கையில்லாத அப்பா மனநோயாளியான அம்மா ஆதரவற்ற 4பிள்ளைகள்

இன்னும் வாழ்வதில் நம்பிக்கையற்றுப்போன குடும்பத்தின் எஞ்சிய உருப்படி இவன்தான். கடுமையான எறிகணைத் தாக்குதலொன்றில் இந்த 19வயது இளைஞனும் இவனது குடும்பத்து உறுப்பினர்கள் யாவரும் காயமடைந்து போனார்கள். இனி வாழ்வில்லை ஒன்றாய் யாவரும் பிணமாகப் போகிறோம் என்ற நினைவில் இரத்த வெள்ளத்தில் கிடந்தார்கள். கையையிழந்த தந்தை கையில் காயங்களுடன் அண்ணன் வயிற்றில் காயத்தோடு தங்கை கையிலும் காலிலும் காயத்தோடு தம்பி உடலில் எறிகணைச் சிதறல்களை ஏந்திய அம்மாவென குடும்பத்தில் சற்றுக் குறைந்த காயத்தோட ஆரோக்கியமானது இவன் ஒருவன் மட்டும்தான். … Read more

Posted in ஒலிப்பதிவுகள், September 30th, 2010, Comments Off on கையில்லாத அப்பா மனநோயாளியான அம்மா ஆதரவற்ற 4பிள்ளைகள் | nesakkaram

மே 17வரை முள்ளிவாய்க்காலில் நின்றவன் இன்று தனித்துப்போனான்

20வயதில் போராளியாகி 20 வயதிலே களமொன்றில் காயமடைந்து இடுப்பின் கீழ் உணர்வுகள் இழந்த போதும் , தான் நேசித்த மண்ணுக்காகத் தனது ஆற்றல் முழுவதையும் அர்ப்பணித்து 2009 மே17, வரையும் களத்தில் கடைசி மூச்சையும் அர்ப்பணிக்கும் முடிவோடு காத்திருந்தவன். நிலமைகள் நினைத்தவற்றுக்கு மாறாக தலைகீழாகி இவனதும் இவன் போன்ற ஆயிரமாயிரம் பேரினதும் கனவுகளில் துரோகங்கள் வென்றுவிட தோற்றுப்போனது தமிழினம். கண்ணீரோடு கடைசியாக முள்ளிவாய்க்காலிலிருந்து இவனை இவனது தங்கைகள் காத்துக் கொண்டு போனார்கள். இவனை தடுப்பில் அடைத்தார்கள். மே16 … Read more

Posted in ஒலிப்பதிவுகள், September 26th, 2010, Comments Off on மே 17வரை முள்ளிவாய்க்காலில் நின்றவன் இன்று தனித்துப்போனான் | nesakkaram

பெற்றோரை இழந்த 13 மாணவர்களுக்கு நேசக்கரம் உதவி.

17.09.10 அன்று கிளிநொச்சி கனகபுரம் மகாவித்தியாலயத்தில் கல்விகற்கும் 13பெற்றோரை இழந்த மாணவர்களுக்கான முதற்கட்ட உதவி வழங்கப்பட்டுள்ளது. சுதாகரன் கோபிகா , விஜயகுமார் மதுசா ,வைகுந்தவாசம் வாசுகி, தேவசிகாமணி வக்சாயினி, மகாதேவன் மோகனன், சுப்பிரமணியம் சுகந்தினி, பிரான்சிஸ் றைசன், அழகுதேவன் தமிழ்ச்செல்வி, ஜெகராசா குணாளன் ஜெகராசா கலைமகள், வில்வராசா குகேந்தினி, செல்வகுமார் சங்கீதா, மகாதேவன் துசாந்தி ஆகிய 13 மாணவர்களுக்கு ஆளுக்கு தலா இலங்கை ரூபா 1500ரூபா (ஆயிரத்து ஐந்நூறுரூபா) பணமாக வழங்கப்பட்டுள்ளது. இந்த நிதியானது மாணவர்களின் மாதாந்த … Read more

Posted in செய்திகள், September 24th, 2010, Comments Off on பெற்றோரை இழந்த 13 மாணவர்களுக்கு நேசக்கரம் உதவி. | nesakkaram

வீட்டிலிருந்து வரிசையாக நாட்டுப்பற்றாளர்களையும் மாவீரர்களையும் கொடுத்த குடும்பம் இன்று ???

தாயகத்தை நேசித்த தாயகத்துக்காய் இரத்த உறவுகளை உடன் பிறந்த சகோதரர்களையெல்லாம் கொடுத்துவிட்டு இன்று அடுத்த நேரச் சோற்றுக்கே வழியின்றித் தவிக்கும் ஒரு குடும்பத்தின் தலைவனின் கதைகளிலிருந்து சிலதுளிகள் நேயர்களே உங்களுக்காக….!

Posted in ஒலிப்பதிவுகள், September 18th, 2010, Comments Off on வீட்டிலிருந்து வரிசையாக நாட்டுப்பற்றாளர்களையும் மாவீரர்களையும் கொடுத்த குடும்பம் இன்று ??? | nesakkaram

செல்வாநகர் ஊனமுற்றோர் குடியிருப்பு மக்களுக்கு நேசக்கரம் சுயதொழில் உதவி

செல்வாநகர் ஊனமுற்றோர் குடியிருப்பு மக்களுக்கு நேசக்கரம் சுயதொழில் உதவி

கிளிநொச்சி செல்வாநகர் குடியிருப்பில் வாழ்கின்ற 10குடும்பங்களுக்கான உதவிகள் 14.09.10 அன்று வழங்கப்பட்டுள்ளது. இயற்கை அனர்த்தங்களாலும் போரினாலும் பாதிக்கப்பட்ட மேற்படி குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்புக்கான உதவிகளும் பிள்ளைகளின் கல்விக்கான உதவிகளும் வழங்கப்பட்டது. இக்குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் அங்கவீனர்களாகவும் போரில் பிள்ளைகளை கணவர்களை இழந்தவர்களாகவும் மற்றும் தடுப்புமுகாமிலிருந்து வெளிவந்தவர்களாகவும் இருக்கின்றனர். இன்னும் தங்கள் உடல்களில் சன்னங்கள் எறிகணைத்துண்டுகளையும் சுமந்து கொண்டிருக்கும் இவர்களை நம்பிக்கைகொடுத்துப் புதுப்பிக்கும் உதவியாக இவ்வுதவிகள் வழங்கப்பட்டுள்ளது. கூரைகள் அற்ற வீடுகளில் தறப்பாள்களோடு வாழ்கின்ற இம்மக்கள் தங்களுக்கான தொழில் … Read more

Posted in செய்திகள், September 15th, 2010, Comments Off on செல்வாநகர் ஊனமுற்றோர் குடியிருப்பு மக்களுக்கு நேசக்கரம் சுயதொழில் உதவி | nesakkaram

பற்றைகள் மண்டிய ஊருக்குள் பாம்புகளோடும் பயத்தோடும் மக்கள்

கனவாயிருந்த ஊருக்குள் காலடி வைத்திருக்கும் சாந்தபுரம் மக்களின் நிலமையென்ன ? விளக்குகிறார் தீபச்செல்வன்.

Posted in ஒலிப்பதிவுகள், September 12th, 2010, Comments Off on பற்றைகள் மண்டிய ஊருக்குள் பாம்புகளோடும் பயத்தோடும் மக்கள் | nesakkaram

காலையிழந்து வந்திருக்கும் மகளுக்கு கல்வியை வேண்டுகிறாள் இந்தத்தாய்

யுத்தத்தின் கடைசிக் காலங்களில் மகளைத்தேடித் தேடியே தேய்ந்து போன நம்பிக்கை மீறித் தன்மகளை இந்தத்தாய் தேடிக்கொண்டிருந்தாள். காணாமல் போன பல்லாயிரம் பேரைப்போல அவளது மகள் காணவேயில்லை. மகளில்லாமல் அசையேன் என்ற அம்மாவை முகாம்வரை கொண்டு சேர்த்தும் மகளைத்தேடும் அம்மாவின் முயற்சியின் விளைவாக ஒற்றைக்காலை இழந்தபடி பெற்றோருடன் இணைந்தாள். தொடர் அலைவு துயரங்களின் முடிவாக மீண்டும் சொந்த ஊருக்குப்போயிருக்கும் குடும்பத்தின் நம்பிக்கையான மகள் தற்போது ஏ.எல்.உயர்தரம் விஞ்ஞானம் கற்கிறாள். எல்லாம் இழந்து தனது கல்வியை மட்டும் நம்பிய 17வயதுச் … Read more

Posted in ஒலிப்பதிவுகள், September 10th, 2010, Comments Off on காலையிழந்து வந்திருக்கும் மகளுக்கு கல்வியை வேண்டுகிறாள் இந்தத்தாய் | nesakkaram

காணாமல் போன பிள்ளைகளைத் தேடும் அம்மா

வீட்டுக்கு எல்லாமுமாக இருந்த கணவனை 23.04.2009 அன்று எறிகணை கொன்றுவிட்டது. குடும்பத்தில் முதல் உயிரை இழந்த துயரம். எல்லொரையுமே துரத்தியது. உயிரைக்கொடுத்த துயரில் இருந்த வீட்டின் இரண்டு ஆண்பிள்ளைகளும் அம்மாவையும் தங்கைகளையும் விட்டுப் பிரிக்கப்பட்டார்கள். குடும்பத்தைத் தாங்குவார்கள் தன் மகள்களைக் காப்பாற்றுவார்கள் என்ற இரண்டு ஆண்பிள்ளைகளையும் கட்டாயக்களம் அழைத்துப் போனதோடு இந்தத்தாயின் எல்லா நம்பிக்கைகளும் நொருங்கிப்போனது. ஒருவன் இறந்து விட்டானென்ற செய்தியும் மற்றைய மகன் காணாமல் போனோர் வரிசையிலும் இன்னும் தேடப்பட்டுக் கொண்டிருக்கிறான்.

Posted in ஒலிப்பதிவுகள், September 10th, 2010, Comments Off on காணாமல் போன பிள்ளைகளைத் தேடும் அம்மா | nesakkaram

போரில் பிள்ளைகளையும் இழந்து ஊரையும் இழந்த பொன்னகர் மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள்

போரில் பிள்ளைகளையும் இழந்து ஊரையும் இழந்த பொன்னகர் மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள்

போரின் எச்சங்களாய் வன்னிநிலப்பகுதிகளில் மிஞ்சியிருப்பது துயரங்களின் குவியல். காலம்காலமாய் வாழ்ந்த மக்களின் நிலங்கள் பறிக்கப்பட்டு மனிதவுயிர்கள் எண்ணுக்கணக்கின்றி அழிக்கப்பட்ட கொடுமையின் முடிவு எங்கள் மக்களை ஏதிலிகளாக்கிவிட்டுள்ளது. தங்கள் நிலங்களில் மீளவும் வாழ வழியற்றுத் தவிக்கும் மனிதர்களும் அவர்களின் அனாதைக் குழந்தைகளும் தங்கள் எதிர்காலம் மீதான நம்பிக்கைகளுடன் தறப்பாள்களின் கீழே மீளவும் வாழ்வை ஆரம்பித்திருக்கிறார்கள். எல்லாம் இழந்தபின்னும் நம்பிக்கைகளோடு மீளவும் குடியேறியுள்ள பொன்னகர் கிராமமக்களின் வாழ்வை மேம்படுத்த வேண்டியவர்கள் நீங்களே உறவுகளே…..! பல்வேறு கட்டங்களில் நடைபெற்ற போரினால் பாதிக்கப்பட்ட … Read more

Posted in செய்திகள், September 10th, 2010, Comments Off on போரில் பிள்ளைகளையும் இழந்து ஊரையும் இழந்த பொன்னகர் மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டுங்கள் | nesakkaram