காதுகள் கேட்காது ஒரு கையும் காலும் இயலாது இரு மாவீரர்களின் சகோதரி

இன்று கார்த்திகை 27. இலட்சியத்தை நெஞ்சில் சுமந்து தாயகக் கனவோடு களங்களில் சமராடி விதையுண்ட வீரர்களை நினைவு கொள்ளும் நாளிது. எங்கள் கனவுகளுக்காகத் தங்கள் இனிமைகளை மறந்து வசந்தங்களை எங்களுக்காய் வாரித்தந்த வள்ளல்களை நினைவு கொள்ளும் நாளிது. இதோ இன்றைய குரலுக்குரியவள் ஒரு முன்னாள் போராளி. அண்மையில் தடுப்பிலிருந்து விடுதலையாகி வந்திருக்கிறாள். இதோ இவளது துயரை இந்த மாவீரர் நாளில் கொண்டு வருகிறோம். வீட்டில் அனைத்தும் பெண் சகோதரிகள். 2மாவீரர்களைக் கொடுத்தவள் தானும் தாயக விடுதலைக்காக தன்னை … Read more

காலொன்றையும் கையினையும் இழந்தவள்

கால் ஒன்றையும் கையொன்றையும் போராட்டக் களத்தில் இழந்து இன்று தடுப்பு முகாமிலிருந்து விடுதலையாகி வந்திருக்கிறாள் இந்தப் பெண் போராளி. வீட்டின் வறுமை நிலைமை இவர்களை வாட்டுகிறது. தான் கற்ற கணணிக்கல்வியை வைத்து தனது குடும்பத்தை காப்பாற்ற விரும்பும் இந்த முன்னாள் போராளி தனக்கு ஒரு கணணியை வேண்டுகிறாள். இதோ இவளது குரலிலிருந்து….

உதவுங்கள் என்ற குரல்களுக்கு உதவிய உறவுகளுக்கு நன்றி கூறுகின்றனர் தாய்நிலத்து உறவுகள்

யாழ் கருத்துக்களம் ஊடாக பலருக்கான உதவிகளை கருத்துக்கள நண்பர்கள் வழங்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த வகையில் அண்மையில் ஒரு தாய் மற்றும் கண்ணிரண்டையும் இழந்த ஒரு முன்னாள் போராளி ஆகியோரின் சுயதொழில் முயற்சிக்கு உதவிய நல்லிதயங்களுக்கு உதவிகளைப் பெற்ற உறவுகள் தெரிவித்த நன்றிக் குரல்கள் இது. உதவிகள் கோரிய உறவுகளின் குரல்கள் பழைய பதிவு. நான் வந்திருக்கமாட்டேன் என்ரை பிள்ளையளுக்காகத்தான் அந்த மண்ணைவிட்டு வந்தனான் களமாடிய பிள்ளைகளுக்குச் சமைத்துக் கொடுத்த அம்மா

Posted in ஒலிப்பதிவுகள், November 22nd, 2010, Comments Off on உதவுங்கள் என்ற குரல்களுக்கு உதவிய உறவுகளுக்கு நன்றி கூறுகின்றனர் தாய்நிலத்து உறவுகள் | nesakkaram

10 வருடங்களாய் சுழல்கதிரையில் வாழும் ஒரு முன்னாள் போராளியின் வேண்டுகையிது

யுத்தம் முடிந்து ஒன்றரை வருடங்களை காலம் அள்ளிக்கொண்டு போயிற்று. குண்டுச் சத்தங்கள் ஓய்ந்து போயிற்று. ஆனால் நூற்றாண்டுகளைக் கடந்த வடுக்கள் நிறைந்து போயிருக்கிறது நிலம். அழுகையும் பசியும் வலிகளுமாய் அன்றாடப் பொழுதுகள் அவலங்களின் பதிவுகளாய் அன்றாடம் வருகின்ற கண்ணீர் நிறைந்த கடிதங்களும் காப்பாற்ற வேண்டிய குரல்களும் நீண்டு கொண்டே போகிறது.வாழ்வதற்கு ஏதாவதொரு சிறு உதவியை வேண்டிய குரல்களே இப்போது எமது தொலைபேசியில் நிறைகிறது. இந்தக் குரலுக்குரிய 32வயது இளைஞன் 22வயதில் களமொன்றில் காயமடைந்து இடுப்பின் கீழ் உணர்விழந்து … Read more

எனது பிள்ளைகளுக்கு சரியான உணவை வழங்கவே முடியாதுள்ளது.

கண்ணிரண்டையும் 1995 இல் இழந்த ஒரு முன்னாள் போராளி இவன். 3பிள்ளைகளின் தந்தை. முள்ளிவாய்க்கால் முனைவரையும் சென்று முகாமில் ஒதுங்கியவர்கள். அகதி வாழ்வு அலைக்கழிக்கும் துயரம் அனைத்துக்கு நடுவிலும் மீள எழத்துடிக்கும் துணிவோடு சொந்த ஊருக்குப் போயிருக்கிறான். வறுமை இவனையும் இவனது குடும்பத்தையும் விரட்டிக் கொண்டிருக்கும் தருணத்தில் உதவிகள் வேண்டி ஏறாத இடமில்லை உதவி கேட்காத நிறுவனங்களுமில்லை. நம்பிக்கை கொடுத்து உதவிகள் தருவதாய் புகைப்படம் குடும்ப விபரங்கள் பெற்றவர்களும் அமைதியாகிப்போனார்கள். விபரங்கள் பெற்றவர்களைத் தேடி தொடர்பு கொண்டு … Read more

நான் வந்திருக்கமாட்டேன் என்ரை பிள்ளையளுக்காகத்தான் அந்த மண்ணைவிட்டு வந்தனான்

14 வயதில் போராட்டத்தில் இணைந்தவன்.19 வயதில் களமொன்றில் தன்னிரு கண்களையும் இழந்துபோனான். கண்ணையிழந்தவன் தன்னை இசையோடு இணைத்து இசையால் தனது கடமைகளை வழங்கியதோடல்லாமல் எத்தனையோ பேருக்கு ஒளியாயிருந்தான். ஒளிதரும் கண்கள் இருளாகிப்போன பின்னும் தன்னால் இயன்ற யாவையும் இதயசுத்தியோடு ஊருக்கே வழங்கினான். எங்கள் விதியை மாற்றிய மே18 2009 வரையும் எந்த மண்ணை நேசித்தானோ எந்த மண்ணில் ஒரு இசைக்கலைஞனாய் செதுக்கப்பட்டானோ அந்த மண்ணோடு ஒட்டியிருந்தான். அந்த மண்ணோடு மண்ணாய் மாண்டுபோகும் முடிவோடிருந்தவனை அவன் மனையாளின் கண்ணீர் … Read more

Posted in ஒலிப்பதிவுகள், November 12th, 2010, Comments Off on நான் வந்திருக்கமாட்டேன் என்ரை பிள்ளையளுக்காகத்தான் அந்த மண்ணைவிட்டு வந்தனான் | nesakkaram

உங்கள் குழந்தைகளிற்கு கல்வியினை கொடுங்கள்.. நேசக்கரம் இணைப்பாளர் தீபச்செல்வன்

நேசக்கரம் அமைப்பினால் 09.11.01 அன்று கிளிநொச்சி மாவட்டம் மணியன்குளம் பகுதியில் போரினால் பாதிக்கப்பட்டு மீள்குடியேறிய குடும்பங்களிற்கான சுயஉதவித்தொழில் திட்ட அடிப்படையில் பதினைந்து குடும்பங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலா பத்தாயிரம் ரூபாய்கள் உதவிகள் வழங்கப்பட்டதுடன் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்குமான உதவியாக இலங்கைரூபா 170000ரூபா(ஒருஇலட்சத்து எழுபதாயிரம்ரூபா) இவ்வுதவிகளை நேசக்கரம் அமைப்பின் இணைப்பாளர் தீபச்செல்வன் அவர்கள் நேரடியாக அம்மக்களிடம் கொண்டு சென்று சேர்த்திருந்தார். இவ்வுதவிகள் வழங்கும் நிகழ்வின்போது த.தே கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சிறீதரன் அவர்களின் உதவியாளர் கவிஞர் … Read more

Posted in செய்திகள், November 10th, 2010, Comments Off on உங்கள் குழந்தைகளிற்கு கல்வியினை கொடுங்கள்.. நேசக்கரம் இணைப்பாளர் தீபச்செல்வன் | nesakkaram

12வயதில் கட்டாயமாக பிடிக்கப்பட்டவள் முள்ளிவாய்க்காலிலிருந்து இடுப்பின் கீழ் உணர்விழந்து…

இவளுக்கு இப்போது 18வயதாகிறது. திருமலையில் ஒரு சாதாரண குடும்பத்தின் பிள்ளையிவள். நடுத்தரக் குடும்பமொன்றின் எட்டாத கனவுகள் இவள்பற்றி இவளது குடும்பத்திற்கும் இருந்தது. 12வது வயதில் பள்ளியால் திரும்பிக் கொண்டிருந்த பிள்ளை காணாமல் போய்விட்டாள். கட்டாயமாய் வீட்டுக்கு ஒருவர் நாட்டுக்காக என்ற திட்டத்தில் இவள் வன்னிக்குப் பிடித்து அனுப்பப்பட்டாள். பார்க்கவே அஞ்சிய துப்பாக்கிகளை இவள் கையாளக்கற்றுக் கொடுக்கப்பட்டாள். களம் செல்லலுக்கான தயார்படுத்தலோடு கல்வியும் கற்க அனுமதிக்கப்பட்டாள். பிள்ளைபறிபோன துயரில் உயர்மட்டங்கள் யாவற்றின் படிகளையும் தேடிய தாய்க்கு அவள் எங்கென்று … Read more