யோகீசன் அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையில் கிராமிய அபிவிருத்தி கற்றல்.

யோகீசன் அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையில் கிராமிய அபிவிருத்தி கற்றல்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒன்றரை வருட கிராமிய அபிவிருத்தி கற்கைநெறி எம்மால் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எமது இம்முயற்சிக்கு யெர்மனியை தளமாகக் கொண்டு இயங்கும் „’யோகீசன் அறக்கட்டளை’ அமைப்பின் அனுசரணையும் நிதியுதவியோடும் ஏப்றல் 2015ம் ஆரம்பமாகிய இக்கற்றலில் முதல் கட்டமாக 80 குழுத்தலைவர்களுக்கான கற்பித்தல் செயற்பாடு நடைபெற்று வருகிறது. கிராமங்களில் மாற்றங்களை ஏற்படுத்தாதவரை அடித்தட்டு மக்களின் வாழ்வை உயர்த்த முடியாது என்பது யதார்த்தம். இவ்வுண்மையை உணர்ந்து தனது நேசக்கரத்தை வழங்கிய „’யோகீசன் அறக்கட்டளை’ அமைப்பின் அமைப்பாளர் திரு.டேவிட் யோகீசன் அவர்களை நன்றியுடன் … Read more

Posted in செய்திகள், June 6th, 2015, Comments Off on யோகீசன் அறக்கட்டளை அமைப்பின் அனுசரணையில் கிராமிய அபிவிருத்தி கற்றல். | nesakkaram

200ஏக்கர் நிலத்தில் உருவாகும் மாதிரிக்கிராமம்.

மட்டக்களப்பு வாகரை பிரதேச செயலக பிரிவக்கு உட்பட்ட காரமுனை பகுதியில் நேசக்கரம் கைவினைப் படைப்பாளிகள் அமைப்பினால் 99வருட குத்தகைக்கு 200ஏக்கர் காணி பெறப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதார மேம்பாடு சுயதொழில் ஊக்குவிப்புகளை உயர்த்தும் வகையில் மேற்படி காணி பெறப்பட்டுள்ளது. இந் நிலத்தினை மாதிரிக் கிராமமாக உருவாக்கும் எமது முயற்சிக்கு ஆதரவுகளை வேண்டி நிற்கிறோம். பாற்பண்ணை, மீன் வளர்ப்பு, சேனைப்பயிர்ச்செய்கை ,கால்நடை வளர்ப்பு போன்றவைகள் செய்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது. மேலதிக விபரங்கள் பெற்றுக் கொள்வோர் கீழ்வரும் விபரங்களில் பெற்றுக் … Read more

Posted in செய்திகள், May 17th, 2015, Comments Off on 200ஏக்கர் நிலத்தில் உருவாகும் மாதிரிக்கிராமம். | nesakkaram

100பாலர் பாடசாலை மழலைகளுக்கான கற்றல் உபகரணம் வழங்கல்.

மட்டக்களப்பு சவுக்கடி,ரமேஸ்புரம்,ஐயங்கேணி ஆகிய கிராமங்களின் முன்பள்ளி மழலைகள் 100பேருக்கான உளவள பயிற்சிக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கப்பட்டது. தேன்சிட்டு நேசக்கரம் உளவள அமைப்பின் களச்செயற்பாட்டாளர்களால் தெரிவு செய்யப்பட்ட 100 குழந்தைகளுக்குமான உதவியை 30.03.2015அன்று பிறந்தநாளைக் கொண்டாடிய பெயர் குறிப்பிட விரும்பாத உறவு ஒருவர் வழங்கியிருந்தார். தலா குழந்தையொன்றுக்கு 200ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டது. இவ்வுதவியை முன்வந்து உவந்தளித்த பெயர் குறிப்பிட விரும்பாத உறவுக்கு நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பானது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

Posted in செய்திகள், April 13th, 2015, Comments Off on 100பாலர் பாடசாலை மழலைகளுக்கான கற்றல் உபகரணம் வழங்கல். | nesakkaram

மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமம் பொங்கல் விழா.

குடியேற்ற கிராமமான ஆனந்தபுரம் கிராமத்தில் முதலாவது பொங்கல் விழாவானது வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. நேசக்கரம் தேன்சிட்டு உளவள அமைப்பின் பெயர் குறிப்பிட விரும்பாத உறுப்பினர் ஒருவரின் உதவியில் ஆனந்தபுரம் கிராமத்தில் வாழும் குடும்பங்களுக்கு 52500ரூபா பெறுமதியான பொங்கல் பொருட்கள் வழங்கப்பட்டது. மெல்ல மெல்ல வளர்ச்சி காணும் ஆனந்தபுரம் கிராமத்தில் நடைபெற்ற பொங்கல் விழாவில் எமது அமைப்பின் பணியாளர்களும் கலந்து சிறப்பித்தனர். புதுவருடத்திலிருந்து புதிய திட்டங்கள் பலவற்றை அறிமுகம் செய்துள்ள எமது அமைப்பின் எண்ணங்களோடு தங்கள் ஆதரவை வழங்கி … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், February 7th, 2015, Comments Off on மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமம் பொங்கல் விழா. | nesakkaram

ஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு.

ஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு.

மட்டக்களப்பு ஆனந்தபுரம் கிராமத்தின் குடியேறியுள்ள பாதிக்கப்பட்ட மக்களின் மீள வாழ்வுக்கான பணிகளை நேசக்கரம் அமைப்பின் உப அமைப்பான தேன்சிட்டு அமைப்பானது முன்னெடுத்து வருகிறது. ஆனந்தபுரம் கிராமத்தில் குடியேறிய குடும்பங்களுக்கான பயன்தரு மரங்கள் நாட்டுவதற்கான உதவியை வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலையேற்று தங்கள் உதவியை வழங்க முன்வந்த உறவுகளான எமது திரு.திருமதி தெய்வேந்திரன் வதனி (வட்வெட்டித்துறை) கதிரவேற்பிள்ளை சீதாலக்ஸ்மி குடும்பத்தினரின் ஆதரவில் 41குடும்பங்களுக்கும் 410 தென்னங்கன்றுகள் வழங்கப்பட்டது. அமரர்கள் நடராசா சறோயினிதேவி தம்பதிகளின் நினைவுநாளை முன்னிட்டு 14குடும்பங்களுக்கான தென்னைமரக்கன்றுகள் வழங்குவதற்கான … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 16th, 2015, Comments Off on ஆனந்தபுரம் கிராமத்திற்கான தென்னங்கன்றுகள் வழங்கல் நிகழ்வு. | nesakkaram

சேயோனின் முதலாவது பிறந்தநாளில் 750 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கல் நிகழ்வு

சேயோனின் முதலாவது பிறந்தநாளில் 750 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கல் நிகழ்வு

சித்தாண்டி 1,2,3,4 பிரதேச குடும்பநல உத்தியோகத்தர் ஆலோசனைக்கும் திட்டமிடலுக்கும் அமைய ‘நேசக்கரம் தேன்சிட்டு’ உளவள அமைப்பின் ஏற்பாட்டில் குடும்பலநல உத்தியோகத்தரால் இனங்காணப்பட்ட 720 குழந்தைகளுக்கு 01.01.2015 அன்று சத்துணவு வழங்கப்பட்டது. கனடாவில் வாழ்ந்து வரும் கிருபாகரன் , றோகினி தம்பதிகளின் செல்வக்குழந்தை சேயோன் 26.12.2014 அன்று தனது முதலாவது பிறந்தநாளை கொண்டாடியிருந்தார். சேயோனின் முதலாவது பிறந்தநாளினை முன்னிட்டு அவரது குடும்பத்தினரால் சத்துணவு வழங்குவதற்கான உதவி கிடைக்கப் பெற்றோம். 01.01.2015 அன்று முதல் முயற்சியாக நடைபெற்ற சத்துணவு வழங்கல் … Read more

Posted in உதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 - 2010, செய்திகள், January 15th, 2015, Comments Off on சேயோனின் முதலாவது பிறந்தநாளில் 750 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கல் நிகழ்வு | nesakkaram

யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு

யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு

யாழ்கருத்துக்கள மட்டுறுத்தினர்களில் ஒருவரான நிழலி அவர்கள் 15.12.2014 அன்று தனது 40வது பிறந்தநாளில் 120 குழந்தைகளுக்கான சத்துணவு வழங்கியிருந்தார். போரால் பாதிக்கப்பட்ட குடும்பநல வாழ்வாதார உதவிகளை தனது சக்திக்கு மேற்பட்டு பலவகையில் உதவி வருவதோடு நின்றுவிடாமல் பல வகையில் செயற்பட்டு வரும் ஒருவர். 2009யுத்தத்தில் மாவீரர்களான குடும்பமொன்றின் குழந்தைகள் 2பேரை கடந்த 3வருடங்களுக்கு மேலாக மாதாந்த உதவி வழங்கி வருவதோடு மாவீரர்களின் தாயார் ஒருவருக்கும் மாதாந்தம் உதவிவருகிறார் நிழலி. நிழலியின் பணிகளுக்கு ஆதரவு வழங்கி வரும் அவரது … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், December 18th, 2014, Comments Off on யாழ்களம் நிழலியின் உதவியில் சத்துணவு வழங்கல் நிகழ்வு | nesakkaram

வன்னியில் ஓர் தனித்துவ இசைத்தேர்வு

வன்னியில்  ஓர் தனித்துவ இசைத்தேர்வு

கிளிநொச்சி மாவட்ட மாகாண தேன்சிட்டு இசைவிருது 2014 முன்னோடி குரல் தேர்வு 13.12.2014 அன்று கிளிநொச்சி ப்ரண்ட்ஸ் ஹோட்டலில் சிறப்பாக நடைபெற்றது. யோ.புரட்சி நிகழ்ச்சியை தொகுக்க, பரந்தாமன் கவின்கலைக் கல்லூரி இயக்குனர் சவுந்தரராஜா நிகழ்ச்சியை நெறியாள்கை செய்தார். திறன்மிகு கிளிநொச்சி மாவட்ட பாடகர்கள் நிகழ்வை கலந்து சிறப்பித்தனர். வசந்தம் பண்பலை நிகழ்ச்சி முகாமையாளர் திரு கிருபா, அறிவிப்பாளர் பிரதாப் ஆகியோரும் கலந்துகொண்டனர். நடுவர்கள் :- காலாவித்தகர் இரா. சிவராமன் , இசையமைப்பாளர் இ.தேவகுமார் , சங்கீத ஆசிரியை … Read more

Posted in உப அமைப்புகள், செய்திகள், December 14th, 2014, Comments Off on வன்னியில் ஓர் தனித்துவ இசைத்தேர்வு | nesakkaram

பதுளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி வழங்கல்

மீரியப்பத்தையில் கைவிடப்பட்ட தேயிலைத்தொழிற்சாலையில் தங்கியிருக்கும் 89குடும்பங்களின் 100பிள்ளைகளுக்கான பாதணிகள் காலுறைகள் நேசக்கரம் அமைப்பினால் 05.12.2014 அன்று வழங்கப்பட்டது. பதுளை பண்டாரவளை பூனாகலை மககந்தை மீரியப்பத்தை செயலர் பிரிவில் தற்காலிகமாக தங்கியிருக்கும் குடும்பங்களின் வீடுகள் இயற்கை அனர்த்தத்தினால் அழிந்து போயுள்ளமையால் தொடர்ந்தும் பல சிரமங்களை எதிர்கொள்வதோடு சொந்த குடியிருப்புகளுக்கு செல்ல முடியாதுள்ளார்கள். மீளவும் குடியேறுவதற்கான வீடுகள் இன்னும் அமைக்கப்படாத நிலமையில் அவலத்தை சுமந்து வாழும் இம்மக்களின் துயர் போக்க வேண்டிய அரசியல் தலைமைகள் இன்னும் மௌனிகளாகவே இருக்கிறார்கள். ஏற்கனவே … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், December 10th, 2014, Comments Off on பதுளை அனர்த்தத்தில் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான உதவி வழங்கல் | nesakkaram

பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள்.

29.10.2014 அன்று இலங்கை பதுளைமாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக பாதிக்கப்பட்ட மலையகத் தமிழர்களுக்கு அவசர நிவாரண உதவியை புலம்பெயர் தமிழர்களிடமிருந்து வேண்டுகிறோம். தோட்டத் தொழிலாளர்களான இம்மக்கள் வாழ்வு முழுவதும் வறுமையோடு வாழ்பவர்கள். இயற்கையும் இவர்களை வஞ்சித்து இன்று அநாதரவாக்கப்பட்டுள்ளார்கள். மனிதர்கள் வாழக்கூடிய அடிப்படை வசதிகளையே இழந்து வாழும் இவர்களின் தற்போதைய அவலத்தில் புலம்பெயர் தமிழர்கள் ஒன்றிணைந்து உதவுமாறு நேசக்கரம் அமைப்பு வேண்டுகிறது. கொஸ்லாந்த சிறீ கணேசா வித்தியாலயத்தில் இடம்பெயர்ந்து வாடும் மக்களின் எண்ணிக்கை விபரம் :- 12 … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், October 30th, 2014, Comments Off on பதுளையில் அனர்த்தத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கான அவசர உதவி வழங்குங்கள். | nesakkaram