கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவிகள் வழங்கப்பட்டது.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவிகள் வழங்கப்பட்டது.

24.01.2012 கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக புதிய மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கழுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலமையில்அவதிப்படுகிற கைதிகளுக்கான முதற்கட்ட அவசர உதவியாக சாரம், பற்பசை, பற்தூரிகை சவர்க்காரம் , சவரக்கத்தி , பிஸ்கட் பக்கற் போன்றவை வழங்கப்பட்டுள்ளது. இப்பொருட்களை த.தே.கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், சுரேஸ் பிரேமச்சந்திரன் , விநாயகமூர்த்தி ஆகியோர் நேரில் சென்று வழங்கியுள்ளனர். கைதிகளை நேரில் … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 27th, 2012, Comments Off on கலவரத்தால் பாதிக்கப்பட்ட தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவிகள் வழங்கப்பட்டது. | nesakkaram

கலவரத்தால் பாதிக்கப்பட்ட 200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவி தேவை.

கலவரத்தால் பாதிக்கப்பட்ட 200தமிழ் அரசியல் கைதிகளுக்கான அவசர உதவி தேவை.

நேற்றைய தினம் கொழும்பு புதிய மகசீன் சிறைச்சாலையில் இடம்பெற்ற வன்முறை காரணமாக புதிய மகசீன் சிறையில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் கழுத்துறை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இவர்களுக்கான எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாத நிலமையில் மிகுந்த சிரமத்துக்கு கைதிகள் உள்ளாகியுள்ளனர். இவர்களுக்கான அவசர தேவைகளாக ஆடைகள் , பற்பசை , சவர்க்காரம் போன்ற அத்தியாவசிய தேவைகளை கைதிகள் வேண்டியுள்ளனர். குடிதண்ணீர் முதற்கொண்டு அடிப்படை வசதிகள் அற்ற நிலமையில் சிரமப்படுகிறார்கள்.எனினும் நிதியுதவி எதுவும் எம்மிடம் கையிருப்பில் இல்லாமையால் புலம்பெயர் … Read more

ஒரு முன்னாள் பெண்போராளி சுயதொழில் செய்து முன்னேற விரும்புகிறாள்

ஒரு முன்னாள் பெண்போராளி சுயதொழில் செய்து முன்னேற விரும்புகிறாள்

முன்னாள் போராளிகளின் இன்றைய நிலமையை மீண்டும் ஞாபகப்படுத்துகிற இந்த முன்னாள் பெண்போராளியின் கதையைக் கேளுங்கோ. இரண்டரை வருசமாகீட்டுது ஆனால்முன்னாள் போராளிகள் பற்றி இப்ப அதிகம் கதைக்கிறோம். குறிப்பாக பெண் போராளிகள் பற்றி அதிகம் கதைகளையும் அதிகமாக அறிகிறோம். ஏல்லாத்தையும் இழந்து இன்று வீடுதிரும்பியிருக்கிற இந்தப் பெண்போராளியின் சோகங்கள் நிறைய. முன்னாள் பெண்போராளிகளின் அவலத்தின் அடையாளமாக இந்தப் பெண் போராளி எங்களிட்டை கேட்கிறது ஒரு சின்ன உதவிதான். வீட்டோடை இருந்து கோழி வளர்ப்புச் செய்து தனது சுயபொருளாதாரத்தில் முன்னேற … Read more

ஆதரவற்றுப்போன பெற்றோரைக் காப்பாற்றுமாறு இறைஞ்சுகிற சிவா.

ஆதரவற்றுப்போன பெற்றோரைக் காப்பாற்றுமாறு இறைஞ்சுகிற சிவா.

சிவா பிறந்தது வாழ்ந்தது மலையகம். இவனுக்கு 28வயது. இப்போது 4வருடங்களாக சிறையில் வாழ்கிறான். தமிழர்களுக்கு உதவினான் என்ற குற்றச்சாட்டின் கீழ் தண்டனை அனுபவிக்கிறான். இவனை நம்பிய இவனது வயதான பெற்றோர்கள் ஆதரவில்லாது தவிக்கிறார்கள். மலையகத்தாரை நாங்கள் கைவிட்டுவிட்டோம் என்ற குறை பல மலையக நண்பர்களிடம் உண்டு. அதேபோன்ற மனநிலமையில் தான் சிவாவும் இருக்கிறான். இவனது பெற்றோர்கள் ஒருசுயதொழில் செய்ய எம்மிடம் உதவிகேட்டுள்ள சிவா லட்சங்கள் கேட்கவில்லை. தேயிலை வியாபாரம் செய்ய ஒரு 35ஆயிரம் ரூபா தான் கேட்கிறான். … Read more

அனுராதபுரம் சிறையிலிருந்து அன்ரன் நியூட்டன்

அனுராதபுரம் சிறையிலிருந்து அன்ரன் நியூட்டன்

அனுராதபுரம் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள நியூட்டன் என்ற கைதி தனது தந்தையாரின் கண் சிகிச்சைக்கு உதவி கோரியிருந்தார். அவருக்கான உதவியினை பெயர் குறிப்பிடாத உறவொருவர் முன்வந்து வழங்கியிருந்தார். உதவி பெற்ற அன்ரன் நியூடனின் நன்றிக்கடிதம். தொடர்புபட்ட செய்தி:-http://nesakkaram.org/ta/?p=1198

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 17th, 2012, Comments Off on அனுராதபுரம் சிறையிலிருந்து அன்ரன் நியூட்டன் | nesakkaram

வவுனியா சிறையிலிருந்து வாழ்வாதார உதவியைப் பெற்றுக் கொண்ட கட்டையன் லோகேஸ்வரன்

வவுனியா சிறையிலிருந்து வாழ்வாதார உதவியைப் பெற்றுக் கொண்ட கட்டையன் லோகேஸ்வரன்

கட்டையன் லோகேஸ்வரன் ( வயது 40) இவர் ஒரு முன்னாள் போராளி. இறுதியுத்தத்தின் முடிவில் சரணடைந்து புனர்வாழ்வழிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டவர். பின்னர் 18.01.2010 அன்று குற்றத்தடுப்புப் புலனாய்வுப்பிரிவினரால் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தற்போது வவுனியா சிறையில் இருக்கிறார். இக்குடும்பத்திற்கு கனடாவிலிருந்து பெயர்குறிப்பிய விரும்பாத உறவு முன்வந்து வழங்கியுள்ளார். வவுனியா சிறையிலிருந்து வாழ்வாதார உதவியைப் பெற்றுக் கொண்ட கட்டையன் லோகேஸ்வரன் கடிதம்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 17th, 2012, Comments Off on வவுனியா சிறையிலிருந்து வாழ்வாதார உதவியைப் பெற்றுக் கொண்ட கட்டையன் லோகேஸ்வரன் | nesakkaram

யுத்தத்தில் கணவனை இழந்த கணேசம்மா

யுத்தத்தில் கணவனை இழந்த கணேசம்மா

யுத்தத்தில் கணவனை இழந்த கணேசம்மா அவர்களுக்கான மாதாந்த கொடுப்பனவாக வழங்கப்பட்ட உதவிக்கான நன்றிக்கடிதம். கடிதம் வருமாறு :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 17th, 2012, Comments Off on யுத்தத்தில் கணவனை இழந்த கணேசம்மா | nesakkaram

இராசேந்திரம் கோமதி அவர்களின் நன்றிக்கடிதம்

இராசேந்திரம் கோமதி அவர்களின் நன்றிக்கடிதம்

அனுராதபுரம் சிறைச்சாலையில் வாடும் இராசேந்திரம் அவர்களின் குடும்பத்திற்கான வாழ்வாதார உதவியைப் பெற்றுக் கொண்ட இராசேந்திரம் கோமதி அவர்களின் நன்றிக்கடிதம். கடிதம் வருமாறு :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 17th, 2012, Comments Off on இராசேந்திரம் கோமதி அவர்களின் நன்றிக்கடிதம் | nesakkaram

மகசீன் சிறையிலிருந்து அகிலன் அப்பாத்துரை

மகசீன் சிறையிலிருந்து அகிலன் அப்பாத்துரை

மகசீன் சிறையிலிருந்து வாழ்வாதார உதவியைப் பெற்றுக் கொண்ட அகிலன் அப்பாத்துரையின் கடிதம். கடிதம் வருமாறு :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 17th, 2012, Comments Off on மகசீன் சிறையிலிருந்து அகிலன் அப்பாத்துரை | nesakkaram

யாழ் சிறையிலிருந்து வினோத்குமார் எழுதிய கடிதம்

யாழ் சிறையிலிருந்து வினோத்குமார் எழுதிய கடிதம்

இறுதியுத்தத்தில் காயமுற்று முள்ளந்தண்டு வடம் பாதிக்கப்பட்ட திருமதி வினோத்குமார் சிந்து அவர்களுக்கான அவசர மருத்தவ உதவியினை யாழ் சிறையிலிருந்து வினோத்குமார் நேசக்கரத்திடம் வேண்டியிருந்தார். சிந்து அவர்களுக்கான அவசர மருத்துவ உதவியாக இலங்கைரூபா 15ஆயிரம் ரூபாவினை கனடாவிலிருந்து உமாசீலன் என்ற உறவு முன்வந்து வழங்கியிருந்தார். உமாசீலனின் உதவியைப் பெற்றுக் கொண்ட வினோத்குமார் குடும்பத்தின் நன்றியினை வினோத்குமார் எமக்கு கடிதமாக எழுதியுள்ளார். கடிதம் வருமாறு :-

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், January 17th, 2012, Comments Off on யாழ் சிறையிலிருந்து வினோத்குமார் எழுதிய கடிதம் | nesakkaram