மருத்துவ உதவிக்கு நன்றி – மஞ்சுளா

மருத்துவ உதவிக்கு நன்றி – மஞ்சுளா

இறுதி யுத்தத்தில் காயமடைந்து நடக்க முடியாத நிலமையில் இருந்த முன்னாள் போராளி மஞ்சுளா தனது மருத்துவ செலவுக்கு உதவிகள் இல்லாது கடந்த 3வருடங்களாக அவதிப்பட்டுக் கொண்டிருந்தார். வேதனை தாங்க முடியாது தனது காலை அகற்றுமாறு மருத்துவர்களிடம் வேண்டியிருந்தார் மஞ்சுளா. மஞ்சுளாவின் நிலமையை பிரித்தானியாவில் வதியும் திருமதி.ஜெயக்குமார் லலிதா அவர்களிடம் விளக்கியிருந்தோம். உடனடியாக மஞ்சளாவிற்கு சிகிச்சைக்காக 50ஆயிரம் ரூபாவினை வழங்கி மஞ்சுளாவுடன் தொடர்ந்து தொடர்பில் இருந்து ஆதரவினை வழங்கியிருந்தார் திருமதி.ஜெயக்குமார் லலிதா அவர்கள். உதவி கிடைத்ததும் இயங்க முடியாதிருந்த … Read more

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், October 26th, 2012, Comments Off on மருத்துவ உதவிக்கு நன்றி – மஞ்சுளா | nesakkaram

‘நேசம் கல்வித் திட்டம் 2012″ 92மாணவர்களுக்கு உதவ முன்வந்தவர்களுக்கு நன்றி

‘நேசம் கல்வித் திட்டம் 2012″ 92மாணவர்களுக்கு உதவ முன்வந்தவர்களுக்கு நன்றி

5ம் வகுப்பு புலமைப்பரிசிலுக்கு தோற்றிய மாணவர்களில் 92 மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர்.சித்தியடைந்த மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக ஒவ்வோர மாணவருக்கும் 500ரூபா சேமிப்பிலிட்டு சேமிப்புக் கணக்கும் மற்றும் சிறு பரிசுப்பொருட்களும் வழங்க எமது கல்விக்குழுவினர் முடிவுசெய்தனர். இம்முயற்சிக்கான ஆதரவினை வேண்டிய தரவறிக்கையை நேசக்கரம் பங்களிப்பாளர்களுக்கு அனுப்பியிருந்தோம். நேசக்கரத்தின் பயனாளிகள் பலருக்கான உதவிகளை கடந்த ஒரு வருடங்களாக தொடர்ந்து வழங்கி வருகிற பிரித்தானியாவில் வசிக்கும் திரு.தெய்வேந்திரன் (குட்டிஅண்ணா)அவர்கள் மேற்படி 92 மாணவர்களுக்கும் சேமிப்பு வைப்பிலிட 46ஆயிரம் ரூபாவினை … Read more

Posted in செய்திகள், October 25th, 2012, Comments Off on ‘நேசம் கல்வித் திட்டம் 2012″ 92மாணவர்களுக்கு உதவ முன்வந்தவர்களுக்கு நன்றி | nesakkaram

வாழ்வாதார உதவிபெற்ற முன்னாள் போராளியின் நன்றி

வாழ்வாதார உதவிபெற்ற முன்னாள் போராளியின் நன்றி

முன்னாள் போராளி குடும்பமொன்றின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த தங்கள் உதவிகளை வழங்கிய ஆதிபன் (19ஆயிரம் ரூபா) கருணாகரன் (20ஆயிரம் ரூபா) ஆகியோருக்கு உதவிபெற்ற குடும்பத் தலைவன் எழுதிய நன்றிக் கடிதம். உதவிய ஆதிபன் , கருணாகரன் இருவருக்கும் நேசக்கரம் தனது நன்றிகளைத் தெரிவிக்கிறது.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், October 25th, 2012, Comments Off on வாழ்வாதார உதவிபெற்ற முன்னாள் போராளியின் நன்றி | nesakkaram

கருணாகரனுக்கு நன்றி கூறும் செல்வப்பிரியா

கருணாகரனுக்கு நன்றி கூறும் செல்வப்பிரியா

கனடாவிலிருந்து அம்பாறை திருக்கோவில் பகுதியில் வாழும் செல்வப்பிரியா என்ற மாணவிக்கு அவளது கல்விக்காக 30ஆயிரம் ரூபா உதவியினை கனடாவிலிருந்து கருணாகரன் என்ற உறவு வழங்கியுள்ளார். இம்மாணவியின் தந்தை மாவீரர். உதவி பெற்ற செல்வப்பிரியாவும் அவரது தாயார் ரதி அவர்களும் எழுதிய நன்றிக்கடிதத்தை நன்றியுடன் தருகிறோம்.

Posted in உதவிபெற்ற நபர்கள் கடிதம் படம், செய்திகள், October 25th, 2012, Comments Off on கருணாகரனுக்கு நன்றி கூறும் செல்வப்பிரியா | nesakkaram

2012 ஒக்ரோபர் கணக்கறிக்கை.

2012 ஒக்ரோபர் கணக்கறிக்கை.

Posted in கணக்கறிக்கைகள், October 10th, 2012, Comments Off on 2012 ஒக்ரோபர் கணக்கறிக்கை. | nesakkaram

நேசக்கரம் செப்டெம்பர் 2012 கணக்கறிக்கை.

நேசக்கரம் செப்டெம்பர்  2012 கணக்கறிக்கை.

நேசக்கரம் செப்டெம்பர் 2012 கணக்கறிக்கை. கணக்கறிக்கையினை PDFவடிவில் பார்க்க கீழ்வரும் இணைப்பில் அழுத்துங்கள்.

Posted in கணக்கறிக்கைகள், செய்திகள், October 10th, 2012, Comments Off on நேசக்கரம் செப்டெம்பர் 2012 கணக்கறிக்கை. | nesakkaram

‘நேசம்2012’ கல்வித்திட்டம் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் விபரம்

‘நேசம்2012’ கல்வித்திட்டம் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் விபரம்

“நேசம் கல்வித் திட்டம் 2012” 5ம் வகுப்பு புலமைப்பரிசிலுக்கு தோற்றிய மாணவர்கள் 2500பேருக்கான பயிற்சி வகுப்புகளை நடத்தியிருந்தோம். இம்மாணவர்கள் யாவரும் மட்டக்களப்பு அம்பாறை மாவட்டங்களிலிருந்து பங்குபற்றியிருந்தனர். குறுகிய காலத்தில் ஒழுங்கு செய்யப்பட்ட மேற்படி பயிற்சிகளில் கலந்து கொண்ட மாணவர்களில் 92 மாணவர்கள் சிறந்த புள்ளிகளைப் பெற்று சித்தியடைந்துள்ளனர். இம்மாணவர்களுக்கான உதவியை வழங்கிய புலம்பெயர் தமிழ் உறவுகளுக்கு குறித்த மாணவர்கள் சார்பாக நேசக்கரம் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறது. சிறந்த புள்ளிகளைப் பெற்ற மாணவர்களை ஊக்குவிக்கும் முகமாக அவர்களுக்கான … Read more

Posted in உதவிகோருவோர் விபரம், செய்திகள், October 7th, 2012, Comments Off on ‘நேசம்2012’ கல்வித்திட்டம் புலமைப்பரிசில் சித்தியடைந்த மாணவர்கள் விபரம் | nesakkaram