22 வயதுப் பெண் , கணவன் காணாமல் போய்விட்டான் கையில் ஒரு குழந்தையுடன்

இந்தக் குரலுக்கு உரியவளுக்கு 22வயது. இவளுக்கு ஒரு 3வயது ஆண் குழந்தை இருக்கிறான். வன்னிக்குள் வாழ்ந்து வன்னிக்குள்ளேயே வாழ்வை ஆரம்பித்தவளின் வாழ்வு இன்று எங்கே செல்வதெனத் தெரியாத நிலமையில் இருக்கிறாள். இவளது காதல் கணவன் முள்ளிவாய்க்காலில் காணாமற்போய்விட்டான். அவள் உயிருடன் இருப்பதற்கான தடயங்கள் எதுவுமற்று ஒன்றரை வருடங்கள் சென்ற பின்னும் அவனைத் தேடிக்கொண்டிருக்கிறாள். தனது குழந்தைக்காக அன்றாடத் தேவைகளுக்கு யாராவது உதவுவார்கள் என்ற நம்பிக்கையில் உதவிகள் கோரியவளை ஏமாற்றியோர் தான் அதிகமென அழும் இந்த 22வயதுப் பெண்ணின் … Read more

எல்லாம் இழந்தாயிற்று எஞ்சிய பிள்ளைகளின் கல்விக்காக உதவிகோரும் தாய்

இந்தக் குடும்பம் பெரியது. 5 பிள்ளைகள் அம்மா அப்பாவென 7அங்கத்தவர்கள். இடம்பெயர்ந்து முகாமிலிருந்து வந்து தற்போது யாழ் மாவட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். கல்வியை மட்டும் நம்பும் தாயின் கனவுகள் நனவாக பிள்ளைகளுக்கான கல்வியைக் கொடுக்க முடியாத பொருளாதாரச் சுமை. ஓ.எல் பரீட்சையெழுதிய மூத்த மகன் தொடர்ந்து படிக்க பணவசதியில்லாமையால் ஏ.எல் உயர்தரக் கல்வியைத் தொடர முடியாது தனது கல்வியை இடைநிறுத்தி ஒருவருடங்கள் ஆகிறது. மற்றைய தனது 4சகோதரர்களுக்காக வேலைக்குசென்று 3மாதங்களோடு சென்ற வேலையில் சரியான கொடுப்பனவுகள் இல்லாமல் … Read more

3பிள்ளையள் எனக்கு சரியான கஸ்ரம் ஒரு விதவைப் பெண்ணின் கதைகள்

போர் பல்லாயிரம் பெண்களை விதவைகளாக்கி விட்டுள்ளது. கணவர்களை மட்டுமே நம்பிய மனைவிகளின் நிலமையோ நட்டாற்றில் தத்தளிக்கும் அந்தரமாய்ப் போயுள்ளது. நாளும் நம்மை நாடி வரும் குரல்களிலிருந்து கிடைக்கும் தகவல்கள் வறுமையின் கொடுமையும் வாழ்வு மீதான அவநம்பிக்கைகளுமாகவே இருக்கிறது. இந்தக்குரலுக்குரிய 40வயது அக்காவின் கணவன் 2007 மாவீரமாகிவிட்டார். 3பிள்ளைகளோடு தனித்துப்போனாள். பிள்ளைகளை வளர்த்து ஆளாக்கிவிடும் கனவோடு போராடும் இந்தப் பெண்ணுக்கு உதவிக்கு யாருமில்லை. நிம்மதியாய் படுத்துறங்கக்கூட ஒரு நிரந்தரமான கூரையில்லாது உக்கிய குடிசைக்குக் கீழ் மழைக்குளிர் பசியோடு வாழ்கிறார்கள். … Read more

நான் வாழவேயில்லை எனக்கொரு குழந்தை கூட இல்லையே…கடவுள்கூட என்னைக் கவனிக்கேல்ல

ஒருவருட மணவாழ்வோடு இந்தத் தங்கையின் வாழ்வு முடிந்து போனது. தன் காதல் கணவனுடன் வாழ்ந்த வாழ்வின் நாட்களை நினைத்து நினைத்து அழுகின்ற இவளுக்குள் நிறைந்துள்ள துயரங்கள் எங்களுக்குள்ளும் கண்ணீரை வர வைத்துவிட்டுள்ளது. காடுகளோடும் மரங்களோடும் களங்களில் நின்ற காதல் கணவனோடு கடைசி வரையும் நின்றவள். கையில் ஆயுதம் ஏந்தாததைத் தவிர கடினம் நிறைந்த காட்டு வாழ்வையெல்லாம் அனுபவித்தவள். காதலின் பரிசாய் கருவுற்ற குழந்தையும் பாதியில் கரைந்து போக களத்தில் கணவனையும் இழந்து வயிற்றில் வளர்ந்த கருவையும் இழந்து … Read more

கணவனைக்காணவில்லை 3 குழந்தைகளோடு வாழும் வழி தேடும் பெண்ணிவள்

அச்சம் தரும் இரவுகளும் அவலம் நிறைந்த பகல்களும் அடுத்த வேளைச் சோற்றுக்கு வழிதேடும் அந்தரங்களுமாக அலைக்கழிகிறது வாழ்வு. இறந்தோர் இறந்து போயினர் அவர்களது நினைவுகள் தினமும் கொல்ல வாழ்கின்ற துயரங்களை வார்த்தைகளால் சொல்லிட முடியாத துயரங்களுடன் எங்கள் உறவுகளின் துயர்கள். யாருக்குச் சொல்லி யாரிடம் ஆறுதல் பெற்று யாருக்காய் வாழ என்கிறத வெறுப்புகளும் வெறுமையும் நிறைந்த மனங்களே இன்று போர் தின்ற பூமியெங்கும் நிரம்பி வழிகிறது.இத்தகைய அவலங்களைச் சுமந்து கொண்டு தனது 3குழந்தைகளுடன் வன்னியில் ஒரு கிராமமொன்றில் … Read more

பிள்ளைகளையெல்லாம் சாகக் குடுத்திட்டு வந்திருக்கிறம்

இரண்டு மகன்கள் யுத்தத்தில் இறந்து போனார்கள். ஒரு மகன் தடுப்புமுகாமில் இருக்கிறார். இரண்டரை வருட மணவாழ்வு மரணத்தில் முடிந்து அம்மாவின் மகள் இன்று ஒரு விதவை. அம்மாவுக்கு மிச்சமாய் ஒரு பிள்ளை இவள்தான். அண்ணனையும் தம்பியையும் இழந்து மிஞ்சிய இளைய தம்பி தடுப்பில் இருக்கிறான். குடும்பம் முழுவதும் வறுமையில் வாடுகிறது. கொஞ்சம் கொஞ்சமாய் சேர்த்த நகைகளை விற்றுச் சாப்பிட்டாயிற்று இன்றும் எதுவும் இல்லை. கணவனை இழந்த மருமகளும் பேரக்குழந்தையும் அம்மாவின் உதவியை நம்பியே இருக்கிறாள். எவராவது உதவுவார்கள் … Read more

மருத்துவப் போராளி களத்தில் காலொன்றை இழந்தவன் இன்று

இவன் ஒரு மருத்துவப் போராளி. களத்தில் காலொன்றை இழந்து போனான். மருத்துவரும் கடவுளும் ஒன்றென்போம். அந்தக்கடவுளுக்கு நிகராக எத்தனையோ உயிர்களைக் காத்தவன். 17வருடங்களுக்கு மேலாக தனது காலங்களை மண்ணுக்காயும் மண்ணுக்காய் வாழ்ந்த மனிதர்களுக்காகவும் அர்ப்பணித்தவன். கணவன் மனைவி இருவருமே கடைசிவரையும் களத்திலேயே நின்றவர்கள். 2009 மே17 கடைசிக்கள முனையில் ஆயுதங்கள் மெளனிக்கப்பட்டு ஆயிரக்கணக்கில் சரணடைந்த ஆயிரரமாயிரம் பேரோடு இவனும் சரண்புகுந்து ஒன்றரை வருடச்சிறை வாழ்வு முடித்து இவ்வருடம் 9ம் மாதம் ஊருக்குள் சென்றிருக்கிறான். அடுத்த நேர உணவு … Read more

3ஆண்பிள்ளைகளையும் நாட்டுக்குக் கொடுத்துவிட்டு அனாதையாய் போன தாயின் குரல் இது.

இன்றைய குரலுக்குரிய அம்மாவின் 3ஆண்பிள்ளைகளும் மண்ணுக்காக மடிந்து போனார்கள். இன்னும் ஒரு 17வயது மகன் முள்ளிவாய்க்காலில் காணாமல் போய்விட்டான். இன்றைய அம்மாவின் நம்பிக்கை 9வயது மகள் மட்டுமே. இரவல் வீடுகளில் அம்மாவின் வாழ்வு இப்போது கழிகிறது. தனது பிள்ளைகளை இழந்த வலியும் வேதனையும் நிரம்பிய மனசுக்குள் உறைந்து துயரங்களை யாருக்கும் சொல்லவும் முடியாது மெல்லவும் முடியாது துயரங்களால் தின்னப்பட்டுக் கொண்டிருக்கிறார். பள்ளிக்குச் செல்லும் 9வயது மகளின் விருப்பங்களை நிறைவுசெய்ய முடியாது தனக்குள் குமுறும் இந்தத்தாய் தனது மகளுக்கான … Read more

கொத்துக்குண்டுகள் தாக்கி குடும்பமே ஊனமாக…25வருடங்கள் போராளியான ஒரு தந்தையின் குரல்

வறுமை எங்களுக்காய் வாழ்ந்தவர்களை வதைத்துத் தின்கிறது. மரணம் துரத்தத்துரத்த வாழ்வோடு போராடுபவர்கள் இவர்கள் ஒருவரலாற்றின் கதைகளுக்குச் சொந்தக்காரர்கள். 12வயதில் போராளியான இந்த மனிதனுக்கு இன்று 37வயது. 25வருடக்களவாழ்வு , குடும்பம் 4 குழந்தைகள் , கொத்துக்குண்டுகள் தாக்கி குடும்பமே ஊனமாகி…கடைசிக்குழந்தை ஊனமாகப் பிறந்து நம்பிக்கை விட்டுப்போன துயரில் வாழ்வதற்கு வழியற்றுப்போன ஒரு குடும்பத்தின் கதைகள் இந்த ஒலிப்பதிவில்…

இரண்டு கண்ணுமில்லை 5தம்பிகளோடும் கூலிவேலை செய்யும் அம்மாதான் உதவி

இந்த 27வயது இளைஞன் 2007ம் ஆண்டு சமரொன்றில் தன்னிரு கண்களையும் இழந்து போனான். ஏற்கனவே காயமடைந்து மாற்றுவலுவுள்ளோர் பயிற்சிக் கல்லூரியில் கணணியைக் கற்றான். களங்களிலிருந்து ஓய்வுபெற்று கணணியை தன் சக போராளிகளுக்கு கணணியைக் கற்றுக் கொடுத்தான். யுத்தம் உக்கிரமடைந்து யாவரும் களம் செல்ல வேண்டிய நேரத்தில் களத்திற்குச் சென்றவன் தனது கண்ணிரண்டையும் தான் நேசித்த மண்ணுக்காக கொடுத்துவிட்டிருந்தான். உலகம் அவனுக்கு இருண்டு போனது. கடைசிக்கள முடிவுகளோடு முகாமில் அடைந்து ஒரு வருடத்துக்கு மேலாக முகாம் வாழ்வும் முடித்து … Read more

Posted in ஒலிப்பதிவுகள், December 5th, 2010, Comments Off on இரண்டு கண்ணுமில்லை 5தம்பிகளோடும் கூலிவேலை செய்யும் அம்மாதான் உதவி | nesakkaram