ஆனந்த குமாரசுவாமி முகாம் மாணவர்களுக்கு 100 பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது.

ஆனந்தகுமாரசாமி (மெனிக்பாம் செட்டிகுளம் வவுனியா) நலன்புரி நிலைய பொதுப்பாடசாலை மாணவர்களுக்கு 20.08.2011 அன்று 100பாதணிகள் வழங்கப்பட்டது. கடந்தமாதம் மெனிக்பாம் முகாமில் வதியும் 800மாணவர்களுக்கான பாதணிகள் , சீருடைகள் போன்ற உதவிகளை வேண்டியிருந்தோம். அதன் முதற்கட்டமாக நேசக்கரம் உறவுகளால் வழங்கப்பட்ட உதவியிலிருந்து இவ்வுதவியை 100மாணவர்கள் பாதணிகளைப் பெற்றுக் கொண்டுள்ளனர். இம்மாணவர்களுக்கான தங்கள் உதவிகளை வழங்கிய MRS.Angela Sechneidereit (KFD SANKT JOSEPH BOCHUM,GERMANY) அவர்களுக்கும் தனது 50வது பிறந்தநாளை முன்னிட்டு உதவியை வழங்கிய பவானி தர்மகுலசிங்கம் அவர்களுக்கும் பெயர் … Read more

Posted in செய்திகள், August 27th, 2011, Comments Off on ஆனந்த குமாரசுவாமி முகாம் மாணவர்களுக்கு 100 பாதணிகள் வழங்கப்பட்டுள்ளது. | nesakkaram

2007 ஜனவரி முதல் 2010 டிசம்பர் வரையான உதவி

1) நேசக்கரம் 2007 முதல் 2009வரையான உதவிகள் படங்கள் செய்திகள்.

Posted in உதவிபெற்றோர் கடிதங்கள்/ படங்கள் 2007 - 2010, August 25th, 2011, Comments Off on 2007 ஜனவரி முதல் 2010 டிசம்பர் வரையான உதவி | nesakkaram

20 மாணவர்களுக்கான அவசர உதவிகளை வேண்டுகிறோம்

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களிலிருந்து கல்வி கற்கும் 15மாணவர்களுக்கான கல்வியுதவிகள் எதிர்பார்க்கப்படுகிறது. மீள்குடியேறியுள்ள கிராமங்களில் வாழும் இம்மாணவர்கள் தமது கல்விச் செயற்பாட்டைத் தொடர்வதற்கான பொருளாதார உதவிகளை இழந்து நிற்கின்றனர். ஒரு மாணவருக்கு 10€ (அண்ணளவாக இலங்கை ரூபா 1500ரூபா) தேவைப்படுகிறது. பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவர்கள் முன்னாள் போராளிகளிலிருந்து 5மாணவர்கள் தமது கல்வியைத் தொடர்வதற்கான உதவிகளை எம்மிடம் வேண்டியுள்ளனர். 2மாணவிகளும் 3மாணவர்களும் உறவுகளிடமிருந்து உதவிகளை எதிர்பார்த்து விண்ணப்பித்துள்ளனர். ஒரு மாணவருக்கு தலா 4ஆயிரம் ரூபா தேவைப்படுகிறது. உதவ விரும்பும் … Read more

Posted in செய்திகள், August 18th, 2011, Comments Off on 20 மாணவர்களுக்கான அவசர உதவிகளை வேண்டுகிறோம் | nesakkaram

5குடும்பங்களுக்கான தொழில்விருத்தி உதவி வழங்கப்பட்டுள்ளது

போரால் பாதிக்கப்பட்ட 5குடும்பங்களுக்கான தொழில் விருத்திக்கான உதவியாக 252500ரூபா (இரண்டு இலட்சத்து ஐம்பத்து இரண்டாயிரத்து ஐநூறு ரூபா) பண உதவியாக வழங்கப்பட்டுள்ளது. பிரித்தானியாவிலிருந்து நேசக்கரம் நீட்டிய நாதன் , பவித்திரன் , MGR ஆகியோரின் உதவியில் மேற்படி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது. மேலும் 3குடும்பங்களுக்கான அவசர நிதியாக 50000ரூபா (ஐம்பதாயிரம் ரூபா) பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. இப்பங்களிப்பை வழங்கிய பெயர் குறிப்பிட விரும்பாத உறவுகளுக்கும் எமது இதயம் நிறைந்த நன்றிகளை கிழக்கு மாகாணத்தில் போரால் பாதிக்கப்பட்ட உதவிகள் பெற்ற குடும்பங்களின் சார்பாகத் … Read more

Posted in செய்திகள், August 18th, 2011, Comments Off on 5குடும்பங்களுக்கான தொழில்விருத்தி உதவி வழங்கப்பட்டுள்ளது | nesakkaram

உறவுகளின்ஆதரவில்லை உதவவும் ஆட்களில்லாத 23வயது இளைஞன்

10வருடங்கள் எங்களுக்காகப் போராடியவன். இன்று காலிழந்து கையும் பாதிப்புற்று உடலில் காயங்களோடு மீண்டிருக்கிற ஒரு முன்னாள் போராளி இவன். முன்னாள் போராளிகள் பல ஆயிரம் பேரின் வாழ்வு போல இவனது வாழ்வும் அச்சம் தருகின்றனவாகவும் அவலம் நிறைந்தனவாகவும் விடிகிறது. இவனுக்கு அம்மாவில்லை அப்பாவில்லை. இவனைப் பெற்றவர்களை இவனுக்குத் தெரியாது. இவனை எடுத்து வளர்த்தவர்கள் மாற்றான் பிள்ளையென ஒதுக்கியதோடு மனசால் மிகவும் நொந்து போனான். இன்றும் இவனை வருத்திக் கொண்டிருக்கும் உறவுகளின் சொல்வதைகளால் தன்னையே வெறுக்கும் நிலமையில் இருக்கிறான். … Read more

Posted in ஒலிப்பதிவுகள், August 13th, 2011, Comments Off on உறவுகளின்ஆதரவில்லை உதவவும் ஆட்களில்லாத 23வயது இளைஞன் | nesakkaram

2011யூலை மாதம் கணக்கறிக்கை

யூலை2011

Posted in கணக்கறிக்கைகள், August 5th, 2011, Comments Off on 2011யூலை மாதம் கணக்கறிக்கை | nesakkaram

யூலை 2011 கணக்கறிக்கை

யூலை2011 கணக்கறிக்கை PDF வடிவில் இணைக்கப்படுகிறது. இணைப்பில் அழுத்தி கணக்கறிக்கையை பாருங்கள். கணக்கறிக்கை 2011 யூலைமாதம். இம்மாதம் பயன்பெற்ற மாணவர்கள் எண்ணிக்கை – 368. இம்மாதம் பயன்பெற்ற குடும்பங்கள் எண்ணிக்கை – 6. நேரடியாக பயன்பெறும் குடும்பங்கள் மாணவர்கள் எண்ணிக்கை இங்கு சேர்க்கப்படவில்லை. *உதவிய அனைவருக்கும் இதயம் நிறைந்த நன்றிகள்*

Posted in கணக்கறிக்கைகள், August 1st, 2011, Comments Off on யூலை 2011 கணக்கறிக்கை | nesakkaram