என்னை வைச்சுப் பராமரிக்க என்ர வீட்டுக்காறரராலை முடியாது. நெஞ்சின் கீழ் இயக்கமற்ற ஒரு போராளி

5தங்கைகளுக்கு ஒற்றை அண்ணன் இவன். திருமலை மாவட்டத்தின் சிறுகிராமமொன்றில் பிறந்து வளர்ந்தவன் கலவரங்களால் பாதிக்கப்பட்ட குடும்பத்தின் இடப்பெயர்வு துயரங்களால் துரத்தப்பட்டதால் சோர்ந்தவன் அவனை நம்பிய தங்கைகளை அம்மாவை அப்பாவை விட்டு ஆயுதப் போராட்டத்தில் தன்னை இணைத்துக் கொண்டான். கனவுகளோடு கனரகத்தையேந்தியவன் இலட்சியக்கனவோடு களங்களில் வாழ்ந்தான். ஒரு களச்சமரில் காயமடைந்து இடுப்பின் கீழ் உணர்வுகள் இழந்து போய் ஓயாது ஓடித்திரிந்த கால்கள் ஒரு சக்கர நாற்காலிக்குள் அடங்கிக்கொண்டது. மாற்றுவலுவுள்ளோருக்கான கல்வி கற்றலில் தன்னால் இயன்றவற்றையெல்லாம் சக்கரநாற்காலிக்குள்ளிருந்தபடி கற்றான். அம்மா … Read more

Posted in ஒலிப்பதிவுகள், October 30th, 2010, Comments Off on என்னை வைச்சுப் பராமரிக்க என்ர வீட்டுக்காறரராலை முடியாது. நெஞ்சின் கீழ் இயக்கமற்ற ஒரு போராளி | nesakkaram

வாழ்வதற்கு விரும்பும் மணியன்குளம் மக்களும் அவர்களது குழந்தைகளும்.

இழப்பதற்கு இனி எதுவுமேயில்லையென்று கூறிக்கொள்ளும் குரல்களும் எங்கள் வாழ்வுக்கு அடுத்த வழியை யார் ஏற்படுத்தித் தருவார்கள் என்ற ஏக்கங்களை மட்டும் சுமக்கின்ற ஏதிலிகள் வன்னியில் மிஞ்சிய குடிகளாக இருக்கின்றனர். பாதிக்கப்பட்ட ஊர்களைத் தேடிச்சென்று பாதிக்கப்பட்ட உறவுகளுக்கான உதவிகளை வழங்கிவரும் நேசக்கரத்தின் ஊர்கள் நோக்கிய தேடலில் எமது நேசக்கரத்தை எதிர்பார்த்திருக்கிறது கிளிநொச்சி மணியன்குளம் என்கின்ற கிராமம். இக்கிராமத்தில் உள்ள புதியகுடியிருப்பு , பழையகுடியிருப்பு , விநாயகபுரம் குடியிருப்பு ஆகிய 3 குடியிருப்புகளைச் சேர்ந்த 40 குடும்பங்கள் சுயதொழில் முயற்சிக்கான … Read more

Posted in செய்திகள், October 29th, 2010, Comments Off on வாழ்வதற்கு விரும்பும் மணியன்குளம் மக்களும் அவர்களது குழந்தைகளும். | nesakkaram

ஆடி5இல் பிறந்தவள் ஆறுவயதிலிருந்து செஞ்சோலையில் இன்று அனாதரவாய்

இவளது குரலைக் கேட்கின்ற போது ஒரு சிறுமியின் கதைபோலவே இருக்கிறது. இவளது சுபாவமும் இன்னும் சிறு குழந்தைத்தனம் மிகுந்ததாகவே இருக்கிறது. இதயம் முட்டிய வேதனைகளைச் சுமந்து கொண்டு ஒற்றைக்காலிக் துணையோடு நடமாடும் இவள்ஆறுவயதில் அம்மாவையும் அப்பாவையும் இழந்தவள். ஆடி5 1987 தமிழினத்தின் முக்கியம் வாய்ந்த நாளில் பிறந்தவள். நினைவுகொள்ளப்படும் நினைவுகளால் பலரது நினைவுகளை ஞாபகம் கொள்ளும் தினத்தில் பிறந்தவளை அணைத்து ஆதரவுகொடுத்து அடைக்கலம் கொடுத்தது செஞ்சோலை இல்லம். அம்மாவாக அப்பாவாக சுற்றமாக அவளுக்கு அவளுக்கான உறவுகள் அந்தச்சோலையும் … Read more

நேசக்கரம் உறவுகளுக்கு உதவும் சுயதொழில் சத்துணவுத் திட்டம் ஒக்ரோபர் மாதம்

போரால் பாதிக்கப்பட்டு உதவிகள் அற்ற உறவுகளுக்கான உதவும் திட்டத்தை நேசக்கரம் ஒக்ரோபர் மாதம் முதலாம் திகதி முதல் 15ம் திகதி வரையில் 256000ரூபாவுக்கான (இரண்டு இலட்சத்து ஐம்பத்து ஆறாயிரம் ரூபா) உதவிகளை வழங்கியுள்ளது. இவ்வுதவிகளானது சுயதொழில் வேலைவாய்ப்பு பாடசாலை மாணவர்களுக்கான சத்துணவு கல்வித் தேவைகள் துவிச்சக்கர வண்டி போன்றவற்றுக்காக வழங்கப்பட்டுள்ளது. தங்கராசா நாகலட்சுமி 10000ரூபா எள்ளுக்காடு உருத்திரபுரம் , சிவசுப்பிரமணியம் உருத்திரபுரம் எள்ளுக்காடு 5000ரூபா , திருச்செல்வம் வித்தியா எள்ளுக்காடு உருத்திரபுரம் 5000ரூபா , இராசன் சுப்பிரமணியம் … Read more

Posted in செய்திகள், October 18th, 2010, Comments Off on நேசக்கரம் உறவுகளுக்கு உதவும் சுயதொழில் சத்துணவுத் திட்டம் ஒக்ரோபர் மாதம் | nesakkaram

கிளிநொச்சி ஊற்றுப்புலம் மாணவர்களுக்கான சத்துணவு மற்றும் கல்விக்கான உதவி வழங்கல் வீடியோ பதிவு

Posted in செய்திகள், October 17th, 2010, Comments Off on கிளிநொச்சி ஊற்றுப்புலம் மாணவர்களுக்கான சத்துணவு மற்றும் கல்விக்கான உதவி வழங்கல் வீடியோ பதிவு | nesakkaram

ஒற்றைக்கையும் இயங்காத கால்களுடனும் 5நாளாக சோற்றுக்கு அவதிப்படும் போராளிகுடும்பம்

2006ம் ஆண்டு காயமுற்று இடுப்பின் கீழ் உணர்வுகள் அற்றுப் போனது. 15வருட களவாழ்வுக்கு ஒய்வு கொடுத்தாற்போல அவன் ஒரு சுழல்கதிரைக்குள் அடங்கிப்போனான். மனதளவில் தனது ஊனம் பற்றிய வருத்தம் இருந்த போதிலும் அவனை புதுப்பித்து வாழ்வின் மீது அவனுக்கு நம்பிக்கையை எற்படுத்திய அவனது துணைவியே அவனுக்கு எல்லாமுமாகியிருந்தாள். இயலாத போதும் அவ்வப்போது கொடுக்கப்படும் வேலைகளைச் செய்து கொண்டிருந்தான். மாதக்கொடுப்பனவாகக் கிடைத்த 6ஆயிரம் ரூபாவோடு போனது காலங்கள். கடைசியுத்தம் இவர்களையும் முள்ளிவாய்க்கால் வரை துரத்தியது. எறிகணையும் மரண ஒலிகளும் … Read more

எங்களுக்கு உணவில்லை உடுதுணியில்லை புலம்பெயர் உறவுகளே உதவுங்கள் ஒரு முன்னாள் போராளி வேண்டுகிறான்

கடைசிவரை கணவனும் மனைவியும் களங்களிலேயே வாழ்ந்தார்கள். ஊர் உறவுகள் அவர்களுக்காக வாழ்ந்த பெற்றோர் யாவரையும் துறந்து இலட்சியத்துக்காகவே இறுதிவரை உழைத்தவர்கள். இதயத்தில் ஏந்திய கனவு மெய்ப்பட காவலண்களில் தூக்கம் மறந்த கண்களோடு விழித்திருந்த காலங்களை இன்றும் வேதனையுடன் வெளிப்படுத்தும் இவர்களுக்கு இன்று யாருமேயில்லை. இந்தக் குடும்பத்தின் துயரங்கள் சொல்லில் அடக்கிச் சேமிக்க முடியாத துயரங்கள். அன்றாட உணவு அடிப்படை வசதிகள் ஆடைகள் எல்லாவற்றுக்கும் அடுத்தவரை எதிர்பார்த்திருக்கும் அவலம். கடைசிவரையும் கனவுகள் மெய்ப்படும் நினைவோடிருந்த இருவரும் ஒரே இடத்தில் … Read more

Posted in ஒலிப்பதிவுகள், October 14th, 2010, Comments Off on எங்களுக்கு உணவில்லை உடுதுணியில்லை புலம்பெயர் உறவுகளே உதவுங்கள் ஒரு முன்னாள் போராளி வேண்டுகிறான் | nesakkaram

தன்னால் இயங்க முடியாத உடல் நிலை ஆனாலும் தன் மனைவிக்காகவும் குழந்தைக்காகவும் வாழ்கிறான்

2009 களமொன்றில் காயமடைந்தான் இவன். வயிற்றை அறுத்துக் கொண்டு போனது எறிகணை. சாகும் தறுவாயில் குருதி வெள்ளத்தில் கிடந்தவனை இவனது காதல் மனைவி காப்பாற்றத் துடித்த துடிப்பினைச் சொல்லும் தருணங்களில் அவள் அழுதேவிடுகிறாள். கைக்குழந்தையையும் அவனையும் கடலால் கொண்டு சென்று காப்பாற்றிவிட வேண்டுமென்ற முடிவோடு இயன்றவரையும் அவனது குருதிப்போக்கினை கட்டுப்படுத்த இயன்ற யாவையும் செய்தாள். அவளது முயற்சி அவனை உயிரோடு கொண்டுபோய் மருத்துவத்துக்காய் சேர்க்கப்பட்டான். தற்போது இவனுக்கு ஒரு சிறு நீரகம் மட்டுமே இயங்குகிறது. இடுப்பின் கீழ் … Read more

Posted in ஒலிப்பதிவுகள், October 13th, 2010, Comments Off on தன்னால் இயங்க முடியாத உடல் நிலை ஆனாலும் தன் மனைவிக்காகவும் குழந்தைக்காகவும் வாழ்கிறான் | nesakkaram

ஐப்பசி 2010 கணக்கறிக்கை

ஐப்பசி 2010 கணக்கறிக்கை 01.10.2010

Posted in ஒலிப்பதிவுகள், October 10th, 2010, Comments Off on ஐப்பசி 2010 கணக்கறிக்கை | nesakkaram

உறவென்று யாருமில்லாதவன் கழுத்துக்குக் கீழ் உணர்வுகள் அற்ற நிலையில் உதவிக்கும் ஆளின்றித் துடிக்கிறான்

உறவு என்று சொல்லிக் கொள்ளவோ உறவினர் என்றோ இவனுக்கு யாருமேயில்லை. கழுத்துக்குக் கீழ் உணர்வற்று உயிரோடு வாழும் ஒன்றுக்கும் பயனில்லாதவன் தானெனத் தன்னையே நொந்துகொள்ளும் ஒரு முன்னாள் போராளி இவன். வீட்டின் ஒற்றைப்பிள்ளை அம்மாவினதும் அப்பாவினதும் கனவுகளின் இராசகுமாரன் அவர்களது நம்பிக்கையின் அவர்களது வாழ்வின் விடிவெள்ளியென எத்தனையோ அவர்களது ஆசையின் குழந்தையானவன். இன்று தான் இருக்கும் இடத்தை தனது நிலமையை அவர்களுக்கே சொல்லாமல் வைத்திருக்கிறான். வயதான அம்மாவும் அப்பாவும் இவனைத் தேடிக்கொண்டிருக்கிறார்கள்.தன்னை இந்த நிலையில் பார்த்து அவர்கள் … Read more

Posted in ஒலிப்பதிவுகள், October 9th, 2010, Comments Off on உறவென்று யாருமில்லாதவன் கழுத்துக்குக் கீழ் உணர்வுகள் அற்ற நிலையில் உதவிக்கும் ஆளின்றித் துடிக்கிறான் | nesakkaram