மட்டக்களப்பு நிலவரம் எமது தொடர்பாளர் | nesakkaram

வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணத்தின் சமகால நிலவரம்

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள கிழக்கு மாகாணத்தின் சமகால நிலவரங்களை எமது நேசக்கரம் அம்பாறை இணைப்பாளர் முருகபதி அவர்களுடனான உரையாடல். தற்போதைய மக்களின் நிலவரங்களை இவ்வொலிப்பதிவில் கேளுங்கள்.

Posted in ஒலிப்பதிவுகள், January 11th, 2011, Comments Off on வெள்ளத்தில் மிதக்கும் கிழக்கு மாகாணத்தின் சமகால நிலவரம் | nesakkaram