திருகோணமலை மலைமுந்தல் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல்.

திருகோணமலை மாவட்டம் மூதூர் பிதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட நல்லூர் கிராமசேவையாளர் பகுதிக்குட்பட்ட நீனாக்கேணி கிராமத்தில் அமைந்துள்ள மலைமுந்தல் மலைமகள் பாடசாலை மாணவ மாணவிகளுக்கான புத்தகப்பை மற்றும் அப்பியாசக்கொப்பிகள், எழுது கருவிகள் உட்பட பல கற்றல் உபகரணங்களும் 25.03.2011 அன்று “நேசக்கரம்” அமைப்பினால் வழங்கப்பட்டது. தரம் 1முதல் 5வரையான வகுப்புகளைக் கொண்ட மேற்படி பாடசாலையில் கற்கும் 97மாணவர்களுக்குமான முதல் கட்ட உதவியாக 65000/=இலங்கை ரூபா பெறுமதியான பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக இம்மாணவர்களுக்கான பாதணிகள் ஆடைகள் போன்றவற்றை வழங்க … Read more

Posted in செய்திகள், March 30th, 2011, Comments Off on திருகோணமலை மலைமுந்தல் பாடசாலை மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கல். | nesakkaram

இப்படியும் தமிழ்க் கிராமங்களும் குழந்தைகளும் இருக்கின்றவா ?

இப்படியும் தமிழ்க் கிராமங்களும் குழந்தைகளும் இருக்கின்றவா ?

இப்படியும் ஊர்கள் இருக்கின்றனவா ? என ஆச்சரியப்பட வைக்கும் கதைகள் நிறைந்தது தான் திருகோணலை மாவட்டம் , மூதூர் பிரதேச செயலர் பிரிவிற்கு உட்பட்ட கிராமங்களான கடற்கரைச்சேனை , நீனாக்கேணி (மலைமுந்தல்), நல்லூர் ஆகிய கிராமங்கள். இந்தக் கிராமத்தினர் ஆதிவாசிகள் வம்சத்தைச் சேர்ந்த குடிகளின் சமூகம். தமிழ்பேசும் தமிழர்கள் இவர்கள். மின்னொளி வெளிச்சத்தை , தொலைக்காட்சியை இல்லது இக்காலத்தில் நமது குழந்தைகள் காணும் இணையம் எதனையும் இந்தக்கிராமத்தின் குழந்தைகளும் அறியவில்லை பெரியவர்களும் அறியவில்லை. 10ம் வகுப்பைத்தாண்டி பிள்ளைகளைக் … Read more

Posted in செய்திகள், March 7th, 2011, Comments Off on இப்படியும் தமிழ்க் கிராமங்களும் குழந்தைகளும் இருக்கின்றவா ? | nesakkaram

பெப்ரவரி 2011 மாதாந்த கணக்கறிக்கை

ஒவ்வொரு மாத்துக்கான கணக்கறிக்கையும் ஒவ்வொரு மாதமும் 5ம் திகதிக்குள் வெளியிடப்படும். பெப்ரவரி 2011இற்கான கணக்கறிக்கை. கணக்கறிக்கை PDFவடிவில் இணைத்துள்ளோம். உதவும் உறவுகளுக்கு இதயம் நிறைந்த நன்றிகள்.

Posted in கணக்கறிக்கைகள், March 5th, 2011, Comments Off on பெப்ரவரி 2011 மாதாந்த கணக்கறிக்கை | nesakkaram

வெருகல் முகத்துவாரம் துவாரகா வித்தியாலய மாணவர்களுக்கு நேசக்கரம் உதவி

2011 ஏற்பட்ட வெள்ளத்தினால் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான கிழக்கு மாகாணத்திலுள்ள கிராமங்களுக்கான உதவிகளை நேசக்கரம் நிறுவனம் வழங்கி வருகிறது. இவ்வகையில் வெருகல் முகத்துவாரம் துவாரகா வித்தியாலயத்தில் கற்கும் மாணவர்களுக்கு இலங்கை ரூபா 20ஆயிரம் ரூபா பெறுமதியில் பாடசாலைச் சீருடைகள் மற்றும் பாதணிகளை 27.02.2011 அன்று வழங்கப்பட்டுள்ளது. வறுமைக்கோட்டின் கீழ் வாழும் இப்பகுதி மக்கள் ஏற்கனவே சுனாமியாலும் யுத்தத்தாலும் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளார்கள். இவ்வருட வெள்ளம் இவர்களை மீண்டும் ஆதரவற்றவர்கள் ஆக்கியிருக்கிறது. பாதிப்புற்ற குடும்பங்களிலிருந்து தமது கல்வியைத் தொடர மாணவர்கள் … Read more

Posted in செய்திகள், March 2nd, 2011, Comments Off on வெருகல் முகத்துவாரம் துவாரகா வித்தியாலய மாணவர்களுக்கு நேசக்கரம் உதவி | nesakkaram