புலமைப்பரிசிலுக்கு தோற்றும் படுவான்கரை 100 மாணவர்களுக்கான உதவிகள்.

புலமைப்பரிசிலுக்கு தோற்றும் படுவான்கரை 100 மாணவர்களுக்கான உதவிகள்.

மண்முனை , போரதீவு பிரதேச செயலர் பிரிவுக்கு உட்பட்ட 100புலமைப்பரிசில் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கான கற்றல் செயற்பாட்டுக்கான மாதிரி வினாத்தாள்கள் பால்மா போன்றவை 31.07.2011 அன்று வழங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்கள் முன்மாதிரி பரீட்சையில் 100புள்ளிகளுக்கு குறைவாக புள்ளிகள் பெற்றுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி வகுப்புகளை நடாத்தி பரீட்சையில் தேற்ற வைக்கும் முயற்சியில் ஊதியமற்று கற்பிக்கும் ஆசிரியர்களின் வேண்டுகைக்கு இணங்க நேசக்கரம் 60000ரூபா(அறுபதாயிரம் ரூபா) பெறுமதியான உதவிகளை வழங்கியுள்ளது. மேலதிகமாக பல மாணவர்கள் உதவிகளை எதிர்பார்க்கின்றனர் எம்மால் முழுமையான உதவிகளை வழங்க … Read more

Posted in செய்திகள், July 31st, 2011, Comments Off on புலமைப்பரிசிலுக்கு தோற்றும் படுவான்கரை 100 மாணவர்களுக்கான உதவிகள். | nesakkaram

போரால் பாதிக்கப்பட்ட படுவான்கரையின் இன்றைய கல்வி நிலமை

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள மண்முனை தென்மேற்கு (பட்டிப்பளை) பிரதேச செயலாளர் பிரிவும் போரதீவுப்பற்று (வெல்லாவெளி) பிரதேச செயலாளர் பிரிவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் மேற்கே படுவான்கரை என அழைக்கப்படும் பிரதேசத்தில் ஒரு பகுதியாகும். இந்த இரு பிரதேச செயலாளர் பிரிவுகளும் யுத்தத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டு பல தடவைகள் மக்கள் இடம்பெயர்வுகளும் இடம்பெற்ற பகுதியாகும். கடந்த காலங்களில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்த இந்த பிரதேசங்களை 2007 ஆம் ஆண்டு இராணுவத்தினர் மீண்டும் கைப்பற்றினர். இதனால் இந்தப் பகுதிகளில் வசித்த மக்கள் … Read more

Posted in செய்திகள், July 31st, 2011, Comments Off on போரால் பாதிக்கப்பட்ட படுவான்கரையின் இன்றைய கல்வி நிலமை | nesakkaram

வாழ்வாதார மேம்பாட்டுக்கான நேசக்கரம் வழங்கிய கடனுதவி

திருமுறிகண்டியில் வசிக்கும் 7குடும்பங்களுக்கான வாழ்வாதார மேம்பாட்டிற்கான உதவிகளை வேண்டியிருந்தோம். எமது வேண்டுதலை ஏற்று உதவிகளை வழங்கிய புலம்பெயர் உறவுகள் அனைவருக்கும் நேசக்கரம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. 7குடும்பங்களில் முதற்கட்டமாக 4குடும்பங்களுக்கான உதவிகளை வழங்கியிருக்கிறோம். தலா குடும்பமொன்றுக்கு 30000ரூபா அடிப்படையில் மொத்தம் 120000,00ரூபா வழங்கப்பட்டுள்ளது. இவ்வுதவியினை மீளளிப்புக்கடன் திட்ட அடிப்படையில் வழங்கியிருக்கிறோம். பயனாளிகள் 3மாதங்களின் பின்னர் மாதாந்தம் ஆயிரம் ரூபா வீதம் உதவியினை மீளளிப்பதாக உறுதியளித்தமைக்கு அமைவாக மேற்படி திட்டத்தை நிறைவேற்றியுள்ளோம். உதவிபெற்றவர்கள் மீளச் செலுத்தும் அடிப்படையில் … Read more

Posted in செய்திகள், July 27th, 2011, Comments Off on வாழ்வாதார மேம்பாட்டுக்கான நேசக்கரம் வழங்கிய கடனுதவி | nesakkaram

கிளிநொச்சியில் 17 மாணவர்களுக்கான நேசக்கரம் உதவி.

கிளிநொச்சி கனகபுரம் பாடசாலையில் கல்விகற்கும் பெற்றோரை இழந்த 12மாணவர்களுக்கும் கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலயத்தில் கற்கும் 5மாணவர்களுக்குமான மாதாந்தக் கொடுப்பனவு 13.07.2011 அன்று நேசக்கரம் தொடர்பாளர் தீபச்செல்வன் அவர்களால் வழங்கப்பட்டுள்ளது. தலா ஒரு மாணவருக்கு 3000ரூபா வீதம் மொத்தம் 51000ரூபா வழங்கப்பட்டுள்ளது. இம்மாணவர்களுக்கான உதவியை கட்டார் நாட்டிலிருந்து முகிலன் அவர்கள் கடந்த ஆறு மாதங்களாக தொடர்ந்து வழங்கி வந்தார். தொடர்ந்து இம்மாணவர்களுக்கு மீண்டும் உதவ முன்வந்து மேலும் 2மாதங்களுக்கான மாணவர்களுக்கான கொடுப்பனவினை முகிலன் அவர்கள் வழங்கியுள்ளார். மேற்படி மாணவர்களின் … Read more

Posted in செய்திகள், July 16th, 2011, Comments Off on கிளிநொச்சியில் 17 மாணவர்களுக்கான நேசக்கரம் உதவி. | nesakkaram

அடிப்படை வசதிகளுக்கே அவதியுறும் வன்னி மாணவர்கள்.

அடிப்படை வசதிகளுக்கே அவதியுறும் வன்னி மாணவர்கள்.

08.07.2011 அன்று நேசக்கரம் தொடர்பாளர்கள் ஊடாக செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி தற்காலி முகாமிற்குள் வதியும் மாணவர்களில் ஒருபகுதியினருக்கான கற்கை உபகரணங்களை வழங்கியிருந்தோம். தொடர்புபட்ட செய்தியைப்பார்க்க இந்த இணைப்பில் அழுத்துங்கள். தரம் 5 , தரம் 11, தரம் 12,13ஆகிய வகுப்புகளில் கற்கும் 244மாணவர்களுக்கான உதவிகள் மட்டுமே வழங்கியிருந்தோம். ஆனால் இம்முகாமில் 2031 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். 55ஆசிரியர்கள் கற்பிக்கின்றனர். உயர்தர மாணவர்களுக்கான ஆசியர்கள் பற்றாக்குறை போன்ற பல அவசியத்தேவைகளை இவர்கள் இழந்து நிற்கிறார்கள். முகாமில் வதியும் குடும்ப மற்றும் … Read more

Posted in செய்திகள், July 10th, 2011, Comments Off on அடிப்படை வசதிகளுக்கே அவதியுறும் வன்னி மாணவர்கள். | nesakkaram

ஆனந்தகுமாரசாமி முகாம் மாணவர்களுக்கு கற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது.

08.07.2011 ஆம் திகதி செட்டிகுளம் ஆனந்தகுமாரசாமி புனர்வாழ்வு முகாமில் கல்வி கற்கும் மாணவர்களில் 244 மாணவ மாணவியர்களுக்கான கற்கை உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. தரம் 5இல் கற்கும் 120 மாணவ மாணவியருக்கும் , தரம் 11இல் கற்கும் 82 மாணவர்களுக்கும் , தரம் 12,13இல் கற்கும் 42மாணவர்களுக்கும் அப்பியாசக்கொப்பிகள் , பேனாக்கள் , கொம்பாஸ் ஆகியவை வழங்கப்பட்டுள்ளது. 1. தரம் 5இல் கற்கும் மாணவர்களுக்கு:- (அ) அப்பியாசக் கொப்பிகள் (ஒருவருக்கு) – 3 (ஆ) பேனாக்கள்(ஒருவருக்கு) – 3 … Read more

Posted in செய்திகள், July 9th, 2011, 1 Comments | nesakkaram

நேசக்கரம் அமைப்பினது கடனுதவித் திட்டம்.

நேசக்கரம் அமைப்பானது இதுவரை காலங்களும் தாயகத்தில் போரினால் பாதிக்கப்பட்டவர்களிற்கான உதவிகளைப் புலம்பெயர் தேசத்து மக்களிடம் இருந்து பெற்று அதனை நேரடியாகவும் நேசக்கரம் அமைப்பின் தாயகத்துப் பணியாளர்கள் மூலமாகவும் கொண்டு சென்று சேர்த்து வருகின்றது அனைவரும் அறிந்ததே. நேசக்கரத்தில் பணியாற்றும் யாவரும் சேவை அடிப்படையில் ஊதியமற்று எம்முடன் இணைந்து நாம் வழங்கும் உதவிகளைக் கொண்டு போய் சேர்க்கிறார்கள். ஆரம்ப காலங்களில் அவசரத் தேவைகளிற்கான அடிப்படை உதவிகளையும் அவர்களது வாழ்வாதாரத் தேவைகளைக் கட்டியெழுப்பவும் வழங்கி வந்த உதவிகளில் இனிவரும் காலங்களில் … Read more

Posted in செய்திகள், July 6th, 2011, Comments Off on நேசக்கரம் அமைப்பினது கடனுதவித் திட்டம். | nesakkaram

2011யூன் மாதம் கணக்கறிக்கை

யூன்2011

Posted in கணக்கறிக்கைகள், July 5th, 2011, Comments Off on 2011யூன் மாதம் கணக்கறிக்கை | nesakkaram

வாழ்வாதாரத்தை உயர்த்த தொழில் கொடுங்கள் புலம்பெயர் உறவுகளே…!

திருமுறிகண்டிப் பகுதியில் குடியேறியுள்ள குடும்பங்களில் இருந்து 7குடும்பங்கள் தங்கள் தொழில் வாய்ப்பு வேண்டிய உதவிகளை வேண்டியுள்ளனர். இக்குடும்பங்கள் போரில் உறவுகளை இழந்தும் பிள்ளைகளை இழந்தும் காணப்படுகிறார்கள். இவர்களில் கணவன்மார் தடுப்புமுகாமில் உள்ள குடும்பத்துப் பெண்களும் உள்ளடங்குகின்றனர். இக்குடும்பங்கள் மலையகப்பகுதிகளிலிருந்து வன்னியில் வந்து குடியேறியவர்கள். ஆயினும் இவர்களது சந்ததி வன்னி திருமுறிகண்ணியிலேயே நீண்டகாலமாக வாழ்ந்து வருகின்றனர். இம்மக்கள் விவசாயத்தையும் கால்நடைகளையும் நம்பியே வாழ்ந்தவர்கள். தொடர் இடப்பெயர்வு யுத்தசூழல் இவர்களது வாழ்வாதாரத்தைச் சிதைத்துவிட்டது. இன்று யுத்தம் முடிவுற்று முகாம்களிலிருந்து மீள்குடியேறியுள்ள … Read more

Posted in செய்திகள், July 5th, 2011, 3 Comments | nesakkaram

நேசக்கரம் ஆறுமாதங்களின் மொத்த கணக்கறிக்கையின் தொகுப்பு.

தைமாதம் கிழக்கு மாகணத்தில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தத்திற்காக நேசக்கரம் உதவும் உறவுகள் வழங்கிய உதவித் தொகை :- (1473,82€, 350,00£) ( 277825,00/=இலங்கை ரூபாவில்) இவ்வுதவி மூலம் 170 குழந்தைகளுக்கான பால்மா உணவு வகைகளும் 25குடும்பங்களுக்கான உலர் உணவு வகைகளும் வழங்கப்பட்டது. தைமாதம் மாதாந்த உதவி மற்றும் மாணவர்கள் உதவி – 617,80€ பயன்பெற்றோர் தொகை :- + மாதாந்த குடும்ப உதவி – 2 குடும்பம். மாணவர்கள் கல்வியுதவி – 69மாணவர்கள். சுயதொழில் – 1 … Read more

Posted in கணக்கறிக்கைகள், July 3rd, 2011, Comments Off on நேசக்கரம் ஆறுமாதங்களின் மொத்த கணக்கறிக்கையின் தொகுப்பு. | nesakkaram