ஜெகதீஸ்வரனின் இன்றைய நிலை மகசீன் சிறைச்சாலையிலிருந்து

ஜெகதீஸ்வரனின் இன்றைய நிலை மகசீன் சிறைச்சாலையிலிருந்து

உயிருக்குப் போராடும் ஜெகதீஸ்வரனின் நிலமை பற்றி மகசீன் சிறைச்சாலையிலிருந்து கைதியொருவர் தருகிற விபரங்கள்…. ஒலிப்பதிவைக் கேட்க மேலுள்ள இணைப்பில் அழுத்திக் கேளுங்கள். முக்கியகுறிப்பு :- ஜெகதீஸ்வரனின் உயிர்காக்க உதவ விரும்புவோர் பேபால் ஊடாக அல்லது வங்கியூடாக உதவலாம்.

Posted in ஒலிப்பதிவுகள், செய்திகள், September 30th, 2011, Comments Off on ஜெகதீஸ்வரனின் இன்றைய நிலை மகசீன் சிறைச்சாலையிலிருந்து | nesakkaram

ஜெகதீஸ்வரனைக் காக்குமாறு அவரது அக்காவின் வேண்டுகை

ஜெகதீஸ்வரனைக் காக்குமாறு அவரது அக்காவின் வேண்டுகை

ஜெகதீஸ்வரனெண்ட ஒரு 33வயது இளைஞன் தன்ரை உயிருக்காகப் போராடிக்கொண்டிருக்கிற செய்திகளை அண்மைய நாட்களில நாங்கள் கேட்டுக் கொண்டிருக்கிறம். கடைசியுத்தத்தில காயமடைஞ்சு மருத்துவமனையிலயிருந்தவனை பூசா சிறைக்குக் கொண்டு போயிருக்கினம். அந்தச் சிறையில சரியான மருத்துவமில்லாமல் சரியான கவனிப்பில்லாமல் ஜெகதீஸ்வரன் தன்னுடைய இரண்டு சிறுநீரகமும் முழுமையாப் பாதிக்கப்பட்டு கடுமையான நிலமையில இப்ப கொழும்பு ஆதார வைத்தியசாலையில அவசர சிகிச்சைப்பிரிவில இருக்கிறார். இன்னும் 10கிழமையில இந்த இளைஞனுக்கு மாற்றுச்சிறுநீரகம் பொருத்தாவிட்டா இவரை காப்பாற்றேலாமப் போயிடும். எங்களுக்காக தன்னுடைய காலத்தை வாழ்வைத் தந்த … Read more

Posted in ஒலிப்பதிவுகள், செய்திகள், September 29th, 2011, Comments Off on ஜெகதீஸ்வரனைக் காக்குமாறு அவரது அக்காவின் வேண்டுகை | nesakkaram

உயிருக்குப் போராடும் ஜெகதீஸ்வரனுக்கு உதவுங்கள்

உயிருக்குப் போராடும் ஜெகதீஸ்வரனுக்கு உதவுங்கள்

அவசரம் ஒரு உயிர்காக்க வேண்டிய அவசியம் நேற்று முதல் ஒரு உயிரைக்காக்குமாறு வேண்டுதல்கள் ஊடகங்கள் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கிறது. கடைசி யுத்தத்தில் முதுகுப்பகுதியில் காயமடைந்து மருத்துவம் பெற்றுக்கொண்ட நேரம் கைது செய்யப்பட்டு சிறையில் தடுத்து வைக்கப்பட்டவர் ஜெகதீஸ்வரன். இந்த ஜெகதீஸ்வரன் என்ற முன்னாள் போராளி கொழும்பு வைத்தியசாலையில் அவசரசிகிச்சைப்பிரிவில் தனது உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். அவசர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கும் இந்த 33வயது இளைஞனின் 2சிறுநீரகங்களும் பாதிப்புற்றுள்ள நிலமையில் மாற்றுச்சிறுநீரகம் பொருத்த வேண்டிய நிலமையில் இருக்கிறார். எதிர்வரும் 3மாதங்களுக்குள் … Read more

Posted in செய்திகள், September 26th, 2011, Comments Off on உயிருக்குப் போராடும் ஜெகதீஸ்வரனுக்கு உதவுங்கள் | nesakkaram

25குடும்பங்களின் விபரங்கள்:- உதவிகளுக்காக காத்திருக்கிறார்கள்.

(1) வடிவேல் கோணேஸ்வரி (39 வயது) கணவன் : வடிவேல் (41 வயது) 30.08.2008 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர். பிள்ளைகள் (அ) காயத்திரி (19) பாடசாலை செல்பவர் (ஆ) ரசிகரன் (17) பாடசாலை செல்பவர் (இ) நிசாந்தன் (16) பாடசாலை செல்பவர் முகவரி இறால்குழி மூதுரில் (2) குகன் சுதர்சினி (27 வயது) கணவன் : நவரெட்ணம் குகன் (37) 04.02.2007 இல் இராணுவத்தால் கொல்லப்பட்டவர். பிள்ளைகள் (அ) தனுஜன் (10 வயது) (ஆ) சஜிதா (5 … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், September 24th, 2011, Comments Off on 25குடும்பங்களின் விபரங்கள்:- உதவிகளுக்காக காத்திருக்கிறார்கள். | nesakkaram

2007 முதல் 2009 வரையான உதவிகள் படங்கள் கடிதங்கள்

2007 முதல் 2009 வரையான உதவிகள் படங்கள் கடிதங்கள்

செயற்திட்டம்:தமிழீழம் வவுனியா செட்டிக்குளம் செயலாளர் பிரிவில் வசிக்கும் வருமானம் குறைந்தோர், விதவைகள் மற்றும் உதவி ஏதுமற்ற அனாதைக் குடும்பங்களை சேர்ந்த 28 வறியகுடும்பங்களுக்கான நிதி உதவி. பங்களிப்பு தொகை: [இலங்கை ரூபாயில்] ரூ 233,724.00[இரண்டு லட்சத்து முப்பத்தி மூவாயிரத்து எழுநூற்று இரபத்தி நான்கு ரூபா] வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் ஊடாக மாதர் கிராம அபிவிருத்திச்சங்கத்தலைவி திருமதி கமலாதேவி ஊடாக 28குடும்பங்களுக்கான சுயதொழில் ஊக்குவிப்பாக வழங்கப்பட்டது. திட்டத்தை செயற்படுத்தியவர்: சாந்தி. புகைப்பட விபரம்:- தமிழர் புனர்வாழ்வுக்கழகத்திற்கு … Read more

வாரம் 7 குடும்பங்களின் விபரம் தருகிறோம் உதவமாட்டீங்களா….?

யுத்தத்தால் பாதிக்கப்பட்டு தமது வாழ்வாதாரத்தையும் குடும்ப உறுப்பினர்களையும் இழந்த குடும்பங்களுக்கான உதவிகளை உறவுகளே உங்களிடமிருந்து எதிர்பார்க்கிறோம். இன்று முதல் வாரம் 7 குடும்பங்களின் விபரங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம். உலகெங்கும் பரந்துவாழும் உங்களால் நிச்சயம் வாரம் ஏழு குடும்பத்திற்கான உதவிகளை வழங்க முடியும் என்ற நம்பிக்கையில் உங்களிடம் உதவியை வேண்டுகிறோம். 1)   இந்திரன் :- இவர் தலையில் காயமுற்று ஒரு கையும் காலும் இயங்க முடியாதுள்ளார். இவரது மனைவி ஒரு காலையிழந்தவர். 5வயதில் இவர்களுக்கு ஒரு குழந்தை … Read more

அரிசி ஆலை அமைப்பதற்கான கடன் உதவி கோரல்

யுத்தத்தால் பாதிப்புற்றவர்களுக்கான தொழில்வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில் சிறு சிறு தொழில் முயற்சிகளுக்கான திட்டங்களை நடைமுறைப்படுத்தி வருகிறோம். இவ்வகையில் வவுணதீவு மட்டக்களப்பு மாவட்டத்தின் படுவான்கரைப் பிரதேசம் என அழைக்கப்படும் மண்முனை மேற்கு (வவுணதீவு) பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட பகுதியில் அரிசியாலை அமைப்பதற்கான ஏற்பாடொன்றினை  மேற்கொள்கிறோம். யுத்தத்தால் பாதிப்புற்ற குடும்பங்கள் சிலவற்றைத் தெரிவு செய்து முதல்கட்டம் 4குடும்பங்களை உள்வாங்கி அவர்களுக்கான தொழில் வாய்ப்பினை ஏற்படுத்த இத்திட்டத்தை முன்னெடுத்துள்ளோம். மேற்படி பிரதேசத்தில் அரிசியாலை அமைவதனால் ஒப்பீட்டளவில் அதிக பலனைப் பெறமுடியும். … Read more

Posted in செய்திகள், September 14th, 2011, Comments Off on அரிசி ஆலை அமைப்பதற்கான கடன் உதவி கோரல் | nesakkaram

கணவனுமில்லை வாழ்வை கொண்டு செல்ல உதவியுமில்லை

ஆயிரமாயிரம் அம்மாக்களின் துயரங்களால் நிறைந்திருக்கிற நிலத்திலிருந்து ஒரு தாயின் கண்ணீர்க்கதைகள். உதவிக்காகவே இந்தத்தாயும் எங்களிடம் உதவி வேண்டி நிற்கிறார்.

Posted in ஒலிப்பதிவுகள், September 13th, 2011, Comments Off on கணவனுமில்லை வாழ்வை கொண்டு செல்ல உதவியுமில்லை | nesakkaram

முள்ளிவாய்க்காலில் சனங்களின் கால்களில் மிதிபட்டு வந்த காலிழந்த பெண்ணின் கண்ணீர்

2009மார்ச்மாதம் 16ம் திகதி இருகால்களையும் சமர்க்களத்தில் இழந்தவள் இவள். முள்ளிவாய்க்காலிலிருந்து புறப்பட்ட மக்கள் வெள்ளத்தில் மிதிபட்டு முட்களும் மனிதக்கால்களும் காயப்படுத்தி உயிரோடு வவுனியாவை அடைந்தவள். முகாமில் பட்ட துயரைச் சொல்லியழும் கதைகள் கண்களை ஈரமாக்கிவிடுகிற துயர்களவை. மலங்களிக்கக்கூட வசதியற்ற முகாமில்  3அல்லது 4நாளுக்கு ஒருமுறை இருளும் வரை காத்திருந்தே இயற்கை உபாதையையும் கழித்திருக்கிறாள். ஊனமுற்றவள் ஊருக்குப் போவதில்லை உறவுகளுக்குத் தொல்லை கொடுப்பதில்லையென்ற முடிவோடு இருந்தவள் முகாமிலிருந்து ஊர்போக வேண்டிய இக்கட்டில் தள்ளியது. பிறந்து 6மாதத்தில் தாயை இழந்தவள் … Read more

Posted in ஒலிப்பதிவுகள், September 7th, 2011, Comments Off on முள்ளிவாய்க்காலில் சனங்களின் கால்களில் மிதிபட்டு வந்த காலிழந்த பெண்ணின் கண்ணீர் | nesakkaram

2011ஓகஸ்ட் மாதம் கணக்கறிக்கை

ஓகஸ்ட்2011

Posted in கணக்கறிக்கைகள், September 5th, 2011, Comments Off on 2011ஓகஸ்ட் மாதம் கணக்கறிக்கை | nesakkaram