படிக்க உதவி செய்யுங்கோ மணற்காட்டிலிருந்து ஒரு குரல்

வியாழக்கிழமை, 04 மார்ச் 2010 வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து மணற்காடு முகாம் இடைத்தங்கல் முகாமிலிருந்து ஒரு குரல். எல்லாம் இழந்த பின்னரும் கல்வியை நம்பிய மாணவியொருத்தியின் குரலிது. இந்தக்குரலுக்குரிய மாணவியின் குரலை நீங்களும் கேளுங்கள்.

Posted in ஒலிப்பதிவுகள், July 24th, 2010, Comments Off on படிக்க உதவி செய்யுங்கோ மணற்காட்டிலிருந்து ஒரு குரல் | nesakkaram

இடம்பெயர்ந்த மாணவர்கள் பருத்தித்துறையில் சந்திப்பு

இடம்பெயர்ந்த மாணவர்கள் பருத்தித்துறையில் சந்திப்பு

யாழ் மாவட்டம் பருத்தித்துறை வேலாயுதம் மகாவித்தியாலத்திற்கு வன்னியிலிருந்து இடம்பெயர்ந்து சென்ற மாணவர்களுடனனா சந்திப்பொன்று 26.02.2010 அன்று இடம்பெற்றுள்ளது. பாடசாலை அதிபர் திரவியராஜா தலைமையில் இடம்பெற்ற இச்சந்திப்பில் நேசக்கரம் இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி கமலாதேவி சதாசிவம் கலந்து கொண்டு மாணவர்களின் நிலமை தொடர்பாக கலந்துரையாடியுள்ளார். கடைசியுத்தத்திலிருந்து மீண்ட 180மாணவர்களுக்கான அவசர அவசிய தேவைகள் பற்றிய விபரங்களை பாடசாலை அதிபர் திரு.திரவியராஜா அவர்கள் விளக்கினார். மற்றும் பிள்ளைகளை தனித்தனியாக கலந்துரையாடி அவர்களுக்கான உளவள ஆலோசனைகளும் திருமதி கமலாதேவி சதாசிவம் அவர்களால் … Read more

Posted in செய்திகள், July 24th, 2010, Comments Off on இடம்பெயர்ந்த மாணவர்கள் பருத்தித்துறையில் சந்திப்பு | nesakkaram

நேசக்கரம் பயனாளர்கள் சந்திப்பு

நேசக்கரம் பயனாளர்கள் சந்திப்பு

28.01.2010 இன்று நேசக்கரம் ஊடாக பயன்பெற்ற மாணவர்களுடனான சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது. நேசக்கரம் இலங்கைக்கான இணைப்பாளர் திருமதி கமலாதேவி அவர்கள் வல்வை றோமன் கத்தோலிக்க தமிழ்க்கலவன் பாடசாலையில் போரினால் பாதிக்கப்பட்ட 35 மாணவர்கள் மற்றும் பெற்றோர்களையும் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார். ஏற்கனவே நேசக்கரம் ஊடாக பயன்பெற்ற 17மாணவர்களுடன் மேலதிகமாக 18மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இம்மாணவர்களுக்கான கல்வி வாழ்வாதார மேம்பாட்டுக்கான உதவிகள் உளவள ஆலோசனையும் வழங்குவதற்கும் ஆவன செய்யப்பட்டுள்ளது. போரால் பாதிக்கப்பட்ட விதவைகளும் சிறுவர்களும் இந்நிகழ்வில் பங்கு கொண்டுள்ளனர்.

Posted in செய்திகள், July 24th, 2010, Comments Off on நேசக்கரம் பயனாளர்கள் சந்திப்பு | nesakkaram

போரினால் பாதிக்கப்பட்ட 16 குழந்தைகள்

போரினால் பாதிக்கப்பட்ட 16 குழந்தைகள்

சனிக்கிழமை, 16 ஜனவரி 2010 வன்னிப்பிரதேசங்களிலிருந்து போரினால் பாதிக்கப்பட்ட 16பிள்ளைகள் அல்வாய் பாடசாலையில் இணைக்கப்பட்டுள்ளனர். இப்பிள்ளைகள் யாவரும் தரம் ஒன்று முதல் தரம் ஐந்து வரையானவர்கள். இவர்களில் பெற்றோரை சகோதரர்களை இழந்தவர்களும் மற்றும் குடும்பங்கள் மிகவும் வறுமைக்கோட்டின் கீழும் வாழ்கின்றனர். இச்சிறுவர்களின் கல்விக்கான அடிப்படை வசதிகள் பள்ளிச்சீருடைகள் மற்றும் பாடப்புத்தகங்கள் கொப்பி பென்சில் பேனாக்களுக்கும் உதவிகள் எதிர்பார்க்கும் நிலையில் உள்ளார்கள். இப் 16பிள்ளைகளுக்குமாக மாதாந்தம் ஆயிரம் ரூபாய் வரையில் தேவைப்படுகிறது. இக்குடும்பங்கள் தங்கி வாழும் நிலமையில் இக்குழந்தைகளின் … Read more

Posted in செய்திகள், July 24th, 2010, Comments Off on போரினால் பாதிக்கப்பட்ட 16 குழந்தைகள் | nesakkaram

நேசக்கரம் இரண்டாம் காலாண்டிற்கான (சித்திரை,வைகாசி,ஆனி) மாதங்களிற்கான கணக்கறிக்கை.

நேசக்கரம் அமைப்பினால் உதவித் திட்டங்களினால் இரண்டாம் காலாண்டில் பயனடைந்தோரது விபரங்கள் , மற்றும் உதவியோரது விபரங்கள். நேசக்கரம் 2010 சித்திரை,வைகாசி,ஆனி வரையான காலாண்டு கணக்கறிக்கை 1)கல்விகற்கும் மாணவர்கள் , பயனடைந்தோர் 137 மாணவர்கள் வழங்கப்பட்ட உதவிகள் கல்வி உபகரணங்கள் உடைகள் சீருடைகள் சப்பாத்துக்கள் சத்துணவு என்பன வழங்கப்பட்ட பாடசாலைகள். மணற்காடு அமெரிக்கன் மிசன் தமிழ் கலவன் பாடசாலை , பருத்தித் துறை வேலாயுதம் மகா வித்தியாலயம் , வவுனியா காமினி மகாவித்தியாலயம். 2)குடும்பத்தில் தாய் தந்தை இருவரையும் … Read more

Posted in கணக்கறிக்கைகள், July 21st, 2010, Comments Off on நேசக்கரம் இரண்டாம் காலாண்டிற்கான (சித்திரை,வைகாசி,ஆனி) மாதங்களிற்கான கணக்கறிக்கை. | nesakkaram

2010 தை முதல் பங்குனி வரையான காலண்டுக் கணக்கறிக்கை

நேசக்கரம் 2010 ம் ஆண்டு தை மாதம் தொடக்கம் பங்குனி மாதம் வரையில் தாயக உறவுகளிற்காக புலம்பெயர் உறவுகளுடன் இணைந்து நிறைவேற்றப்பட்ட காலாண்டிற்கான உதவி விபரஅறிக்கை. 2010 தைமாதம் முதல் பங்குனி வரை கணக்கறிக்கை 1)யுத்தத்தால் பாதிக்கப்பட்டு பெற்றோரை இழந்த இடம்பெயர்ந்த வறுமை நிலையில் உள்ள சிறுவர்கள் மற்றும் இளையோருக்கான சத்துணவு உடைகள் மற்றும் அடிப்படை கல்வி வசதி பெற்றோர் – 318 பேர். 2)பெற்றோரை இழந்து ஆதரவற்ற சிறுவர்களிற்காக உயர்கல்வி பெறும் வரையிலான தொடர்கல்வி வசதி … Read more

Posted in கணக்கறிக்கைகள், July 21st, 2010, Comments Off on 2010 தை முதல் பங்குனி வரையான காலண்டுக் கணக்கறிக்கை | nesakkaram

நேசக்கரம் 2009 கணக்கறிக்கை

நேசக்கரம் 2009 டிசம்பர் மாதம் வரையான பங்களிப்புகள் பயன்கள் பற்றிய விபரக்கணக்கறிக்கை. கணக்கறிக்கையை வாசிக்க கீழேயுள்ள இணைப்பை அழுத்துங்கள். 2009-accounts பிற்குறிப்பு :- பாதிக்கப்பட்டோரை தேடி இனங்காணுதல் மற்றும் தொடர்பாளர்களுக்கான போக்குவரத்து பங்கீட்டுச் செலவுகள் எதுவும் கொடுக்கப்படுவதில்லை. தொடர்புகளுக்கான தொலைபேசிச் செலவுகள் நேசக்கரம் பங்களிப்பு நிதியிலிருந்து பெறப்படுவதில்லை. நேசக்கரம் இணைப்பாளர்களின் சொந்தச் செலவிலேயே நிவர்த்தி செய்யப்படுகிறது. மற்றும் நேசக்கரத்தின் செயற்பாட்டாளர்கள் இணைப்பாளர்கள் யாரும் சம்பளம் பெறாமல் தங்கள் நேரங்களையும் இதர செலவுகளையும் நேசக்கரத்துக்காக பணி அடிப்படையிலேயே செய்கிறார்கள். … Read more

Posted in கணக்கறிக்கைகள், July 21st, 2010, Comments Off on நேசக்கரம் 2009 கணக்கறிக்கை | nesakkaram

உறவுகளை இழந்து 3 பிள்ளைகளுடன் தனித்த ஒரு பெண்ணின் துயர்

உறவுகளை இழந்து 3 பிள்ளைகளுடன் தனித்த ஒரு பெண்ணின் துயர்

இந்தக் குரலுக்குரியவளுக்கு 26 வயது. 26வயதிற்கிடையில் இவள் சுமந்த துயரங்களும் சுமைகளும் நூற்றாண்டுகள் தாங்கிக் கொள்ளும் அவலங்களாகப் பதியப்பட வேண்டிய கண்ணீர்க் கதைகள். 15வயதில் காதல் திருமணம். வன்னியில் கணவனும் மாமனார் மாமியார் குடும்பங்கள் என இளவயதுத் திருமணம் கூட இவளுக்கு சுமையாகத் தெரியாது வசதிகளும் நிம்மதியும் நிறைந்த வாழ்வுதான் கிடைத்திருந்தது. இனிமைகளையும் மகிழ்ச்சிகளையும் யுத்தம் கொள்ளையிட்டுப் போன நாட்களில் 2009 வலைஞர் மடம் பகுதியில் இவளது கணவனும் எறிகணைக்குப் பலியாகிப்போக எல்லாம் இவளை விட்டுப்போனது. தனது … Read more

Posted in ஒலிப்பதிவுகள், July 19th, 2010, Comments Off on உறவுகளை இழந்து 3 பிள்ளைகளுடன் தனித்த ஒரு பெண்ணின் துயர் | nesakkaram

பெற்றவருமில்லை ஒற்றைக் கையுமில்லை நேசக்கரம் கொடுப்பீரா உறவுகளே…?

இன்றைய குரலுக்குரியவனுக்கு அம்மாவும் அப்பாவும் யுத்தத்தில் இறந்து போனார்கள். 10 வயதிலிருந்து இவன் வாழ்ந்தது தனிமைதான். கடந்தவருடம் வள்ளிபுனம் என்ற பகுதியில் விழுந்த எறிகணையொன்று இவனது வலது கையையும் இருந்த இடம் தெரியாமல் சிதைத்துப்போனது.இன்று இந்த 25வயது இளைஞன் தனது வலது கையை தோள்பட்டையுடன் இழந்துபோன நிலையில் வாழ்கிறான்.. அன்றாட தனது தேவைகளைப் பூர்த்தி செய்யவோ அல்லது தனக்கான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ளவோ எதுவித வசதிகளுமற்று வாழும் இவனது கதைகள் சோகம் நிறைந்தது. ஆயினும் வாழ வேண்டுமென்ற … Read more

Posted in ஒலிப்பதிவுகள், July 19th, 2010, Comments Off on பெற்றவருமில்லை ஒற்றைக் கையுமில்லை நேசக்கரம் கொடுப்பீரா உறவுகளே…? | nesakkaram

5பிள்ளைகளுடன் அவலமுறும் 33வயதுப்பெண்ணின் துயரங்கள்

5பிள்ளைகளுடன் அவலமுறும் 33வயதுப்பெண்ணின் துயரங்கள்

கணவனை போருக்குப் பலிகொடுத்த இந்த 33வயதுப்பெண் 5பிள்ளைகளுடன் தனித்துப் போயுள்ளாள். யாருமேயில்லாத நிலையில் நேசக்கரத்தை நாடி வந்திருக்கும் இந்தப் பெண்ணின் துயரங்களைக் கேளுங்கள்.

Posted in ஒலிப்பதிவுகள், July 19th, 2010, Comments Off on 5பிள்ளைகளுடன் அவலமுறும் 33வயதுப்பெண்ணின் துயரங்கள் | nesakkaram