மனைவியின் கையை மட்டும் நம்பியவனின் குரல் இது

களத்தில் காயமடைந்து கையும் காலும் பாதிக்கப்பட்டு ஒற்றைக் கண்ணையும் இழந்து மறுகண்ணின் பார்வையும் சரியாயில்லாமல் அலைக்கழியும் ஒரு முன்னாள் போராளி இவன். 4வருடம் போராட்ட வாழ்வு 5ம் வருடம் காயமடைந்து இன்று 28வயது இவனுக்கு. மிகவும் பின்தங்கிய கிராமமொன்றில் பிறந்து வளர்ந்து அந்த ஊருக்குள்ளிருந்து தன்னையும் நாட்டுக்காக இணைத்தவன். களம் அவனை நிராகரித்து ஊனமுற்றவனாய் போனவன். திரும்பவும் பிறந்த ஊருக்கே வந்திருக்கிறான். மனைவியின் கையை மட்டும் நம்பிய இவனை ஆயிரமாயிரம் பேரை அவலத்தில் வீழ்த்திய இவ்வருடத்துக் கடும்பழை … Read more

வெள்ளத்தால் பாதிப்புற்ற 701 மாணவர்களுக்கு உதவுங்கள்

கிழக்கு மாகாணத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு தமது கல்விக்கான உபகரணங்கள் மற்றும் சீருடைகளை இழந்த மாணவர்களுக்கான உதவிகள் கோரப்படுகிறது. அம்பாறை ஆலையடி வேம்பு பிரதேச சபையில் பாதிக்கப்பட்ட 781மாணவர்களுக்கான உதவிகளை வேண்டியிருந்தனர். இதன் முதற்கட்டமாக 10.02.2011 அன்று இரு பாடசாலைகளில் கற்கும் 1முதல் தரம் 5வரையான 80 மாணவர்களுக்கான உதவிகளை நேசக்கரம் ஊடாக புலம்பெயர் உறவுகளால் வழங்கப்பட்ட நிதியிலிருந்து கற்கை உபகரணங்கள் மற்றும் சீருடைத்துணிகளை வழங்கியிருந்தோம். மேலும் ஆலையடி வேம்பு பிரதேச சபையில் உள்ள 5பாடசாலைகளான :- இராமகிருஷ்ணா … Read more

Posted in செய்திகள், February 10th, 2011, Comments Off on வெள்ளத்தால் பாதிப்புற்ற 701 மாணவர்களுக்கு உதவுங்கள் | nesakkaram

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நேசக்கரம் உதவிகள்

அம்பாறை அக்கரைப்பற்று பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பாடசாலைகளான விவேகானந்தா வித்தியாலயம் , சென்யோன்ஸ் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலையில் கற்கும் 1முதல் தரம் 5வரையான 80 மாணவர்களுக்கு நேசக்கரம் அமைப்பின்; நிதியுதவியுடன்; உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. தலா ஒரு பிள்ளைக்கு ஆயிரம் ரூபா பெறுமதியில் கற்றல் உபகரணங்களான அப்பியாசக் கொப்பிகள் , புத்தகப்பைகள் , எழுது கருவிகள் போன்றவை 80 ஆயிரம் இலங்கை ரூபா பெறுமதியான பொருட்களை நேசக்கரம் பணியாளர்கள் இன்று வியாழக்கிழமை (10.02.2011) வழங்கி வைத்தனர். இதேவேளை … Read more

Posted in செய்திகள், February 10th, 2011, Comments Off on வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கான நேசக்கரம் உதவிகள் | nesakkaram

அம்பாறை சங்கமன்கண்டியில் நேசக்கரம் வெள்ள நிவாரணம்.

அம்பாறை சங்கமன்கண்டி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு முகாம்களில் தஞ்சமடைந்துள்ள 80 குடும்பங்களுக்கு நேசக்கரம் நிதியுதவியுடன் உலர் உணவு பொருட்களை வழங்கப்பட்டது. பொத்துவில் பிரதேச செயலகப் பிரிவின் கீழ் உள்ள சங்கமன்கண்டி பிரதேசத்தில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்து முன்பள்ளி பாடசாலைக் கட்டிடத்தில் 80 குடும்பங்கள் தஞ்சமடைந்துள்ளனர். இக் குடும்பங்களுக்கு அரசா அரசசார்பற்ற நிறுவனங்களினால் எதுவித நிவாரணங்களும் வழங்கப்படாத நிலையில், நேசக்கரம் தொடர்பாளர்கள் மேற்படி பிரதேசத்திற்குச் சென்று நிலமைகளை அறிந்து உதவிகளை வழங்கியுள்ளனர். இவ் நிவாரணத்தைப் பெற்றுக் கொண்ட சம்மன்கண்டி … Read more

Posted in செய்திகள், February 9th, 2011, Comments Off on அம்பாறை சங்கமன்கண்டியில் நேசக்கரம் வெள்ள நிவாரணம். | nesakkaram

மீண்டும் வெள்ளம் அவசர உதவிகளை உலகத்தமிழர்களிடம் வேண்டுகிறோம்.

மீண்டும் வெள்ளம் அவசர உதவிகளை உலகத்தமிழர்களிடம் வேண்டுகிறோம்.

கடந்த ஒருமாத காலத்திற்கு மேலாக பெய்து வரும் மழை மீண்டும் பெய்யத் தொடங்கியுள்ளது. கடந்த மாதத்தைவிடவும் கடந்த 48மணித்தியாலத்தில் அதிகளவு மழைவீழ்ச்சி பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. மீண்டும் வெள்ளத்தில் மூழ்கும் அபாயத்தில் கிழக்கு மாகாணம் எட்டி நிற்கிறது. பல கிராமங்கள் வெள்ளத்தால் மூடப்பட்டு உணவு படுக்கை வசதிகள் யாவையும் இழந்துள்ளார்கள். பல உயிரிழப்புகளும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைக்கிறது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்டு தமது இயல்பு வாழ்வு பாதிக்கப்பட்டு இடம்பெயர்ந்துள்ள மக்களுக்காக உதவிகளை வழங்குமாறு உலகத்தமிழர்களை நேசக்கரம் … Read more

Posted in செய்திகள், February 4th, 2011, Comments Off on மீண்டும் வெள்ளம் அவசர உதவிகளை உலகத்தமிழர்களிடம் வேண்டுகிறோம். | nesakkaram

கணக்கறிக்கை தை2011

நேசக்கரம் 2011 தை மாதத்துக்குரிய கணக்கறிக்கை.